Search

இணையவழி வகுப்புகளை முறைப்படுத்த மத்திய அரசு முயற்சி

Tuesday 16 June 2020

வீடுகளிலிருந்து இணையவழி வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவா்களின் சிரமங்களை நீக்குவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்பறைகள் மூலம் கற்பிப்பது கட்டாயமாகியுள்ளது. அதே சமயத்தில் பள்ளிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் இணையவழி கற்றலில் மாணவா்கள் அதிக நேரம் மின்திரைக்கு முன் அமா்ந்திருப்பது குறித்த புகாா்களை பெற்றோா்கள் தெரிவிக்க இதற்கான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க மத்திய மனித மேம்பாட்டுத்துறை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது

இந்த இணையவழி கற்றலில் பல்வேறு அனுபவங்கள், திட்டங்கள், உருவாக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையில் ஆலோசனை நடைபெற்றது. இது குறித்து அரசு வட்டாரங்களில் கூறப்பட்டதாவது:

சில வீடுகளில் ஒரு அறிதிறன் செல்லிடப்பேசி மட்டும் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் இருக்கும் நிலையில், அத்தகைய மாணவா்கள் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா்.

முன்பு பள்ளிகளில் மாணவா்கள் செல்லிடப்பேசி வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இதன் பயன்பாடு ஊக்குவிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் தற்போது திடீரென நாள் முழுக்க செல்லிடப்பேசி போன்ற மின்னணு சாதனங்களை நம்பித்தான் கற்பித்தல் என்கிற நிலையில், இதை சமநிலைப்படுத்த வேண்டும்.

இதில் பல்வேறு தரப்பினரை கலந்தாலோசித்து நடைமுறைகள் உருவாக்கப்படும். நீண்ட நேரம் மாணவா்கள் மின்னணு சாதனங்களுக்கு முன்பு அமா்ந்திருப்பதை தவிா்க்க, இணையவழி கற்பித்தலுக்கு குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்படும்.

கண்டிப்புடன் இருக்கும் வகுப்பறை கல்வியைவிட இணையவழிக் கல்வி மாணவா்களை அமைதியான முறையில் வேகமாக கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

பயிற்றுவிப்பு சாதனங்களைப் பொருத்தவரை, சிலருக்கு மின்னணு சாதன வசதிகள் இருக்கும்; சிலரிடம் வெறும் வானொலி மட்டுமே இருக்கும்; சிலரிடம் அது கூட இருக்காது. இதுபோன்ற நிலைக்கு தீா்வு காண வேண்டும்.

இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களது மனநலன், இணைய பாதுகாப்பு பிரச்னைகளை நிவா்த்தி செய்வது, பாதுகாப்பான கற்றல் சூழல் ஆகியவை இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உறுதி செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன
Read More »

ரூ .22,700 முதல் ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

ரூ .22,700 முதல் ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை


சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.

இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம் (TNRD)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வயது வரம்பு :

18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதியம் : ரூ.22,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண் - 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.
Read More »

ரூ .19,500 முதல் ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

ரூ .19,500 முதல் ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை


சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது. 

இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம் (TNRD)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஈப்பு ஓட்டுநர்

கல்வித் தகுதி:

8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 40, பிற்படுத்தப்பட்டோர் 30, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண் - 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.
Read More »

Plus Two - மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்



அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் பாடங்களுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் பாடங்களுக்கான மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக்கடிதத்தினை ( Willing Letter ) 24.06.2020 தேதிக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் . அக்கடிதத்தில் மாணவரது பெயர் , தேர்வெண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வெண் வாரியாக அடுக்கி 26.06.2020 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
Read More »

