Search

5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில் குழப்பம்

Monday 20 January 2020

சென்னை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அதே பள்ளியில் தான் தேர்வு மையங்கள் இருக்கும் என, அமைச்சர் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2019 மார்ச் வரை, அனைத்து மாநிலங்களிலும், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற, அனைவரும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது.

திணறும் நிலைபல மாநிலங்களிலும், பல பாடத்திட்டங்களிலும், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகளே நடத்தப்படாமல் உள்ளன.இதனால், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் பலர், தாய்மொழியில் எழுத, படிக்க கூட திணறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வை நடத்தலாம் என்றும், இதுகுறித்து, மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு மட்டும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, அறிவித்தது. இந்த பொது தேர்வை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 போன்று, அரசு தேர்வு துறை வழியாக, கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து, கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய, ஆறு பக்க சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை, பிற பள்ளிகளில் அமைப்பது தொடர்பாக, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழப்பம்'மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவிற்குள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கி.மீ., துாரத்துக்குள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளையும் தேர்வு மையம் அமைக்க பயன்படுத்தலாம்' என, அதில் கூறப்பட்டுள்ளது.


அதேபோல், தேர்வில் மாணவர்கள், 'காப்பி' அடிக்காத வகையில், வினாத்தாள் கட்டுகளை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும்; வினாத்தாள் எந்த வகையிலும், 'லீக்' ஆகி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஐந்து, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று கூறியுள்ளார்.ஆனால், அதற்கு நேர்மாறாக, தொடக்க கல்வி இயக்குனரகம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், பெற்றோரும்,ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
Read More »

தேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள்


சென்னை: தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை மற்ற பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்பதால் இந்த ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக தொடக்க கல்வித்துறை சில வழிகாட்டு நெறிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் 2019ம் ஆண்டு அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.


அதன்படி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பின்பற்றி தேர்வு நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தேர்வு மையத்துக்கு அதிக தூரம் பயணம் செய்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் 1 கிமீ தூரத்துக்குள் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கிமீ தூரத்துக்குள் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள், போதுமான இட வசதிகள் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேனிலை, சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக, இது குறித்து ஊடங்களில் செய்தி வெளியாகி பொதுமக்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. அதனால், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 9ம் தேதி தெரிவித்தார். தொடக்க கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேர்வு மையங்கள் அமைய வேண்டிய தூரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் பேட்டியில் அதே பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதில் எதை பின்பற்றுவது என்று கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் கேட்டு ஆணைகளை வெளியிட வேண்டும். குழப்பங்கள் இல்லாத வகையில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்தியாவிலேயே இல்லை

5,8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத இந்த தேர்வு முறையை தமிழகத்தில் மட்டும் அவசரமாக நடத்தி மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைக்க அரசு முயற்சிக்கிறது. ஏழை எளிய மாணவர்-்களின் நலன் கருதி உடனடியாக 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மாநில அரசும் பள்ளிக் கல்வித்துறையும் கைவிட வேண்டும். இதே கருத்தை பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் இந்த கருத்தை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறைக்கு மனு கொடுத்துள்ளனர்.
Read More »

SPD - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு.


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் ரூ . 1000 / - ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) பொங்கல் விழாவிற்கு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கி வரும் சிறப்புப் பயிற்றுநர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் , தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களாக உள்ள 2114 தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணிபுரியும் பணியாளர்களுக்கும் விதிமுறைகளின் படி இடைக்கால மிக ஊதியமாக ரூ . 1000 / - ஊக்கப்படுத்தும் வகையில் MMER நிதியிலிருந்து வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.01.2020


திருக்குறள்


திருக்குறள் - 361

அதிகாரம் : அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

பொருள் : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

பழமொழி

 "The future crop is known in the germ.

 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

அறிவு என்றுமே ஒரு செயலின் இருமுனைகளையும் ஆராய்வதாக இருக்க வேண்டும். நன்மை தீமைகள் தெளிதல் வேண்டும் ...

------ஏலி விட்னி

பொது அறிவு

1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?

Snow White and seven dwarfs(1937)

 2. ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்திய இயக்குனர் யார்?

 சத்யஜித் ரே.

English words & meanings

Urbanology – study of urban development of cities.
கிராமங்கள் நகரமயமாதல் குறித்த அறிவியல்.

Unalterable -not able to be changed.
மாற்றமுடியாத

ஆரோக்ய வாழ்வு

அதிக அளவு நீர் குடிக்கும்போது, உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் நச்சுப் பொருள்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை சுத்தப்படுத்தி விடுவதால் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

Some important  abbreviations for students

min - minute.
sec - second

நீதிக்கதை

கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை!

