Search

Tnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்

Sunday 30 September 2018

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
----------------------------------
இளங்கோவடிகள் ஒரு பார்வை...

இளங்கோவடிகள் சேரமரபினர்.

பெற்றோர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.

தமையன் - சேரன் செங்குட்டுவன்

தமையன் இருக்க இளையவரான இளங்கோ நாடாள்வார் என கணியன் (சோதிடர்) ஒருவர் கூறியதை பொய்யாக்க இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.

சமய வேறுபாடற்ற துறவி.

கி.பி.2ம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

பாரதியார் இவரை, யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

சிலப்பதிகாரம் ஒரு பார்வை...

சிலம்பு + அதிகாரம் - சிலப்பதிகாரம்

கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.

இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.

புகார்க்காண்டம் - 10 காதை
மதுரைக்காண்டம் - 13 காதை
வஞ்சிக்காண்டம் - 7 காதை

இக்காப்பியம் உரையிடை இட்ட பாட்டைச்செய்யுள் என அழைக்கப்படுகிறது.

முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணியாரம் படைத்த தமிழ்நாடு எனப் பாரதியார் புகழ்கிறார்.

வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.

இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்.

கோவலன் தந்தை - காவிரிபூம்பட்டிணம்
பெருவணிகன் மாசாத்துவான்

கண்ணகி தந்தை - காவிரிபூம்பட்டிணம்
பெருவணிகன் மாநாய்கன்

கோவலன் மாதவியை பிரிய காரணம் - இந்திர விழாவில் கானல் வரி பாடல் பாடியதால்

கோவலன், கண்ணகியுடன் வழி துணையாக மதுரை சென்றவர் - கவுந்தியடிகள்

பாண்டிமாதேவியின் காற்சிலம்பை களவாடியவன் - பொற்கொல்லன்

பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடி - கொற்றவை

கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி

இறைவனை நடனமாட செய்தவள் - பத்ரகாளி

அச்சம் தரும் காட்டை விரும்பும் இடமாக கொண்டவள் - காளி

தாருகாசுரனின் மார்பை பிளந்தவள் - துர்க்கை

புறாவின் துன்பத்தை போக்கிய மன்னன் - சிபி (சோழன்)

மகனை தேர்ச்சக்கரத்திலிட்டு கொன்ற சோழ மன்னன் -மனுநீதிச் சோழன்

கண்ணகியின் சிலம்பு மாணிக்க பரல்களால் ஆனது.

கோப்பெருந்தேவியின் சிலம்பு முத்துக்களால் ஆனது.
Read More »

Tnpsc -tet பொதுத்தமிழ் அகநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

பொதுத்தமிழ் -   அகநானூறு பற்றிய சில முக்கிய குறிப்புகள்

1. அகநானூற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை

2.   அகநானூற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை

3.  அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை

4.  அகநானூற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை

5.  அகநானூற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை

6.  அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்

7.  அகநானூற்றின் அடிவரையறை - 13 - 31 அடிகள்

8.  அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90

9.  அகநானூற்றின் பிரிவுகள் - 3. அவை களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

10.  அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

11.  அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்

12.  அகநானூற்றுக்கு பாயிரம் எழுதியவர் - இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

13.  அகநானூற்றை தொகுத்தவர் - உப்பு+ரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

14.   அகநானூற்றின் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை

15.  அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வே.இராசகோபால்

16.  அகநானூற்றின் மூன்றாம் பகுதி - நித்திலக்கோவை

17.   அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

18. அகநானூற்றை தொகுப்பித்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

19. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா, பரிபாடல்

20. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12
Read More »
 

Most Reading

Tags

Sidebar One