Search

ஷூ - சாக்ஸ்' வழங்க மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விபரத்துடன் பட்டியல் தர இயக்குநர் உத்தரவு.

Wednesday 11 March 2020


அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ - சாக்ஸ்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவ - மாணவியருக்கு, 14 வகை இலவச நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இலவச நோட்டு புத்தகம், பாட புத்தகம், காலணி, புத்தகப்பை, சைக்கிள், 'லேப்டாப்' உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலணிகள் வழங்குவதற்கு பதில், 'ஷூ - சாக்ஸ்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விபரத்துடன், அவர்களின் கால் பாதத்தை அளவிட்டு, பட்டியல் தர உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தொடக்க கல்வி இயக்குனர், பழனிச்சாமி அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One