Search

CPS திட்டத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உண்டு - மத்திய அரசு !!

Tuesday 18 February 2020

CPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு Central civil service(pension) rule 1972 ன்படி பணிக்கொடை உண்டு. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

Read More »

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Read More »

இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள், புதன்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடைபெறவுள்ள மாா்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித் தேர்வா்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, புதன்கிழமை (பிப்.19) பிற்பகல் முதல் h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.t‌n.‌go‌v.‌i‌n/ எனும் இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1 அரியா்) மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வா்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். ஏற்கெனவே எழுத்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவா்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகையிலான தேர்வா்கள் மீண்டும் எழுத்துத் தேர்வெழுத வேண்டாம். ஏற்கெனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவா்கள் தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டும்.


செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வா்கள், எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்களுக்கு முன்னரே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read More »

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19-02-2020

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
19-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 816
அதிகாரம் : தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 

 ஏதின்மை கோடி உறும்.
பொருள்:

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி


நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
 - அப்துல்கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

A bird in hand is worth two in the bush.


கிடைக்கப்போகும் பலாக்காயினும், கையிலிருக்கும் களாக்காய் மேல்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Agriculture - வேளாண்மை

1. Bund - கரைமேடு
2. Barren Land - தரிசு நிலம்
3. Canal - கால்வாய்

4. Clay - களிமண்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.முதன் முதலில் தமிழகத்துடன் வாணிபம் செய்தவர்கள் யார் ?

கிரேக்கர்கள்

2. பரம்பிக்குளம் திட்டம் எந்த மாவட்டத்தில் உள்ளது?


கோயம்புத்தூர்
✡✡✡✡✡✡✡✡
Daily English

Tri-syllabic words
1. attention - at-ten-tion
2. attitude - at-ti-tude
3. candidate - can-di-date

4.citizen- cit-i-zen
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

கோழி

🐓 கோழி என்னும் பறவை காடுகளிலும், வீடுகளிலும், கோழிப்பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும்.

🐓 கோழிகள் பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதிகளில் இருந்த சிவப்பு காட்டுக்கோழி மற்றும் சாம்பல் காட்டுக்கோழிகளிலிருந்து வந்தவை ஆகும்.


🐓 கோழிகளில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது.

🐓உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் இருந்து தான் தோன்றியதாக கூறப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

சூடான சூப்

ஒரு நாள் முல்லா நண்பர்கள் பலருடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் அக்கூட்டத்தில் வெளியூர் நண்பர்களும் சிலர் அமர்ந்திருந்தார்கள். நண்பர்களில் ஒருவர் மட்டும் எழுந்து வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.

முல்லாவைப் பற்றி அளவுக்கு அதிகமாக பாராட்டி பேசிய நண்பர், முல்லாவுக்கு தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார். அதனைக் கேட்ட வெளியூர் நண்பர்களில் ஒருவர் எழுந்து முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா? என்று கேட்டார்.

முல்லா, தனது அறியாமை காண்பித்துக் கொள்ளக் கூடாதே என்று குந்தீஷ் மொழி தெரியும் என்றார். மேலும், அந்த மொழியில் இரண்டொரு சொற்கள் தெரியும் என்றார். குந்தீஷ் மொழியில் ஏதேனும் ஒரு சொற்களைக் கூறுங்கள் என்றனர். குந்தீஷ் மொழியில் ஆஷ் என்றால் சூடான சூப் என்று பொருள் என்றார் முல்லா. ஆறின சூப் என்பதற்கு குந்தீஷ் மொழியில் என்ன சொல்வார்கள்? என்று ஒருவர் கேட்டார். உடனே, முல்லா தனக்கு குந்தீஸ் மொழி தெரியாது என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக பேச ஆரம்பித்தார்.

முல்லா, நண்பரே! குந்தீஷ் மொழியினர் எப்போதும் சூடான சூப்பைத்தான் சாப்பிடுவார்கள். ஆறின சூப்பே அவர்களுக்கு பிடிக்காது. அதனால் அவர்கள் மொழியில் ஆறின சூப் என்பதற்கு எந்தச் சொல்லும் கிடையாது என்று கூறி சாமர்த்தியமாக சொல்லி சமாளித்தார்.

நீதி :

சாமர்த்தியமாக செயல்பட்டால் எப்படிப்பட்ட சூழலிலும் தப்பிக்க இயலும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.

🔮ஓடும் ரெயிலில் சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல முட்டாள்தனம் என மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

🔮இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

🔮கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது.

🔮கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் வருகிற 21-ந் தேதி நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிறார்.

🔮விளையாட்டு உலகின் மிக உயரிய விருதான லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

🔮பண்டிட்டுகளுக்காக புதிய 10 சிறப்பு நகரங்கள்: இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும்...உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.


🔮இந்திய கடற்பகுதியை கண்காணிக்கும் விதமாக தனுஷ்கோடியில் அமையும் புதிய கலங்கரை விளக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர்!!
HEADLINES

🔮Sub group of terror financing watchdog FATF recommends continuation of Pakistan in ‘Grey List’.

🔮CHENNAI: NGT pulls up Tamil Nadu’s local bodies for failing at waste management.

🔮Terror launch pads in PoK ‘full’, but our response hard and punishing: Lt. Gen. Dhillon.

🔮More Tatkal tickets for passengers now as railways roots out illegal softwares.


🔮IDSA renamed Manohar Parrikar Institute for Defence Studies and Analyses.
Read More »

DSE - மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

01.06.2020 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! 

Read More »

1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்ப றையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப் பட்டுள்ள நிலை யில் இதனை தமிழகம் முழுவ தும் செயல்படுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ் வாறு கவனம் செலுத்து கிறார்கள் என்பதை கண் காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது . இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்ற கற்றல் விளைவு அடைவு நிலைகள் கண்காணிக்கப்ப டுகிறது . இதன் ஒரு பகுதியாக வகுப்பறை கற்றல் - கற்பித் தல் நிகழ்வுகளை உற்று நோக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது . மேலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங் களை பயன்படுத்தி பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆய்வு அலுவ லர்களும் , வகுப்பறை நிகழ் வு களை உற்று நோக்கும் வகையிலும் ' தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செய லி ” ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது . ' அப்சர்வேசன் மொபைல் ஆப் ' எனப்ப டும் இந்த செயலி ஆண்ட் ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகை யில் உள்ளது .

இந்த ஆப் சென்னை மற்றும் திரு வண்ணாமலை மாவட் டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது . தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ் வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற் றம் அடையச்செய்ய எளி மையாக இருக்கும் . கற்றலில் பின் தங்கி யுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறது என சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் . இது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செயலியின் உப யோகத்தை உடனடியாக கொண்டு செல்ல ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது .

இது தொடர்பாக சென்னை , திருவண்ணா மலை தவிர இதர 30 மாவட்டங்களுக்கு இந்த செயலியை பயன்படுத் தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது . வட் டாரவளமைய அளவிலும் , கணினி தொழில்நுட்பத் தில் நன்கு கற்றுத்தெரிந்த மொபைல் போன் நன்றாக பயன்படுத்துகின்ற ஒரு ஆசி ரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது .

இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக மாணவர் களின் வகுப்பறை செயல் பாடுகளை மொபைல் ஆப் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கல்வித்துறை வட் டாரங்கள் தெரிவித்தன .
Read More »

பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.

 10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில், 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில், 8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கூடுதலாக 10ஆம் வகுப்பில் 23 ஆயிரத்து, 230 பேரும், ஆம் வகுப்பில் 39 ஆயிரத்து 164 பேரும் தேர்வு எழுதுகின்றனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு, 10,12 ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One