பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 1000
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் CAIIB முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 31.05.2023 அன்று 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 48,170 – 69,810
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் வங்கி, பொருளாதாரம், கணினி ஆகிய பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 1 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2023
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.850. SC/ST பிரிவினர் ரூ.175
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/_Notification%20_RECRUITMENT-OF-MANAGERS-IN-MMGS-II-IN-MAINSTREAM.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Click here for latest employment news