Search

அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் !!!_

Tuesday 23 June 2020

அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும்  அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும்  திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் !!!_
Read More »

மாணவர்களின் கவனத்துக்கு! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி கற்க புதிய இணையதளம் அறிமுகம்


கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர்.எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைய முகவரி: e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Read More »

ஆசிரியர்களை கொரோனா பணியில் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்..!! தமிழக அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!

பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை வீட்டிலிருந்தபடியே கொரோனா பணியில் பயன்படுத்த அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருந்தொற்று கொரோனா வைரஸைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசினை பாராட்டுகிறோம். கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ள வைரஸ் தொற்று, மக்களை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.

கல்வித்துறையில்பணிபுரியும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்திவருவதால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணியான Street warrior பணியிலும் , மண்டல அலுவலகங்களில் செயல்படும் Tele counselling மையத்திலும் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். Tele counselling-மையத்தில் தினம் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரையும் , பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்று சிப்ட் முறையில் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு, பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்ற சொல்வது ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாகவே முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள் என்றால் அதுமிகையாகாது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசாதாரணச் சூழலில் ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உதவிகல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்கள் மூலமாக விருப்பமில்லாத ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரசொல்வது, ஏற்கனவே அச்சத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், ஆசிரியர்களின் உடல்நிலை, மாற்றுத்திறனாளிகள், 50 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரும் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாதுகாப்புக்கருதி சொந்த ஊருக்கு சென்றுள்ள பல ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி பணிக்குவரச்சொல்லி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை பயன்படுத்துவதால் நோய் தொற்று விரைந்து பரவும் அபாயம் உள்ளது.

எனவேஎப்போதும் பேரிடர் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருந்துவருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, Tele counselling போன்ற பணி வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பணி என்பதால் வீட்டிலிருந்தபடியே அந்தபணியை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், இல்லையேல் அவர்கள் பணிசெய்யும் பள்ளிகளிலே ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி தினந்தோறும் 30 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்ய ஆவனசெய்ய வேண்டும் என அரசை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STATION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..


Read More »

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புநடத்த தடை விதிக்க வழக்கு!


கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்துபள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால்கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பள்ளிகள் எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை 2 மணி நேரத்திற்கு மேல் நடத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விமல் மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள் கைபேசி பார்ப்பதால் ரெடினா பாதிக்கப்படும் என கண் மருத்துவர்கள் கருத்து தெரிவிப்பதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Read More »

புதிய திட்டம்! ஆசிரியர்கள் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவ...சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை


புதுச்சேரி : ஆசிரியர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவும் திட்டம் தொடர்பாக சங்க் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. வழக்கமாக, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது தள்ளி போடப்பட்டுள்ளது.அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனோர் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.எனவே, அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் முடிவு செய்துள்ளார்.

அதாவது, பள்ளிகள் இயங்காததால் மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பகிர்ந்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், அரிசி, பருப்பு போன்றவற்றுடன் 300 ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையில் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் அரசே நேரடியாக நிதியுதவி அளிப்பதில் சிக்கல் உள்ளது.

எனவே, அரசு பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களின் இரண்டு அல்லது மூன்று நாள் சம்பளத்தை அவர்களது சம்மதத்துடன் பெற்று, மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட் டுள்ளது.இந்த திட்டம் தொடர்பாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்பதற்காக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம், பள்ளிக் கல்வித் துறையின் கருத்தரங்கக் கூடத்தில் நேற்று காலை நடந்தது.பள்ளிக் கல்வி இணை இயக்குனர் குப்புசாமி, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி கூறினார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சம்பளத்தை அளித்து, நல்ல காரியத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சில சங்கங்களை சேர்ந்தவர்கள் சில காரணங்களை கூறி ஆட்சேபணை தெரிவித்தனர். பல சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தங்களது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எழுத்துமூலமாக வெள்ளிக் கிழமைக்குள் முடிவை தெரிவிப்பதாக பலர்தெரிவித்தனர். நல்ல முடிவை தெரிவித்து அரசின் திட்டத்திற்கு ஆதரவு தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
Read More »

பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்!

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் பொது தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் கோவையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அந்த மாணவர்களுக்கான தனி தேர்வு நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தேர்வுகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்து தேர்வு எழுத தயாராக இருக்கும் தனி தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் சில மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


மேலும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது போல தனி தேர்வர்களுக்கான தேர்வு நடத்தபடும் அல்லது நடைபெறாது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மாணவர்கள் கேட்டுகொண்டனர்.
Read More »

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைக்காய்!


ஏனோ இந்த காயினை அதிகம் இன்றைய மக்கள் மறந்து விட்டனர். கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருந்ததால்தான். வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் மலம் கழிப்பது ஒரு ஆரோக்கிய அறிகுறியாகும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது..

* குறிப்பாக வாழைக்காய் அதிக நார் சத்து கொண்டது. ஜீரண கோளாறு மற்றும் குடல் பிரச்சினைக்கு பெரிதும் உதவும்.

* பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்திற்கு நல்லது.

* உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது.

* நார்சத்து மிகுந்ததால் எடை குறைப்பிற்கு நன்கு உதவுகிறது.

* வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது.

* நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.

* சிறுநீரக செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இத்தகு சிறந்த குணங்கள் கொண்ட வாழைக்காயினை அமாவாசைக்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் நன்கு பயன்படுத்தலாம்.
Read More »

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி

IMG_20200623_130650

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
Read More »

சிபிஎஸ்இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா? நாளை முடிவு.

images%2528135%2529

"ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவு"

உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்.

ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Read More »

ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

IMG_20200623_130650

ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

விரிவான அறிக்கை அளிக்க கண் மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் உத்தரவு.
Read More »

பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு, 10 ம் வகுப்பு மதிப்பெண் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த சிறப்பு பேட்டி - காணொளி காட்சி

இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு மற்றும்10 ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளி காட்சி. 

Minister Speech - View here...
Read More »

1 to 12th std All subjects text books download T/M and E/M

Read More »
 

Most Reading

Tags

Sidebar One