Search

மாணவர்கள் உடல் நலனில் கவனம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்

Sunday 21 June 2020

மாணவர்கள், உடல்நலத்தில் கவனம் செலுத்த, உடுமலை சுற்றுப்பகுதியில் கொரோனா பாதிப்பு குறித்து ஆசிரியர்கள் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளனர்.கொரோனா பாதிப்பினால், பள்ளிகள், மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர, மற்ற வகுப்பு மாணவர்கள், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த விடப்பட்ட விடுமுறையை, மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.தற்போது, பொதுத்தேர்வுகளும் இல்லாததால், பத்தாம் வகுப்பு மாணவர்களும், பதட்டமில்லாமல் உள்ளனர். இருப்பினும், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் பல பகுதிகளில், பரவ துவங்கியுள்ளது.மார்ச், ஏப்., மாதங்களில், கொரோனா பாதிப்பின் தீவிரம் உணர்ந்து, பாதுகாப்புடன் இருந்த மாணவர்கள் பலரும், தற்போது, வெளியில் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட துவங்கிவிட்டனர். மறுபக்கம், பொருளாதார வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், சத்துள்ள உணவுமுறை இல்லாமல், உடல்நலம் பாதிக்கும் சூழலும் உள்ளது.பல பகுதிகளில், ஆசிரியர்கள், இத்தகைய குழந்தைகளை கண்காணித்து அவர்களுக்கு, முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்கி வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் பலரும் இந்த வைரஸ் பாதிப்பு இனி பரவாது என்ற மனநிலையில் வெளியில் சுற்ற ஆரம்பித்துள்ளனர். பெற்றோரும் அலட்சியமாக விட்டுள்ளனர். வைரசின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை மாணவர்களுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பள்ளி ஆசிரியர்களும், அவரவர் வகுப்பு குழந்தைகளை, தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் உடல்நலம் குறித்தும் அறிந்து வைப்பதோடு, வைரஸ் பரவுதல் தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
Read More »

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஊதியம்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஊதியம் வழங்கும் பொருட்டு ரூ.40.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள ஏழை, எளியவா்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு வாழ்வாதாரத்துக்காக ரூ.1,000 அளிக்க வேண்டும் என்று கடந்த மே 31-ஆம் தேதியன்று முதல்வா் அறிவித்தாா்.

இதன்படி, மாதம் ஒன்றுக்கு சுமாா் 60 ஆயிரம் போ தனிமைப்படுத்தப்படுகின்றனா். எனவே இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசை வருவாய் நிா்வாக ஆணையா் கோரியுள்ளாா். மேலும், கரோனாவால் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவா்களின் வீடுகளுக்குச் சென்று சேவையாற்றுவதற்காக 10 வீடுகளுக்கு ஒருவா் என்ற வீதத்தில் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 67 ஆயிரத்து 200 வீடுகளுக்கு 14 நாட்களுக்கு 6,720 போ தேவைப்படுகிறாா்கள்.

அவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 என்ற வீதத்தில் 4 மாதங்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். எனவே அதற்கு ரூ.40.32 கோடி ஒதுக்கப்பட வேண்டும். மேலும் திருவாரூா் மாவட்டத்தில் வட்டார மருத்துவ அதிகாரிகளுக்கு உதவி செய்ய சுய உதவிக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா்களுக்கு ஊதியமாக ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளாா். அவா் கேட்டுக்கொண்டபடி இந்தத் தொகைகளை ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

உயா்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க, பிளஸ் 2 முடித்த மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரங்களை உடனடியாக இஎம்ஐஎஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 மாணவா்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.107.1 கோடி அவா்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் மட்டுமே கல்வித்தகவல் மேலாண்மை வலைத்தளத்தில் (இஎம்ஐஎஸ்) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன

எனவே, எஞ்சியுள்ள 3.65 லட்சம் பேரின் விவரங்களை உடனே பதிவேற்றம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், ஏற்கெனவே பதிவு செய்த வங்கிக் கணக்கு விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வரும், 30க்குள் முடிக்க உத்தரவு


பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளை, வரும், 30ம் தேதிக்குள் முடிக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 24ல் முடிந்தது.இதற்கான விடைத்தாள் திருத்தம், மே, 27ல் துவங்கி, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் முடிந்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பட்டியலிடும் பணி நடந்தது. பின், விடைத்தாள் திருத்தும்மையங்களில் இருந்து, மாவட்ட அலுவலகத்துக்கு வந்த மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, அதை தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

தேர்வுத் துறை அலுவலகத்தில், மாணவர்களின் மதிப்பெண்ணை சரிபார்த்து, அவர்களின் பதிவு எண்களை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்த அனைத்து பணிகளையும், இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு முடிந்ததும், ஜூலை, 3ம் தேதி முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Read More »

ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்களை EMIS ல் பதிவு செய்ய உத்தரவு.

ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்களை EMIS ல் பதிவு செய்ய DPO உத்தரவு.

Kind attention to all supervisors and BRTES, Inform all the teachers/HM to make entry of their training attended details in the year 2019-20 in the web Portal without fail, following the STEPS ven below.

This is very important exercise to be carried out by the teachers at schools in web Portal. The BRTE of concerned school must take responsibility for this. After completing this work, all supervisors must report to DPO. So, Kindly concentrate it. This details only will reflect in the Budget, to be used for all training purposes in future

STEP1 in EMIS web portal, Click "Staff Details".

STEP 2 Click "Training Details", Find all the sub titles.

STEP3
A) Click "Training attended Report", verify all details here and make sure all entries are done
• Regarding training, all teachers/ HM must enter their training attended details of the year 2019-20 without fail. (If attended)
• fone teacher has not entered the data for training, then the teacher will be listed under the teacher without training details. ) Click "BT- By subject taught" in the school, verify all details here and make sure all entries are done.
• Suppose a teacher teaches two subjects, For eg Tamil, and Social Science means, the concern teacher has to enter his/her training details twice in EMIS Web Portal. • First, Select Tamil, enter the details and submit it.
• Again select social science, enter the details and submit it.

STEP 4 Kindly check the web site and if any other additional information regarding training need to be collected, inform us. So that, It can be conveyed to the district office to include it state EMIS web portal. NOTE : We have sent model videos through SSA Whats app group for your reference.
Read More »

SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்



இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1. முகப்புத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் விடைத்தாள் வைத்து பாடவாரியாக தைக்கப்பட்ட கட்டுக்கள்

2. மாணவர் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll )

3. கட்டுக்கள் வாரியாக சரிபார்ப்பு படிவங்கள் இரு நகல்களில்

4. மதிப்பெண் பதிவேடு அசல்
Read More »

மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும்'.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!


தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னரே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சத்தால், 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அதனை மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2019-2020 ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தோகை வழங்க அரசு ரூ.ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மாணவர் அவர்களது வங்கி கணக்குகளை உடனடியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
Read More »

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் _ 17 B குற்றசாட்டில் இருந்து விடுவித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Read More »

TNTP மூலம் Tamilnadu Text Books Download செய்வது எப்படி? அவசியம் என்ன? முழு விளக்கம் - Video



Read More »

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் In - Service Training விபரத்தினை பதிவேற்றம் செய்வது எவ்வாறு? - Video

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு......


🍒 *Emis இனைய தளத்தில் பணியிடை பயிற்சி* தகவல்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சில ஒன்றியங்களில் தகவல் பெறப்பட்டுள்ளது. (இத் தகவல் பற்றி உங்கள் ஒன்றியத்தின் சக ஆசிரியரிடமும், உயர் அதிகாரிகளிடமும்  கேட்டு தெரிந்து கொள்ளவும்)






தற்போது ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் பெயர் மற்றும் தேதி ஆகிய விபரங்களை *ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு* பார்த்து தான் அறிய முடியும் அல்லது பிற பள்ளி பதிவேடுகளை பார்த்து தான் அறிய முடியும் என்பது உண்மை நிலவரம்.


தற்போது நிலவும் அசாதாரண சூழலில் பள்ளி பதிவேடுகளை பார்க்க இயலாது என்பதை கருத்தில் கொண்டு *2019-2020* கல்வி ஆண்டில் நடைபெற்ற *பயிற்சி விபரங்களை கீழே👇 உள்ள படத்தை பார்த்து* தாங்கள் எந்த Batch ல் பயிற்சி பெற்றீர்கள் என்று உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லது பயிற்சி செல்லும் போது பயன்படுத்தும் Diary ஆகியவற்றை கொண்டு 


*Emis இனைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது*
Read More »

பிளஸ் 2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறுதேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பிளஸ்-2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்து உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கருத்துகளை வெளியிடக்கூடாது. இதை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.
அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் ரேங்க் கார்டில் கையெழுத்து போடவே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 10ம் வகுப்பிற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழு அறிக்கை பெற்ற பிறகு முடிவு செய்யப்படும்.
12ம் வகுப்பை சேர்ந்த 34,872 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதிக்குள் மாணவர்கள், பெற்றோர்களிடம் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? என்பது குறித்து கடிதம் மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 21 ) மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 21.06.2020 ) இன்று 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,493   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 121

திருவள்ளூர் - 120

மாவட்ட வாரியான பாதிப்பு.( 21.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள :
Read More »

IFHRMS ஜூன் 2020 - சம்பளப் பட்டியல் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


*1.Bank Account details:
Bank Pass Book ல் உள்ளவாறு 1.பெயர், 2.A/c Number, 3.IFSC code ஆகியன சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்...

*2.GPF/TPF/CPS Number  - Suffix Check:
ஒவ்வொரு பணியாளரின் GPF/TPF/CPS Number  - Suffix  சரிபார்க்கவும்...

HR- Employee Details ல் உரிய எண்ணுக்கு முன்னால் GPF/TPF/CPS  எனப் பதியப்பட்டு இருக்கும்...

Suffix சரிபார்க்கவும்... Example: Edn / TPF / PTPF / MPL / TPF Aided/ Agri / GA / Police

GTN Run Result - Pay statement லும் GPF எண் விவரம் தெரியும்..

*3.PAN Number:
அனைத்துப் பணியாளர்களின் PAN விபரம் சரிபார்க்கவும்... குறிப்பாக PAN number பதியப்படாதவர்களுக்கு IT பிடித்தம் செய்ய வேண்டாம்...

விபரம் அறிய - HR - Report viewer - Employee details report - File type : Excel - Download செய்து சரி பார்க்கவும்...

*4.Temporary Post End Date:
Temporary posts க்கு உரிய post end date update செய்யப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்...

*5.Reports:
Bill Generated ஆன பிறகு Finance - Reports ல்.. Automatic காக
1.ECS Report
2.Enfacement
3.Schedules
4.Pay Statement
ஆகியவை Generated ஆகியிருக்கும்... அவற்றை மாதவாரியாக, Bill வாரியாக தனித்தனி Folder ல் Save செய்து ஒவ்வொன்றாக சரிபார்க்கவும்...

*6.Bill Attachments:

*Initiator Level - Bills Icon ல்.. கீழ்கண்டவை சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்....

*6.1.Bill Lines:
Salary, NSD Amount சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

*6.2.Beneficiary:
Employees Bank account details, NSD Bank account details சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

*6.3.Enfacement Slip: Enfacement ல் உள்ள தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....

6.4.Attachments:
இங்கு
1.Enfacement
2.Schedules
3.Pay Statement ஆகியன இருக்கும்... இங்கு இல்லாதவற்றை கூடுதலாக இணைக்க வேண்டும்...

*ECS Report ஐ மறக்காமல் Attach செய்யவும்..இதற்கு Add attachment க்ளிக் செய்யவும்... File Name ல்.. ECS Report என டைப் செய்து.. File select செய்து.. Apply கொடுக்கவும்..

Arrear Bills / Loans & Advance ஆகியவற்றிற்கும் உரிய ஆணைகளை இதே போல் இணைக்கவும்...

*கவனிக்க: File Attach செய்தவுடன் கீழே Approval Group க்ளிக் செய்து Forward செய்யவும்.... இல்லையெனில்.. அந்த Attachments இருக்காது...

*ஒருமுறை Attachment செய்து Forwarded செய்துவிட்டால்.. வேறு எந்த files ம் இணைக்க முடியாது...

*Initiator Level ல் மட்டுமே Add Attachment work ஆகும்... Verifier & Approver ID ல் work ஆகாது ...

*மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்த பின்னர்... Billsஐ Treasury க்கு Forward செய்யவும்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One