Pages

Phone Contacts-களை மெமரி கார்டுகளில் காப்பி செய்வது எப்படி ?

Tuesday, 10 March 2020


6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு shoes மற்றும் socks வழங்க தேவைப்பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்

6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு shoes மற்றும் socks வழங்க தேவைப்பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து அறிவுரை - அமைச்சர், செங்கோட்டையன்


''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து, டாக்டர்கள் வாயிலாக, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சார்ந்த கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. ரூ.218 கோடிஅதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது :தேசிய போட்டிகள் மட்டுமின்றி, மாநில அளவில் விளையாடுவோருக்கும், இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளில், மாணவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்காக, இந்த ஆண்டு, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய தொழில் கூட்டமைப்புக்கு, ஓர் அரங்கு ஒதுக்கி தரப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கொரனா வைரஸ் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்சீனாவில் தொடங்கி இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட பார்வையில் கண்ட கடிதங்கள் பெறப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து இந்நோயின் அறிகுறி , பரவும் விதம் , பாதிப்பு வராமல் இருக்க செய்யவேண்டிய தடுப்பு முறைகள் குறித்து தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . கொரோனா வைரஸ் ( Covid - 19 ) கோவிட் - 19 ( முன்பு 2019 - nCoV ) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ( Coromavirus ) தொற்றுப் பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும் . சீனாவின் - ஊ . பேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது . இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம்...

DSE - Korano Instructions - full Download here

TNTET விலக்கு & புத்தாக்கப் பயிற்சி வேண்டுகோள் ( பத்திரிகை செய்தி )

The Tamil Nadu Govern ment Non - Minority Aided School Teachers ' Federa tion submitted a represen tation to the State Educa tion department seeking exemption from writing the Teachers Eligibility Test ( TET ) exam .

Speaking to The Hindu , K . Sivagnanam , one of its coordinators , said that most teachers in non - mi nority institutions who had been in service before the TET exam had been fight ing cases for the past eight years . A 10 - day refresher course could be conducted instead of the exam .

" Those in minority insti tutions who had been working for many years be fore the implementation of TET have been exempted and have only attended a refresher course . The same rules must be applied for us too , " he said . Mr . Sivagnanam added that those in non - minority aided schools did not get earned leave and other in centives .

கொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 44 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வைரஸ் பரவியதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கேரளாவில் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் கேரளா அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது இதனை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் தொடக்கம்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது

247 எழுத்துக்கள் கொண்ட தமிழ் மொழியை எளிமையாக்கும் புதிய முயற்சி

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_iraahooo.IRAGOPINATH5P


பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் தமிழ் மொபைல் செயலி
247 தமிழ் எழுத்துக்களை மிகக் குறைந்த நேரத்தில் எளிமையாக கற்றுக்கொள்ள பயன்படும் மொபைல் செயலி MOBILEAPP
சிறியகுழந்தைகள் முதல் மெல்லக் கற்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விளையாட்டு வழியிலான மொபைல் செயலி தயாரித்து GOOGLE PLAYSTORE ல் பதிவேற்றம் செய்து உள்ளேன் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்
பாருங்கள் பயன்படுத்துங்கள் பிறருக்கும் பகிருங்கள்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் என்றும்
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால்? - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு

பள்ளிகளில் பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறைகளில் உணவு அருந்தும் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதை மாணவர்கள் திறந்த வெளியிலும் வராண்டாவிலும் ஆங்காங்கே அமர்ந்து உண்ணுகின்ற வழக்கம் பல பள்ளிகளில் இருந்து வருகிறது.

எனவே, மாணவ, மாணவிகள் சுகாதாரமான முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சமூக நல ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளிகளில் கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறையினை மாற்றி சீரமைத்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக அமைத்துத்தர வேண்டும்.


இதற்கு ஏதுவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் முழு முகவரியுடனும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பள்ளியில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, சத்துணவு உண்ணும் பயனாளிகளின் எண்ணிக்கை, மொத்த வகுப்பறைகள் எண்ணிக்கை, கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாத வகுப்பறைகள் எண்ணிக்கை போன்ற விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு Memo யார் , எதற்காக வழங்கலாம்? RTI Reply!

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்

1 . பள்ளியின் செயலாளர் ( அ ) தாளாளருக்கு Merno கொடுக்க அதிகாரம் உள்ளது .

2 , பாடம் , வகுப்பு சார்ந்த விவரங்களுக்கு Memo வழங்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் இல்லை . ஆனால் பாவின் செயலர் மற்றும் தாளாளருக்கு பரிந்துரை செய்யலாம் .


3 . தனியார் பள்ளிகளுக்கு தகுதிகாண் பருவம் கிடையாது

DEE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

1.பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்களின் தலைமையில் 25 . 02 . 2020 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரப்பட்டுள்ளது .

 2 . அதனடிப்படையில் மேற்சொன்ன விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) மூலமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதால் , தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் ( IFHRMS ) மூலமாக பிப்ரவரி - 2020 மாத ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை www.emis1.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் அதில் கோரப்பட்டுள்ள விவரத்தினை பதிவேற்றம் செய்து 10.03.2020ற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
 

Most Reading

Tags

Sidebar One