Search

EMIS - Udise+ HM Declaration எளிய முறையில் செய்வது எப்படி? - Video

Friday, 29 May 2020


Read More »

பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு

பள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம்நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.

பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More »

TEACHERS WANTED.

Wanted PGT / BT / TGT Teachers
FOR ALL SUBJECTS which includes PET, Yoga, Karate & Silambam Applications are invited from Experienced Teachers of renowned English Medium Schools.

Fluency in Spoken English is a prerequisite. The interested candidates with Qualification or expertise in the relevant flelds/subjects may submit their credentials in person to, THE PRINCIPAL on or before May -31, 2020.

Interview date will be intimated later. SACRED HEART MAT. HR. SEC. SCHOOL No.7, K.V.R NAGAR, NEYVELI-2
For Details: 63692 26336, 63827 78797, sacredheartschooljobs@gmail.com
Read More »

12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை அறிவிப்பு


12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 7,400 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.

12ம் வகுப்பு தேர்வெழுதும் 36,089 மாணவர்கள் முந்தைய தேர்வு மையங்களில் எழுதலாம் எனவும் கூறியுள்ளது.
Read More »

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - வெற்றிக்கான வழிகாட்டி கையேடு.


வணக்கம் ,

வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் தேர்வு பயம் , ஆர்வமின்மை , இந்த கொரோனா நோய் தொற்று பேரிடர் , போன்ற பிரச்சனைகளை கடந்து , ஊரடங்கில் எவ்வாறு கவனத்தோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு மனநலன் சார்ந்த பயனுள்ள கருத்துகளைக் கொண்ட இந்த கையேட்டை தன்னுடைய நேரத்தையும் , சிந்தனையையும் செலவு செய்து மாணவர்கள் நலம் கருதி , நமது தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் மூலம் வெளியிடும் பேராசிரியர் கு.சின்னப்பன் , பதிவாளர் ( பொ ) , தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் அவர்களுக்கும் மற்றும் அவர் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவிற்கும் தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


SSLC Public Exam - Special Winning Guide - Download here...
Read More »

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.57,53,67,000 மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடங்கள் திறப்பு குறித்து செய்தி வெளியீடு

Read More »

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கி அமைச்சர் திரு செங்கோட்டையன், மாநிலத் திட்ட இயக்குனர் பாராட்டு

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தோடு கடந்த சில ஆண்டுகளாக நவீனத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் சில செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.


அதில் மிக முக்கியமானது தமிழ்நாடு ஆசிரியர் முகமை மற்றும் தீக்‌ஷா எனப்படும் தொழில்நுட்பங்களாகும்.


இவை இரண்டின் மூலமும் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்துக் கொள்ளவும், தேவையான பாடத் திட்டங்களை பெற்று தங்களுடைய கற்பித்தலை வளப்படுத்திக்கொள்ளவும்,
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் இது மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் தீக்‌ஷா தொழில்நுட்பத்தை இந்திய அளவில்
அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும், மாநிலம் முழுக்க இருக்கின்ற திறமைவாய்ந்த தொழில்நுட்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று உள்ளீடு செய்வது வரையிலான கல்வி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலைஆசிரியர் சதீஷ் என்பவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.





இவரது சீரிய பணியை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரது முன்னிலையில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு சுடலைகண்ணன் ஐஏஎஸ் அவர்கள் *Certificate of Excellence* என்கிற விருதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களது கரங்களால் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.

இதுகுறித்து ஆசிரியர் சதீஷிடம் கேட்டபொழுது,  இது  மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த விருதாகக் கருதுகிறேன் எனச் சொல்லி மகிழ்ந்தார் 
Read More »

மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

புதுக்கோட்டை,மே.29:10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள்,தேர்வை தள்ளி வைக்காமல் தேர்வை நடத்தினால் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் என  தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ள நிலையில், நமது இந்திய தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்,  மக்கள் பாதுகாப்பில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த வந்த தமிழக அரசு தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நேரத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.

