Search

Tnpsc-tet சமூக அறிவியல் -குடிமையியல் -இந்திய அரசியலமைப்பு சார்ந்த சட்டங்கள் மற்றும் விளக்கங்கள்

Thursday 27 September 2018

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த விதிகள்
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946

2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946

3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி

4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்

5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்

6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா

8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4

10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299

11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து

12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22

14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு

15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24

16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947

17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு

18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை

20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்

21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு

22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395

23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450

24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12

25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)

26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு

27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்

28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950

29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949

30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்

31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10

32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் ஆப்ரிக்கா

35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா

37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்

39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947

40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு

41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)

43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5

51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6

52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1

55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2

56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3

57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4

58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5

59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6

60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8

61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9

62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A

63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18

64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20

65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1

66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை

67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை

68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985

69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை

72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை

73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை

74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை

75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை

76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18

77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29

78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று

81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14

82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து

83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15

85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்

86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்

87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17

88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16

89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18

90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19

91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21
92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23
93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24

94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24

95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை
96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை
97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை
98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30

99.மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.

100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து
Read More »

Tnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும் அவ்விதிகளுக்கான விளக்கங்களும்

அறிவியலில் இயற்பியல் சில முக்கிய விதிகளும் அதனை சார்ந்த விளக்கங்களும்

நியூட்டனின் விதிகள்

1. முதல் விதி:
ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.

2. இரண்டாம் விதி:
இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.

3. மூன்றாம் விதி:
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
எ.கா: *  பலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்
            *  நீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல்
            *  மனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல்
            *  நீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்
நீயூட்டனின் பொது ஈர்ப்பு விதி: 

அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.

நியூட்டனின் குளிர்வு விதி:

உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

மிதத்தல் விதிகள்(ஆர்க்கிமிடிஸ் விதி)

மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளின் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.
மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டுக்கும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.

பாஸ்கல் விதி:

மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.

பரப்பு இழுவிசை:

ஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.
எ.கா: நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது. மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.

பாகியல் விசை:

ஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.

பாயில் விதி:

மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.  PV = மாறிலி.

சார்லஸ் விதி:

மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.
ஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் அழுத்தம் அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.
வெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி:

மின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் வலிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.

கெப்ளர் விதிகள்:

முதல் விதி: கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.
இரண்டாம் விதி: கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பளவுகளை அலகிடுகிறது.
மூன்றாம் விதி: கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.

இராமன் விளைவு:

தூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது.

பெர்னெளவி தோற்றம்:

வரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தோற்றம்.

ஓம் விதி:

மாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் நேர்விகித்த்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். V = IR

ஆம்பியர் விதி:

ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.

ஃபிளம்மிங்கின் வலக்கை விதி:

வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.

ஃபிளம்மிங்கின் இடக்கை விதி:

இடகேகையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்டும்.

மின்காந்தத் தூண்டலின் விதிகள்:

ஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்த தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.

பாரடே முதல் விதி: மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.

பாரடே இரண்டாம் விதி:  ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.

லென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.
Read More »

Tnpsc-tet பொதுத்தமிழ் நூல்கள் மற்றும் அதனை சார்ந்த முக்கிய குறிப்புகள்

பொதுத்தமிழ் நூல்களும் அதனை சார்ந்த தகவல்களும்
1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

2.  தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
 வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
 வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - #திருக்குறள்

3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
 முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - #சிலப்பதிகாரம்

4.  இரட்டைக் காப்பியங்கள்-#சிலப்பதிகாரம்_மணிமேகலை

5.  நெடுந்தொகை - #அகநானூறு

6.  கற்றறிந்தார் ஏற்கும் நூல் - #கலித்தொகை

7.  பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - #மணிமேகலை

9.  புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - #புறநானூறு

10. வஞ்சி நெடும் பாட்டு - #பட்டினப்பாலை

11. பாணாறு - #பெரும்பாணாற்றுப்படை

12.  பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - #குறிஞ்சிப்பாட்டு

13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - #திருமுருகாற்றுப்படை

14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - #நாலடியார்

15.  சின்னூல் என்பது - #நேமிநாதம்

16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
 தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.  திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
 மூவர் புராணம் -பெரிய புராணம்

18.  ராமகாதை, ராம அவதாரம்,
 கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.  கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.  தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

22.  குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.  உழத்திப்பாட்டு - பள்ளு

25.  இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.  தமிழர் வேதம் - திருமந்திரம்

28.  தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 திருவாசகம்

29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.  பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.  திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.  தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.  96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.  கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.  தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.  வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.  64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.  இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.  இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.  நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.  பாவைப்பாட்டு – திருப்பாவை

49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
Read More »

202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்

202 உதவி ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து கணினி வழி விண்ணப்பங்களை வரவேற்கின்றது. விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (1.7.1990 அன்று அல்லது அற்கு பின்னர் பிறந்தவராகவோ, 1.7.1998 அன்று அல்லது முன்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும்).


