Search

DEE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

Tuesday 10 March 2020

1.பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்களின் தலைமையில் 25 . 02 . 2020 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரப்பட்டுள்ளது .

 2 . அதனடிப்படையில் மேற்சொன்ன விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) மூலமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதால் , தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் ( IFHRMS ) மூலமாக பிப்ரவரி - 2020 மாத ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை www.emis1.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் அதில் கோரப்பட்டுள்ள விவரத்தினை பதிவேற்றம் செய்து 10.03.2020ற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One