பள்ளி மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் ஆகியோருடைய நலன்களைக் கருதி மக்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கின்ற அரசாங்கம், இன்னும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத சூழலில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் தொற்றுநோய் சூழ்ந்திருக்கும் , சமூகப்பரவலாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நடத்த முன்வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய அழுத்தம் இருப்பினும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசே அழுத்தம் கொடுத்தாலும்,
ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது சாதாரண விஷயம் அல்ல. தோராயமாக 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு நடத்தப்பட வேண்டிய விசயமாகும்.  இயன்றவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடிய முடிவினை கைவிட வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் கூட,
அவசியம் நடத்தியே தீர வேண்டுமென அரசாங்கம் நினைத்தால் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தேர்வை நடத்த திட்டமிடலாம். ஆனால் முதல் மூன்று வாரங்கள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற வேண்டும். தனது ஆசிரியர்களை வகுப்பறையில் சந்திக்காமல் நேரடியாகத் தேர்வறையைச் சந்திக்கும் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.
உளவியல் ரீதியாக மாணவர்களிடம் பல்வேறு சிக்கல்களை இந்த கொரோனா ஏற்படுத்தி இருக்கும். அவற்றைக் களையாமல் தேர்வறைக்கு அனுப்புவதென்பது சரியான செயலாக இருக்காது.



ஆனால் அதேநேரத்தில் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும்,
தேர்வுப்பணியில் ஈடுபடக் கூடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழக அரசு தாமாகவே முன்வந்து அரசு சிறப்பு மருத்துவக் காப்பீடு செய்வதுடன், தேர்வில் பங்கேற்ற பிறகு, மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ கொரோனா  தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்ச ரூபாயை வழங்குவதுடன்,
உயிர்பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்கிற அரசு உத்தரவு அறிவித்துவிட்டு,
தேர்வை நடத்த திட்டமிடுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். இது மனரீதியாக அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும்.

எனவே இதுகுறித்து உரிய ஆலோசனை செய்து, தக்கமுடிவு எடுக்கும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
Read More »

Easy English ... Jolly English..Unit 1 Teaching of English by Phonetic Method




ஐயப்பன் என்ற தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரின் சீரிய உழைப்பாலும்,பயிற்சியாலும் உருவான தொகுப்பே இம்முறை.
திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது.



கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள்.
       அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம்.


தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான்.

ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான  வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை.


தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.


எனது பக்கபலமான தொழில்நுட்பக் கலைஞர்களோடு களம் இறங்கினேன்.அந்தோணி,ஜான்  கேமரா.வின்சி அண்ணன் எல்லா வித உதவிகளும் செய்தார்.


ஒரு சினிமா எடுக்க என்னென்ன விஷயங்கள் தேவையோ அந்த தொழில்நுட்பத் தரத்தை மனதில் கொண்டு,குழந்தைகளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்ற ஈடுபாட்டோடு ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக இருந்தோம்.


அனுபவம் ஒவ்வொரு நாளும் தொடரும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே உதவி தான்.எப்படியெல்லாம் பகிர முடியுமோ எல்லோருக்கும் பகிருங்கள்.


இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ஆசிரியர்களின் உழைப்பினாலும்,தியாகத்தினாலும் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.முதல் நன்றிகள் இவர்களுக்கும்,ஐயப்பன் மற்றும் அமலன் ஜெரோம் ஆசிரியர்க்கும்...


Phonetic method -இன் முதல் unit இது




இந்த முதல் அத்தியாயத்தை நீங்கள் பார்ப்பதற்காய் ஆறு மாதத்திற்கும் மேலான பலருடைய உழைப்பு பின்புலமாய் இருந்துள்ளது...


அப்படி ஆறு மாதமாய் என்னத்த திட்டமிட்டீர்கள் என்று கேட்பவர்களுக்காய்...

நிறையக் கேள்விகள் எங்களுக்குள்...
கேமரா வைக்குமளவுக்கு அறை நீளமாக வேண்டுமே,சுவற்றில் flex வைப்பதா அல்லது ஓவியம் வரைவதா?
Flex வைத்து reflect ஆனால் என்ன செய்ய? எனவே ஒரு இடம் விடாமல் ஓவியம் வரைய முடியுமா?