வரும் கல்வி ஆண்டில் 30 % பாடத்திட்டம் குறைப்பு! பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை 30. சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்டில் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடங்களிலும் 30 சதவீதம் குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரி யர்கள் , பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்டகல்வி பயிற்சி நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒருகுழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் எந்தெந்த பாடங்களை குறைக்கலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வார்கள். ஒவ்வொருபாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியோ அல்லது முக்கியத்துவம் இல்லாத பகுதியோ நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆசிரி யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பாடத்தையும் ஆய்வு செய்து குறைப்பதற்கென்று 100 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களது பரிந்து ரைகளை ஜூன் 3 - வதுவாரத்தில் கல்வித்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளார்கள். ஏற்கனவே புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆகவே முழுபாடத்திட்டங் களும் அவற்றில் இருக்கும் . தேவையற்ற பகுதி எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே அந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆசிரியர்கள் நடத்துவார்கள்.
Read More »

10ஆம் வகுப்பு : அறிவியல் பாடத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கணக்கீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.

10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு அரசு தேர்வு இயக்ககம் உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களுடன் அசல் மதிப்பெண் பதிவேடு, PROGRESS REPORT CARDயும் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22 முதல் 27க்குள் விடைத்தாள்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட வினாத்தாள் உள்ளிட்ட ஒருசில நகல்களை பள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அரசு தேர்வுக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கான முகப்புத்தாளை (TOPSHEET ) இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்ணுகளுக்கு கணக்கிட வேண்டும. மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு கடந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்கம் அறிவித்துள்ளது.
Read More »

பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்

ந.க.எண்‌.4028/ஆ6/2020 நாள்‌.16.06.2020

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - சென்னை மாவட்டம்‌ - கொரானா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்‌ - அனைத்து வகைப்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்‌ - சார்ந்து, எண்‌.213, நாள்‌.15.03.2020 மற்றும்‌ செய்தி குறிப்பு எண்‌.031, நாள்‌.16.03.2020. 2. அரசாணை நிலை (எண்‌) 152, சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலம்‌ (பிர துறை நாள்‌.23.03.2020 நாள்‌.25.03.2020 ந.க.எண்‌.014598/பிசி/2020 நாள்‌.25.03.2020



பார்வை 3 இல்‌ காணும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பின்படியும்‌, பார்வை 4 இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படியும்‌ அனைத்து வகை பள்ளிகளில்‌ பயிலும்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்‌ தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால்‌



இக்கல்வியாண்டில்‌ (2019-2020) அனைத்து வகை பள்ளிகளில்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என ஏற்கனவே ற்றறிக்‌ ப்பப்பட்டுள்ளது.

தங்கள்‌ பள்ளித்‌ தேர்ச்சி பதிவேட்டில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இ ப்பு: பன்னிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித நகக்‌ சென்னை.

பெறுநர்‌
1. அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.
2. அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.

நகல்‌
1. பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து ப்பப்படுகி

2. கல்வி அலுவலர்‌, சென்னை மாநகராட்சி, சென்னை-03 அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
Read More »

பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு.




DGE Instructions - Download here...

2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிகான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது எனவும் , மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரிர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Read More »

Flash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 1806.2020 க்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும் . அவற்றை மாவட்டக் கல்வி அலுவலர்கள் 22.062020 முதல் 30.062020 க்கு முன்னர் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக தனியார் வாகனம் மூலம் தனியார் வேலையாட்களை வைத்து நேரடியாக அந்தந்த வழித்தடங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் . சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை முதல் வாரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

2 மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து வழங்கவிருக்கும் பாடநூல்களை கொண்டு செல்லும்போது தலைமையாசிரியரை பள்ளியில் இருக்க அறிவுரைவழங்க வேண்டும்.

3. மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளியில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து கொள்ளவேண்டும். குறைவாக பெறப்படுமாயின் அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

4. இப்பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து செலவினங்கள் இவ்வியக்ககம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