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 30 வயது, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர் (பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5 வருடங்கள் காவல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்) 45 வயது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதியாக பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் 29.8.2018, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.9.2018 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அக்டோபர் 13.10.2018ம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலை... மிஸ்பண்ணிடாதீங்க..!


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ள இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 46 

பதவி: Manager(Electrical) - 1
பதவி: Manager(Mechanical) - 1
சம்பளம்: மாதம் ரூ.61900-196700

பதவி: Deputy Manager(Process &Quality Assurance ) - 1
பதவி: Deputy Manager (Instrumentation) - 1
பதவி: Deputy Manager(Finance) - 1
சம்பளம்: மாதம் ரூ.59300 - 187700

பதவி: Assistant Manager(Materials) - 1
பதவி: Assistant Manager(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500

பதவி: Executive(Mechanical)Lime Stone Crusher - 2
பதவி: Executive(Mechanical) Raw mill - 3
பதவி: Executive (Mechanical) Kiln - 3
பதவி: Executive(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.36200 -114800

பதவி: Accountant -1
பதவி: CCR Operators-Plant/Lime Stone Crusher - 7
பதவி: Shift Chemist - 3
பதவி: X- Ray Analyst - 3
சம்பளம்: மாதம் ரூ.35600 -112800

பதவி: Electrician -  4
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570

பதவி: Instrument Mechanic  - 4
சம்பளம்: மாதம் ரூ. 4930 -82-6570

பதவி: Personal Assistant - 2
சம்பளம்: மாதம் 19500 - 62000

பதவி: Junior Assistant (Materials) - 1
பதவி: Junior Assistant (EDP) - 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பதவி: Time Keeper - 2
சம்பளம்: மாதம் ரூ. 4920-82-6560

பதவி: Driver - 2
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570

தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2018
Read More »

Tnpsc-tet study materials பொதுத்தமிழ் முக்கிய குறிப்புகள்

 பொதுத்தமிழ் முக்கிய  குறிப்புக்கள்
1. ஆளுடைய அரசு - திருநாவுக்கரசு
ஆளுடைய அடிகள் - மாணிக்கவாசகர்
ஆளுடைய நம்பி- சுந்தரர்
ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்

2. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் - பிச்சமூர்த்தி

3. மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் -- திருமங்கை ஆழ்வார்

4. உரை வேந்தர் - ஒளவை.சு.துரைசாமி

5.இறையனார் களவியல் உரை -- நக்கீரர்

6. முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் -- 1930 - கா.சு.பிள்ளை

7. கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் -- தைப்பாவை

8. தமிழ் மொழியின் உபநிடதம் -- தாயுமானவர் பாடல்கள்

தமிழர் வேதம் -- திருமந்திரம்

9. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) -- குட்டித்திருவாசகம்

10. நெஞ்சாற்றுப்படை -- முல்லைப்பாட்டு

வஞ்சி நெடும்பாட்டு -- பட்டினப்பாலை

11. தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் -- சீகன்பால்கு

12. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் -- மணிமேகலை ( பெளத்தம் )

13. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் -- கால்டுவெல்

14. ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் -- அப்துல்ரகுமான்

15. வைணவத்தின் வளர்ப்புத் தாய் -- இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )

16. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

17. இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் -- குணங்குடிமஸ்தான்

18. தமிழிசைச் சங்கம் நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியார் 1940

19. தொன்னூல் விளக்கம் -- குட்டித்தொல்காப்பியம் -- வீரமாமுனிவர்

20. " ஆதி உலா " எனப்படுவது திருக்கைலாய ஞான உலா -- சேரமான் பெருமான் நாயனார்

21. மணிக்கொடி , சரஸ்வதி , எழுத்து ஆகிய நூல் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ் இதழ்கள்

22. மாசில் வீணையும் மாலை மதியமும் -- 4,5,6 திருமுறைகள் -- திருநாவுக்கரசர் ( அப்பர் , வாகீசர் , தாண்டகவேந்தர் , மருள்நீக்கியார் )

23 . மந்திரமாவது நீறு -- திருஞானசம்பந்தர்

24. மானவிஜயம், கலாவதி, ரூபாவதி நாடகங்கள் ஆசிரியர் -- சூரிய நாராயண சாஸ்திரி ( பரிதிமாற் கலைஞர் )

25. அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் -- தேவநேயப் பாவாணர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One