அவ்வளவு பெரிய அறைக்கு lightings எப்படி arrange பண்ணுவது?
எல்லா சன்னல்களையும்,கதவையும் அடைத்தால் தான் lightings சீராக இருக்கும். அப்படியென்றால் 10,000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் நடிக்கும் ஆசிரியர்கள் தாங்குவார்களா?
ஒவ்வொரு ஆசிரியர்களும் தினசரி அதிகாலை ஒவ்வொரு இடத்திலிருந்தும் பல கிலோ மீட்டர் பயணித்து வர வேண்டும், மாலை தான் படப்பிடிப்பு முடிந்து செல்ல வேண்டும், 4 மாதம் இப்படியே தொடர்ந்து வருவார்களா?
Script முழுக்க முழுக்க ஆங்கிலமா அல்லது
தமிழா அல்லது இரண்டும் கலந்துமா?
ஆசிரியர்களுக்கு எது புரியும்? குழந்தைகளுக்கு எது படிக்கப் பிடிக்கும்?
Screenplay ல் ஒரு தொய்வில்லாமல் dialogue எப்படி எழுதுவது?
நெல்லிக்குப்பம் ஊருக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் 30 கிலோ மீட்டர். சின்ன இடையூறின்றி தினசரி குழந்தைகளை யார், எப்படிக் கூட்டி வருவது?


எல்லா ஆசிரியர்களையும் ஒரே மாதிரியான சேலை 2 எடுக்கச் சொல்லி,எடுத்து விட்டார்கள்? 4 மாதங்கள் ஒரே சேலை தினசரி உடுத்துதல் சாத்தியமாகுமா?
தரையில் உட்கார வைத்தா?chair போடுவதா?
தரையில் என்ன விரிக்க?விரிப்புக்கு என்ன செய்ய?
4 மாதங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் சாப்பாட்டுக்கு எப்படி ஏற்பாடு செய்வது?தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கி,சாப்பிட என்ன செய்வது?
தினசரி அனைத்தையும் காலை தயார் செய்ய வேண்டும்.மாலையில் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இதற்கு என்ன பண்ணுவது?
Live sound recording-ல் நாய் குலைத்தால் கூட Re-take எடுக்க வேண்டும். சாத்தியமாகுமா?

இப்படி சின்னச்சின்னக் கேள்விகள். கேள்விகள் சிறிதாயினும் நடைமுறையில் இது எவ்வளவு பிரச்சினை என்பதை அணு அணுவாய் அனுபவித்தோம்.

ஒரு நாளில் இது சுலபம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினம் என்று தெரிந்தும் போராடினோம்.
விளைவு முதல் unit தற்போது நீங்கள் பார்க்கும்படியாக.
கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன்...
அனுபவம் தொடரும்...

இது ஆங்கில பயம் போக்கும் அட்சயம். பார்ப்போம்...ஆசிரியர்கள் இதை எவ்வளவு பயன்படுத்தப் போகிறார்கள்? எத்தனை பேருக்கு share செய்து மானுடம் பயனுற வாழ வைக்கப் போகிறார்கள் என்று.
நல்லபடி நடந்தால் அரசுப்பள்ளிகள் தப்பிக்கும்.ஆங்கில பயம் அகலும். Cbse க்கு நிகரான உச்சரிப்பு நிகழும்.அடுத்த ஆண்டு சேர்க்கை அதிகரிக்கும். கொஞ்சம் முன் வருவோம்...வெறும் 43 நாட்கள் மட்டுமே போதும்.இன்றிலிருந்து ஒரு முயற்சி... முனைவோம்.
Read More »

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு certificate of Excellence என்னும் விருது வழங்கி மாநிலத் திட்ட இயக்குனர் பாராட்டு


தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தோடு கடந்த சில ஆண்டுகளாக
நவீனத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் சில செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.


அதில் மிக முக்கியமானது தமிழ்நாடு ஆசிரியர் முகமை மற்றும் தீக்‌ஷா எனப்படும் தொழில்நுட்பங்களாகும்.
இவை இரண்டின் மூலமும் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்துக் கொள்ளவும், தேவையான பாடத் திட்டங்களை பெற்று தங்களுடைய கற்பித்தலை வளப்படுத்திக்கொள்ளவும்,
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் இது மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் தீக்‌ஷா தொழில்நுட்பத்தை இந்திய அளவில்
அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இச்செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும், மாநிலம் முழுக்க இருக்கின்ற திறமைவாய்ந்த தொழில்நுட்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று உள்ளீடு செய்வது வரையிலான கல்வி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலைஆசிரியர் சதீஷ் என்பவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.


இவரது சீரிய பணியை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரது முன்னிலையில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு சுடலைகண்ணன் ஐஏஎஸ் அவர்கள் *Certificate of Excellence* என்கிற விருதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களது கரங்களால் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.


இதுகுறித்து ஆசிரியர் சதீஷிடம் கேட்டபொழுது,  இது  மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த விருதாகக் கருதுகிறேன் எனச் சொல்லி மகிழ்ந்தார் .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One