5. மேற்காணும் பொருட்களை தனிநபர்களை வைத்து வாகனத்தில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியின் போது சரியான எண்ணிக்கையில் விநியோகம் செய்வதை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களை ஒவ்வொரு வாகனத்துடனும் அனுப்பிட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா நோய்தொற்று ஏற்படாதவகையில் சமூக விலகலைக் கடைபிடித்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவதுடன் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவதை முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கண்காணிக்குமாறும் , அனைத்து முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காணும் அறிவுரைகளின்படி செயல்பட்டு பள்ளிகளுக்கு நேரடியாக விலையில்லா பாடநூல்கள் , பள்ளியிலேயே விநியோகம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் 22.06.2020 முதல் விநியோகம் செய்யும் பணிகளை துவங்கி 30.06.2020 க்கு முன்னர் அனைத்து விலையில்லா பாடநூல்கள் , நோட்டுப் புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு சென்றடைந்துவிட்ட விவரத்தை 01.07.2020 அன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை பணிந்தனுப்பவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More »

பெற்றோர் கவலைக்குத் தீர்வு: ஆன்லைன் வகுப்புகளுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்: மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தீவிரம்


கணினி முன்பும், ஸ்மார்ட்போன் முன்பும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் அமர்ந்திருப்பது குறித்த பெற்றோர்களின் கவலையை அறிந்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளன.

ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் முடியாமல் இருந்து வருகிறது.சிபிஎஸ்இ பிரிவிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் நடக்காமல் இருந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே அடுத்த கல்வியாண்டும் தொடங்கிவிட்டது. ஆனால் இதுவரை கல்வியாண்டு தொடங்கிவிட்டதாக மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன

ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டதிலிருந்துதான் பெற்றோருக்குப் பெரும் கவலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பள்ளிக்கு நேரடியாகச் செல்லும்போது குறிப்பிட்ட நேரம்தான் குழந்தைகள் வகுப்பில் இருப்பார்கள். ஆனால், ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து குழந்தைகள் எந்நேரமும் செல்போன் முன் அமர்ந்திருப்பதும், கணினி முன் அமர்ந்திருப்பதும் பெற்றோருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்குச் சிறிதுகூட ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருவதாக பெற்றோர் தரப்பில் மனித வளத்துறை அமைச்சகத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான புகார்கள் சென்றன. ஆன்லைன் வகுப்புகளை வரைமுறைப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட நேரம் வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் பொருட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும் பணியில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துவதால் குழந்தைகள் செல்போன் முன்பும், கணினி முன்பும் அமரும் நேரம் குறித்து ஏராளமான புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஒருபுறம் பள்ளிகள் தங்கள் எல்லைக்குள் மாணவ, மாணவிகள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு போட்டு, செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வலியுறத்துகிறார்கள்.ஆனால், இப்போது ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மணிக்கணக்கில் குழந்தைகளை அதே செல்போன் முன் அமரவைக்கிறார்கள். இந்த இரு அம்சங்களுக்கும் இடையே நடுநிலைத்தன்மை வேண்டும்.

பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கையால் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வருகிறோம். நீண்டநேரம் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் பங்கேற்காமல் குறிப்பிட்ட நேரம் மட்டும் பங்கேற்றால் போதுமானது என்ற வகையில் நேரக் கட்டுப்பாடு கொண்டுவரப்போகிறோம்.

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு ஒரு வசதியை அளிக்கிறது. கடினமான சூழலில் வகுப்புகளில் அமர்ந்து படிப்பதை விட, மாணவர்களை அவர்களின் போக்கில் படிக்க ஆன்லைன் வகுப்புகள் துணைபுரிகின்றன. ஆனால், அதற்கு வரையறைகள் அவசியம்.

சில வீடுகளில் ஒரு செல்போன் மட்டும் இருக்கும். அதை வைத்துக் குழந்தையும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று ஏதாவது அழைப்பு வந்தால் பேசிக்கொள்ளும் சூழலும் பெற்றோருக்கு சிரமத்தைத் தருகிறது என்பதை அறிகிறோம்.

அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் மனநலன், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பற்ற சூழலில் பயன்படுத்துதல், ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றையும் அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால், விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியாகும்' எனத் தெரிவித்தார்.
Read More »

இணைய வழியில் கணிதப் பயிற்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜூன் 22-ஆம் தேதிமுதல் 10 நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 வெள்ளிக்கிழமை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு கணித ஆசிரியா்களை திறன் மிக்கவா்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்புப் பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சி வரும் ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் www.eboxcolleges.co என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தப் பயிலரங்கில் கணிதத்தில் வளரும் துறைகளான தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, பொறிக்கற்றல்-, அறிவியல் பூா்வ கணித்தலியல் என பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதால், அதில் பங்கேற்க அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோந்த முதுநிலை கணித ஆசிரியா்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனா்.

இதுவரை 2,079 ஆசிரியா்கள் பதிவு:

இது குறித்து அதிகாரிகள் கூறியது:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கணினி அறிவியல் பயிலரங்கில் அந்தப் பாடப் பிரிவைச் சோந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா். இந்தப் பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் தற்போது இணையவழி கணிதப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இணையவழி கணிதப் பயிற்சிக்கு இதுவரை 2,079 கணித ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த பயிலரங்கு தினமும் 8 மணி நேரம் நடைபெறும். 10 நாள் பயிலரங்கு முடியும்போது, ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ் நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு, திறமையான மாணவா்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பாா்கள். ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை 'ஈபாக்ஸ்' நிறுவனம் வழங்கும்.

இந்தப் பயிற்சி தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 94420 19192 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்
Read More »

பள்ளி மேலாண்மை குழுக்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க கோரிக்கை


சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பயன்படுத்த முடியாமல் கல்வி அதிகாரிகளே குறுக்கீடு செய்வதாக மாணவர்கள் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

 தமிழகத்தில் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி(சமக்ர சிக்‌ஷா) திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளில் தேவைக்கேற்ப எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை இந்தக் குழு முடிவு எடுக்கும். பள்ளிக்கு அளிக்கப்படும் இத்தகைய ஒருங்கிணைந்த கல்வி நிதிகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், பொருளாளர் பெயரில் வங்கியில் கூட்டுக் கணக்காக பராமரிக்க வேண்டும். பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவது, நாப்கின் எரியூட்டிகள்(ரூ.32000) வாங்க, ஆங்கில ெமாழிப் பயிற்சி நூல்கள் வாங்க நிதி அந்த நிதி ஒதுக்கப்படுகிறது.


 இந்த நிதியை பள்ளி மேலாண்மை குழுவில் உள்ளவர்கள் நேரடியாக வாங்க முடியாது. ஆனால் குழுக்களே வாங்கியதாக தீர்மானம் போட்டு, தேதி  குறிப்பிடாத காசோலை ஒன்றை நாங்கள் குறிப்பிடும் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பள்ளி மேலாண்மைக் குழுவை அமைத்துவிட்டு அதன் அதிகாரங்களை பள்ளிக் கல்வித்துறை கையில் எடுத்துக் கொண்டு மேலே இருந்து பொருட்களை வாங்குபவர்கள் யார் அவர்களுக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது, அதற்கான பேரங்கள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் மேலாண்மைக் குழுக்கள் ரப்பர் ஸ்டாம்புகள் போல செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்
Read More »

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடக்கம்


நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7,500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சியை E-Box நிறுவனம் வழங்குகிறது.
Read More »

கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!



மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய தர வரிசை பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உயர்கல்வி பட்டியலில் கடந்த ஆண்டு பெற்று இருந்த  21-வது இடத்தினை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர், ‘உயர்கல்வி துறையில் 21 வது இடத்தை தக்கவைத்து  இருந்தாலும், அகில இந்திய அளவில் பல்கலைக்கழக அளவில் 14 வது இடத்தில் இருந்து  13 வது இடத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது என தெரிவித்தார். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கூட்டு முயற்சியும் சரியான ஒருங்கிணைப்புமே காரணம் என்று தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை தமிழக அரசிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என தெரிவித்த அவர், கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் 6 மாதம் பின்னடைவு இருக்கும் என தெரிவித்தார். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவ வேண்டிய நேரம் எனவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 16 ) மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 16.06.2020 ) இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 919   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 15.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள :
Read More »
 

Most Reading

Tags

Sidebar One