Search

Emis - Latest News 20.01.2020

Sunday 19 January 2020



தற்போது மாணவர்களது விவரங்களை திருத்தும் வசதி (Edit) செயல்பாட்டில் உள்ளது.ஆகையால் (5&8ம் வகுப்பு மாணவர்களுக்கு  உடனடியாகவும்) அனைத்து வகுப்பு மாணவர்களின் பெயர்(தமிழ்&ஆங்கிலம்), பிறந்த தேதி கைபேசி எண், ஆதார் எண், முகவரி, இரத்த வகை, இனம்  உள்ளிட்ட அனைத்து விவரங்களை சரிபார்த்து உரிய திருத்தம் செய்து கொள்ளவும்.
மேலும் மாணவர்களின் பெயர்களை சேர்த்தல் & நீக்கம் செய்யவேண்டி இருந்தால் சேர்த்தல் & நீக்கம் செய்ய கூடிய வசதிகள் தற்போது தரப்பட்டுள்ளது.
Desktop அல்லது Laptopல் மட்டுமே Emis சார்பான அனைத்து வகையான திருத்தங்களை மற்றும் சேர்த்தல் & நீக்கம் செய்யப்பட்ட விபரங்களை மேற்கொள்ள முடியும். மொபைலில் மேற்கண்ட திருத்தங்களை மேற்கொள்ள இயலாது.
Read More »

ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்...



ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்!!

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க
வேண்டும். (Maintain a good posture).

2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).



7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.
Read More »

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???
📣📣📣📣📣📣📣📣

கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .


*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.


*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._


_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.


*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*


அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..




*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*************************

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)
Read More »

மீண்டும் விடுமுறை எப்போது??


கிட்டத்தட்ட 6 நாட்கள் என்ற நீண்ட பொங்கல் விடுமுறையை அனுபவித்துவிட்டு இன்றுடன் விடுமுறையை முடித்துவிட்டு பணிக்குத் திரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு முழுவதுமே இனிமேல் நீண்ட விடுமுறை கிடையாது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தான் உள்ளது

ஜனவரி 14 முதல் 19 வரை கிட்டத்தட்ட பொங்கல் விடுமுறையை அனுபவித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இனிமேல் நீண்ட விடுமுறை இந்த ஆண்டு முழுவதும் கிடையாது


பெரும்பாலான விடுமுறை சனி ஞாயிறுகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வரும் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இனிமேல் அடுத்த விடுமுறை தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 25ஆம் தேதியும், ஏப்ரல் 6-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறாஇ தான் என்பதால் அடுத்த விடுமுறைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த ஆண்டு பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகியவை சனி ஞாயிறு கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரே அரசு பள்ளி மாணவி



Pariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின்  தேர்வு பயம் போக்கும்  நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக 20.01.2020 அன்று டெல்லி Talkatora மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்மாணவர்களின் தேர்வு பயம் பற்றிய கேள்விகளுக்குடெல்லியில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பதில் அளித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். இந்த நேரடி நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் நாளை ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் www.mygov.in  என்ற  இணையதளம் வாயிலாக ஒரு சிறு\ கட்டுரைபோட்டியை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதி சமர்ப்பிக்க போட்டி நடத்தியது இப்போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதில் சிறந்த கட்டுரைகளை மாநில அளவில் தேர்வு செய்தனர்.

 அவ்வாறு தமிழகத்தில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட 66 மாணவர்களில் ஒரு அரசுப்பள்ளி மாணவி T. ஆராதனா. அம்மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம், 10 ம் வகுப்பில் பயின்று வருகிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள மாணவிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்,  பள்ளியின் தலைமை ஆசிரியை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More »

School Morning Prayer Activities - 20.01.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.20

திருக்குறள்


அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

விளக்கம்:

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

பழமொழி

 One step forward and two steps backward

  சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது பள்ளி வளாகத்தின் தூய்மை, பசுமை எனது படிப்பு எனது முக்கிய குறிக்கோள்கள்.

2. இந்த வருடம் முழுவதும் என் குறிக்கோள்கள் நிறைவேற பாடுபடுவேன்.

பொன்மொழி

விடாமுயற்சி என்பது பிடிவாதம் அல்ல.உண்மையில் விடாமுயற்சியே பல சாதனைகளை அரங்கேற்றம் செய்துள்ளது..

-------ருடால்ப் டீசல்

பொது அறிவு

1.இந்திய காடுகளின் அரசன் என்று குறிக்கப்படும் மரம் எது?

 தேக்கு மரம்




2. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு எது?

ஜனவரி 1,2000.

English words & meanings

Toxicology – study of poisons on living organisms and treatment .நச்சுப்பொருள்கள் பற்றிய அறிவியல் முறையிலான ஆய்வு.

 Telescopic - Related to telescope. தொலைநோக்கி சம்பந்தமான.

ஆரோக்ய வாழ்வு

வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 67 சதவீதம் குறைக்க முடியும்.

Some important  abbreviations for students

Dr. - Doctor.   

Gen. - General

நீதிக்கதை

ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.

சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.

இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது. ஆனால் நீர் குடித்து விட்டு அதனால் மேலே வர முடியவில்லை. பரிதாபமாக கத்தியது. அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது. என்ன எ‌ன்று‌ எட்டி பார்த்தது. ஆனால் குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும்.   கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கிராமத்திற்குள் சென்ற குரங்கு ஆட்களை அழைத்து வந்து ஆண்டின் காப்பாற்றியது.

நீதி: எந்த காரியத்தை செய்யும் முன் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை யோசிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

21.01.20

* குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்து கடமை தவறும் உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை: தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு...: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* புரோ ஹாக்கி தொடரை வெற்றியுடன் துவக்கியது இந்தியா. நெதர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

* ஆஸ்திரேலியாவுடனான 3-வது இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரையும் வென்று கோப்பையை கைப்பற்றியது.

Today's Headlines

🌸Local bodies that continue to fail to dispose the garbage will fined Rs 10 lakh per month - orders are given by the National Green Tribunal

 🌸No environmental permit required for hydrocarbon exploration well - Central government generous offer to private company.

 🌸 Meteorological Center says there may be mild  rain in tamilnadu due to atmospheric overlapping.

 🌸 India launches Pro Hockey Series with success  .In the first match against the Netherlands India won by 5-2.

 🌸 India had a tremendous victory by 7 wickets in the 3rd ODI against Australia and also won the series. India bagged the trophy.

Prepared by
Covai women ICT _போதிமரம்
Read More »

5 & 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்!!


5 & 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என நேற்று செய்தி வெளியானது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது "அது வதந்தி என்றும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவார்கள்" என்றும் கூறினார்.

நீட்தேர்விற்கு எதிர்ப்பு எழுந்தபோது வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. எதிர்ப்பு குரல்கள் குறைந்து தேர்வு மையங்களை அருகிலேயே அமைக்க வேண்டும் என்று மாறியது. அதுபோல் இத்தேர்வு விசயத்திலும் தேர்வு வேண்டாம் என்ற குரல்கள் மாறி அந்தந்த பள்ளியிலே தேர்வு வேண்டும் என கேட்கலாம்.
Read More »

தமிழில் வருமானவரி படிவம் 2020 மற்றும் விளக்கங்கள்!


Income Tax 2019 - 2020 Form And instructions ( Tamil )

# வருமானவரி படிவம்
# படிவம் 12BB
# வருமானவரி விளக்கங்கள்

Income Tax 2019 - 2020 Form And instructions - Download here... ( pdf )

வீட்டு வாடகைப்படி ( HRA ) சில விளக்கங்கள் :

( i ) வீட்டு வாடகைப்படி வரிவிலக்கு பெற வேண்டுமானால் நீங்கள் வீட்டு வாடகை செலுத்தியிருக்க வேண்டும் .
( ii ) வீட்டு வாடகைப்படி முழுவதுமாக வரிவிலக்கு பெற வேண்டுமானால் உங்கள் வருடாந்திர வாடகைப்படியுடன் 10 % அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை கூட்டிக் கொள்ளவும் . நீங்கள் செலுத்தும் வருட வீட்டு வாடகை இத்தொகைக்கு மேல் இருந்தால் வீட்டு வாடகைப்படி முழுவதும் வரிவிலக்காக பெற முடியும் .
( iii) பெற்றோருக்கு வாடகை கொடுக்கும் பட்சத்தில் , வாடகைப்படியினை வரிவிலக்காக பெறலாம் .
( iv ) கணவன் - மனைவிக்கு இடையே வாடகை செலுத்தியிருந்தாலும் முறையான வாடகை ரசீது இருந்தால் விலக்கு பெறலாம் .
( v ) வீட்டு வாடகைப்படி மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி இரண்டினையும் கீழ்க்கண்ட சமயங்களில் வரிச்சலுகையாக பெற முடியும் .

1 . பணியாற்றும் இடமும் , வீட்டு கடனுக்கான வீடும் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருந்தால்
2 . இரண்டும் ஒரே நகரமாக இருந்தாலும் , வீட்டு கடனுக்கான வீடும் , பணியாற்றும் இடமும் கணிசமான தொலைவிலிருந்து . நீங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால் ,
3 . வீட்டு கடனுக்கான வீட்டில் உங்கள் பெற்றோர் குடியிருந்து , நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்குரியவை தங்களுக்கு பொருந்தியிருந்தால் வீட்டு வாடகைப்படியையும் வீட்டு கடனுக்கான வட்டியையும் வரிவிலக்காக பெறப்படும் .

( vi ) உங்கள் சம்பள பட்டியலில் வீட்டு வாடகைப்படி ( HRA ) பெறவில்லை எனில் வீட்டு வாடகைப்படி வரிவிலக்குக்கு பதிலாக , பிரிவு 80GG படி வீட்டு வாடகை செலுத்தியிருந்தால் அதிகபட்சம் ரூ . 60 , 000 / - - வரிவிலக்காக பெற முடியும் .
( vii ) நீங்கள் வீட்டு வாடகை ரூ . 3000 ! - த்திற்கு மேல் செலுத்தியிருந்தால் வாடகை ரசீதை சமர்பிக்க வேண்டும் .
( viii ) நீங்கள் வருடத்திற்கு ரூ . 1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தியிருந்தால் ( மாதத்திற்கு ரூ . 8 , 333pm ) வீட்டு உரிமையாளரின் நிரந்தர கணக்கு எண்ணை சமர்பிக்க வேண்டும் . நிரந்தர கணக்கு எண் இல்லையெனில் உரிமையாளர் அதனைப்பற்றிய சான்றிதழ் கடிதம் தர வேண்டும் .

