Search

TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்

Friday 23 November 2018

 TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்
*ஜன் தன் யோஜனா
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

*மேக் இன் இந்தியா

இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட திட்டம்.
மத்திய அரசின் தகவல் படி இத்திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு 48% . 25 துறைகளை பட்டியலிட்டு இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

*திறன் மிகு இந்தியா

2022-ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இந்தியர்களை பல்வேறு துறைகளில் திறமை மிக்கவர்களாக மாற்றுவோம் என்று இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம்.

*தூய்மை இந்தியா


2019-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. 2019-ம் ஆண்டிற்குள் 1 கோடி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்கிற இலக்கும் இந்த திட்டத்தில் உள்ளது.

*இந்திர தனுஷ்

மஞ்சள் காமாலை, காச நோய், போலியோ போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்காக தொடங்கப்பட்ட திட்டம். முதல்கட்டமாக நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்கள் 201

*முத்ரா திட்டம்


சிறுகுறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், மேம்படுத்தவும் வங்கி கடன் வழங்குவதற்காக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
சிசு, கிஷார், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

*டிஜிட்டல் இந்தியா

பொருளாதார அறிவை வளர்க்கவும் இந்திய சமூகத்துக்கு டிஜிட்டல் சேவையை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக அறிவித்தார்.
திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரொபைல் படத்தை இந்தியாவின் மூவர்ண கொடியோடு சேர்த்து இருந்த படமாக மாற்றிக் கொண்டார்.

*ஸ்மார்ட் சிட்டி

நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்.
பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும். 2015-16 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.48,000 கோடி.
தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One