நீதி : கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்

இன்றைய செய்திகள்

22.01.20

*தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 * நந்தனம், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய  4 மெட்ரோ நிலையங்களிலும் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் மின்சார ஸ்கூட்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

*ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் தாக்கக்கூடிய போர்விமானங்கள் தஞ்சை விமானப்படையில் இணைப்பு.!

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

*ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

Today's Headlines

🌸The Cabinet has approved the setting up of a crude oil refinery at Thoothukudi at a cost of Rs 40,000 crore.

  🌸 Electric scooter facility has been introduced at the four metro stations in Nandanam, Kindi and Chinnamalai at Rs.1 per minute

 🌸 Fighter jet warplanes which can hit 2.8 times faster than the sound was Linked In Tanjore air force

 🌸 Can apply in online upto January 20 for the Group-1 Examination conducted by the Tamil Nadu Government Employee Board

 🌸 ICC has released a list of ODI Cricket Batsmen.  Indian players Virat Kohli and Rohit Sharma topped the list.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

அனைத்து பள்ளிகளிலும் 25.01.2020 ( சனிக்கிழமை ) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்!


தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020

25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

வாக்காளர் உறுதிமொழி

ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .
Read More »

5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - நல்லாசிரியர் விருதை திருப்பி அளிக்க முயன்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்!


தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இதனால், இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும், குழந்தை தொழிலாளர்கள் நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பவர் கடந்த 2012 - 2013ம் ஆண்டில் வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார். அப்போது, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும் எனவும், தேர்வு நடத்தப்பட்டால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும், மனவளர்ச்சியும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னர் தமிழக அரசு தனக்கு வழங்கிய நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முயன்றார். ஆனால், தலைமை ஆசிரியர் அல்லிமுத்துவின் கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்காமல் எடுத்துச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதனால் தமிழக அரசு தனது கோரிக்கையை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் தனக்கு வழங்கிய விருதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்புவேன் என தலைமை ஆசிரியர் அல்லிமுத்து தெரிவித்துள்ளார்.
Read More »

TERM 3 -3 RD STD -ENGLISH -PAGE NO 69 - THE COCONUT GROVE - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -3 RD STD -ENGLISH -PAGE NO 88 - THE LITTLE DOCTOR - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -3 RD STD -ENGLISH -PAGE NO 68- WONDERFUL TREE

Read More »

TERM 3 -3 RD STD -TAMIL -PAGE NO 25 - மழைநீர் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -3 RD STD -TAMIL -PAGE NO 7- தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -3 RD STD -TAMIL -PAGE NO 15- வீம்பால் வந்த விளைவு

Read More »

TERM 3 -3 RD STD -TAMIL -PAGE NO 1- உள்ளங்கையில் ஓர் உலகம் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -EVS -PAGE NO 92 - இரவும் பகலும் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -EVS -PAGE NO 67 - இழை /நார் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -EVS -PAGE NO 62 - நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -ENGLISH -PAGE NO 75 - DRESS DAY - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -ENGLISH -PAGE NO 74- THE FARMER IN THE FIELD

Read More »

TERM 3 -2ND STD -ENGLISH -PAGE NO 55- DONA'S SONG - Term 3 - QR Code Vodeos Download

Read More »

TERM 3 -2ND STD -ENGLISH -PAGE NO 54- WONDERFUL SEA - QR Code Vodeos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 32- 8.அன்றும் இன்றும் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 13- 3.விரும்பி வேலை செய்யலாம் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 28 - 7.தொடர்வண்டி நிலையத்தில் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 25- 6.கடற்கரைக்கு போகலாம் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 16- 4.நாங்கள் நண்பர்கள் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 20- 5.பயணம்

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 9- 2.சிறிய உருவம் !பெரிய உலகம் ! - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3-2ND STD TAMIL -PAGE NO 6-யாரு? யாரு? யாரு? - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -6.2. உறவு முறை - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -6.தகவல் செயலாக்கம் - - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -எண்கள் அறிவோம் -விளையாடி கற்போம் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -தொடர் கழித்தல்-பயிற்சி - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -தொடர் கழித்தல் - Term 3 - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -தொடர் கூட்டல்

Read More »

TERM 3- 2ND STD -MATHS -வரிசை எண்களும் குறிப்பிட்ட எண்களும் - QR Code Videos Download

Read More »

TERM 3- 2ND STD -MATHS -ஒற்றை இரட்டை எண்கள் - QR Code Videos Download

Read More »

பாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பு ( Live YouTube Channel Link )

Pariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின்  தேர்வுபயம் போக்கும்  நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக 20.01.2020 அன்று டெல்லி Talkatora மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காண்பித்து , இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து தலைமையாசிரியர்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Prime Minister Speech - Live YouTube Link...

பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும்வகையில், பிரதமர் மோடி இன்று ஊக்க உரை நிகழ்த்துகிறார். இந்த உரையை, அரசு பள்ளி மாணவர்கள் கேட்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் கேள்வி கள் மற்றும் சந்தேகங்களுக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்.இதற்காக, பிரதமரிடம் கேள்வி கேட்கும் மாணவர்கள், தனியாகதேர்வு செய்யப் பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Read More »

ஆசிரியர்கள் தேவை!!


Teachers Wanted.(CBSC)

*High School Level*

✒Vice Principal
✒English
✒Maths
✒Social Science
✒B.E. Computer Science

Last Date : 26/01/2020.

BHARANI INTERNATIONAL
SCHOOL (CBSC)

Kannandahalli (Post),
Bargur -  TK ,
Krishnagiri.

Phone: 9843236505, 9786651715

Email: bimschool2012@gmail.com
Read More »

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான CEO செயல்முறைகள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20 ஆம் கல்வியாண்டு அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் - ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்குதல் - சென்னை மாவட்ட CEO செயல்முறைகள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் சார்ந்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பணிமனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சென்னை மாவட்டத்தின் சார்பில் அரசு / சென்னை / ஆதிந உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆங்கிலப்பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 22 - 01 - 2020 மற்றும் 23 - 01 - 2020 அன்றும் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே அனைத்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் அட்டவணையில் கண்டவாறு பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Read More »

DEE - அரசு பள்ளிகளில், மாதந்தோறும் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் - இயக்குநர் சுற்றறிக்கை!

அரசு பள்ளிகளின் நிலை என்ன? திடீர் ஆய்வு நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு.

மாவட்டங்களில், அந்தந்த வட்டார கல்வி அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், மாதந்தோறும் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளின் தரம், உள்கட்டமைப்பு வசதியை கண்டறிய, ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர்களும், பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். மாதம் குறைந்தபட்சம், 20 பள்ளிகளில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்வு நடத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது.பள்ளிகள் இயங்கும் முறை, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், பள்ளி செயல்பாடு, வருகைப் பதிவேடு, நலத் திட்ட செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், கணினி பயன்பாடு, உடற்கல்வி குறித்து மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.ஆய்வின்போது, திரட்டப்பட்ட தகவல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

நாளை கடைசிநாள்! வட்டாரக்கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பிக்க!!

மொத்தம் 97 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது – 29, BC - 29, MBC – 20, SC/ST – 19 என மொத்தம் 97 இடங்கள் உள்ளது.

உட்பிரிவு வாரியான காலியிடங்கள் விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

TN TRB Educational Officer Recruitment 2019 பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC, MBC, SC/ST பிரிவினர் அதிகபட்சமாக 57 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவில் டிகிரி படித்தவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில், ஆசிரியர் படிப்பு (B.Ed) படிப்பும் படித்திருக்க வேண்டும். இவை அல்லாத வேறு Equivalent Qualifications (இணை கல்வித்தகுதி) உள்ளவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க 21/01/2020 கடைசி நாள் என்பதால் இன்றே விண்ணப்பிப்பது கடைசிநேர தொழில்நுட்ப தவறுகளை தவிர்க்க உதவும்.
Read More »

ESLC - 8ஆம் வகுப்பு ஏப்.2020 பொதுத்தேர்வு - தனித்தேர்வர்களுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறை!


ஆன் - லைன் ( Online ) மூலம் விண்ண ப்பங்களை வரவேற்றல் ஏப்ரல் 2020 - ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01 . 01 . 2020 அன்று 12 1 / 2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27 . 01 . 2020 முதல் 31 . 01 . 2020 வரை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Nodal Centre ) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் .

மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தேர்வர் வசிக்கும் இருப்பிடத்திற்குட்பட்ட கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மட்டுமே சென்று ( Nodal Centre ) விண்ண ப்பங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . விண்ணப்பிக்கச் செல்லும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகலினை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் . தனித்தேர்வர்கள் Nodal centre - க்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் . Nodal centre - ல் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் ( Web Camera ) மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் , அம்மையங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் , அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது . Online மூலம் விண்ண ப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் . தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் .

ESLC - Time Table And Online Application Details ( pdf ) - Download here...

Read More »
 

Most Reading

Tags

Sidebar One