தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில், 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில், 8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கூடுதலாக 10ஆம் வகுப்பில் 23 ஆயிரத்து, 230 பேரும், ஆம் வகுப்பில் 39 ஆயிரத்து 164 பேரும் தேர்வு எழுதுகின்றனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு, 10,12 ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Search
பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!
Tuesday, 18 February 2020
Tags:
10,
11,
12 th public exam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment