Search

ஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனை

Monday 6 July 2020

ஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனை



Read More »

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் !

சென்னையிலும் , சுற்றியுள்ள மாவட்டங்களி லும் , அரசு அலுவலகங்கள் , இன்று முதல் , 50 சத வீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன . சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் , ஜூன் , 19 வரை , அரசு அலுவலகங்களில் , 50 சதவீத பணியாளர்கள் , சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் .

கடந்த மாதம் , 19 முதல் , நேற்று வரை , இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , அரசு அலுவலகங்களில் , 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்

இன்று முதல் , அரசு அலுவலகங்களில் , 19 ம் தேதிக்கு முன்பிருந்த நிலை தொடரும் என , அரசு அறிவித்துள்ளது . எனவே , பழைய முறைப்படி , 50 சதவீத பணியாளர்கள் , இன்று முதல் , சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர் .

முதல் குழுவில் இடம் பெற்றுள்ள ஊழியர் கள் , இன்றும் , நாளையும் பணிபுரிவர் . அடுத்த இரண்டு நாட்கள் , இரண்டாவது குழு ஊழியர்கள் பணிபுரிவர் . அதன் பின் , முதல் குழு ஊழியர்கள் பணிபுரிவர்
Read More »

மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட ஆணை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 57 , DATE : 06.07.2020 )


மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் , மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் , வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி , மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 - ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்கள் ஆகியோர் , பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்து , மேற்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து , 2020-2021 - ம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் , புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை இரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்காணும் சூழ்நிலையில் , பொதுமக்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று , மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி , மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை இரத்து செய்தும் , 2020-2021 - ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு ஆணையிடுகிறது.

Read More »

ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு


ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு  தெரிவித்ததையடுத்து, அதுகுறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதில் எல்.கே.ஜி. முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.

தொடர்ச்சியாக பல மணி நேரம் நடத்தப்படும் வகுப்புகளால் சிறு குழந்தைகள் விரைவில் சோர்வடையும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் மாறி மாறி வகுப்பெடுக்கும்போது மாணவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கேட்பதால் கண் அழற்சி, உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர்.

மறுபுறம் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்கும்போது அவர்கள் கல்வி கற்க உரிய சாதனங்கள், நெட் கனெக்‌ஷனுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிலைக்கு பெற்றோர் ஆளாகின்றனர். ஊரடங்கு நேரத்தில் பண வருமானம் இல்லாத நிலையில் இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இதேபோல், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள்  நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் ஆஜரான, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் அதுவரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கண் மருத்துவமனை இதுவரை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை வெளியிடும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆன்லைன் இடைக்காலத் தடைக்கான கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One