Search

ஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Thursday 18 August 2022

ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்காக  தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல்த்துறை அமைச்சகத்தின் தாட்கோ நிறுவனம், Veranda RACE என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் சேர்ந்து இலவச பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தாட்கோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கான (IBPS CRP PO/MT CRP-XII) போட்டித் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது.   மிகவும் எதிர்பார்க்கப்படும் வங்கி தேர்வுகளில் ஒன்றாகும் இது உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வானது, 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 20 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த (BA, B.Com, BSc, B.Tech, etc)அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

22.08.2022ஆம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

இப்பதவிக்கான தேர்வு முறையானது 3 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview). முதல் நிலைத் தேர்வானது அக்டோபர் 15, 16, 22 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வானது 26 நவம்பர் 2022 அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு ஐனவரி/பிப்ரவரி 2023 அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.52,000/- முதல் ரூ.55,000/- வரை பெறலாம். இப்போட்டி தேர்வில் வெற்றி பெற்று வங்கியில் பணியமர வேண்டுமென Veranda RACE நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 


Official Website

Application link

Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »

IIM - TRICHY - RECRUITMENT - FOR NON TEACHING POSITIONS

Read More »

போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

 இந்திய அஞ்சல் துறையில் கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கிராம அஞ்சல் பணியாளர்களில் இருந்து தபால்காரர்கள், மெயில்கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 98,083


தபால்காரர் பதவிகளில் 58099 பணியிடங்களும், மெயில் கார்டு பதவிகளில் 1445 பணியிடங்களும், பல்வகைப் பணியாளர் பதவிகளில் 37539 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


இதில் தமிழ்நாடு வட்டத்தின் கீழ், தபால்காரர் பணிகளில் 6110 பேரும்,பல்வகைப் பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில்கார்டு பணிகளில் 128 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.


அடிப்படை தகுதிகள்: கணினி அறிவு, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளது.


இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.


தேர்வுப் பாடம், விண்ணப்பக் கட்டணம், தெரிவு முறை, வயது வரம்பு, விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படும் தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


தமிழ் நாடு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என்று சேர்க்கவும்


மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம்-2020-2021- 22.08.2022-25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிய வேண்டும் பத்திரிக்கைச் செய்தி

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம்-2020-2021


பத்திரிக்கைச் செய்தி


22.08.2022  முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிய வேண்டும்





Read More »
 

Most Reading

Tags

Sidebar One