வீட்டுக்கடன் - வட்டி மற்றும் அசல் :

1 ) வீடு கட்டுவதற்காக ( அ ) வாங்குவதற்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ . 2 லட்சம் வரையிலும் ( பிரிவு 24B ) அசலினை ரூ . 1 , 50 , 000 / - - வரையிலும் ( பிரிவு 80C ) வருமானத்திலிருந்து நீக்கி , வரிச்சலுகை பெற முடியும் . இக்கடனானது 1 . 4 . 1999க்கு பிறகு பெற்றிருத்தல் வேண்டும் . அதற்கு முன் பெற்றிருந்தால் ரூ . 30 , 000 / - - மட்டுமே வரிச்சலுகையாக பெற முடியும் . மற்றும் வீட்டு கடன் வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடத்திற்குள் வீடு கட்டியோ , வாங்கியோ இருத்தல் வேண்டும் .

2 ) வீடு புதுப்பித்தல் ( அ ) மறு சீரமைப்புக்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ . 30 , 000 / - வரை ( பிரிவு 24B ) வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெற முடியாது .

3 ) . வீடு கட்டுவதற்கோ ( அ ) வாங்குவதற்கோ வங்கியில் மட்டுமல்லாமல் , நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தியிருந்தால் அவர்களிடம் வட்டி செலுத்தியதற்கான சான்று பெற்று அவ்வட்டியினை வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . ஆனால் செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெறவேண்டுமானால் வீட்டுக் கடனை வங்கி மற்றும் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பெற்றிருத்தல் வேண்டும் ,

4 ) வீட்டுக் கடனை அடைப்பதற்கு இரண்டாவதாக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்கான கடனுக்கும் வட்டி ( அ ) அசல் வரிச்சலுகை உண்டு .

5 ) வீடு கட்டி முடிப்பதற்குள் வீட்டுக் கடனுக்கான வட்டியை , செலுத்தியிருந்தால் 5 பாகங்களாக பிரித்து கட்டி முடித்த வருடத்திலிருந்து அவ்வருட வட்டியினையும் சேர்த்து ஒவ்வொரு பகுதியாக 5 வருடங்களுக்கு வருமானத்திலிருந்து நீக்கி வரிசலுகையை பெற முடியும் .

6 ) . வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் ( அ ) பலர் இணை உரிமையாளராக இருந்து அதனை அனைவரும் திருப்பி செலுத்தியிருந்தால் தங்கள் பொறுப்பின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அனைவரும் வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . ஒவ்வொருவருக்கும் வட்டியில் உச்சவரம்பான ரூ . 2 லட்சத்தையும் அசலில் ரூ . 1 , 50 , 000 / - லட்சமும் வரிச் சலுகையாக பெற முடியும் .

7 ) . வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் ( அ ) பலர் இணை உரிமையாளர்களாக இருந்து ஒருவர் மட்டுமே வீட்டுக் கடனை செலுத்தியிருந்தால் , அவர் மற்ற இணை உரிமையாளர்களிடம் , அவர் மட்டும் வீட்டுக்கடனை செலுத்தியதாக ஒரு எளிய ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு , மொத்த வட்டி மற்றும் அசலையும் வரிசலுகையாக பெற முடியும் .

8 ) . ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்குமாயின் இரண்டு வீடுகளை வீட்டினை அவர் குடியிருக்கும் வீடாகவும் ; மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டதாகவும் வருமான சட்டப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . குடியிருக்கும் வீட்டிற்கும் மற்ற வீடுகளுக்கும் தனிதனியே வட்டியை வரி சலுகையாக பெற முடியும் . வாடகையை வீட்டு வருமானமாக காட்ட வேண்டும் .

9 ) . பிரிவு 71பி யின் படி குடியிருக்கும் வீடு + வாடகைக்கு விட்டது சேர்ந்து இழப்பு ரு . 2 , 00 , 000 / - வரை வரி சலுகை பெற முடியும் . மீத இழப்பினை அடுத்த 8 வருடத்திற்கு முன்னெடுத்து செல்லாம் .
Read More »

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி - முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த CEO உத்தரவு.

பள்ளி மேலாண்மைக் குழு - விழிப்புணர்வு பேரணி 

2019 - 20 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே இப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு பேரணி ஒன்றினை மேற்கொள்ள சார்ந்த வட்டார கல்வி அலுவலர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ ) , வட்டார பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

குறிப்பு -

1 . விழிப்புணர்வு பேரணி நடைபெறும் நாள் - 21 . 01 . 2020 , அன்று காலை 9 . 00 மணியளவில்

2 . விழிப்புணர்வு பேரணி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்களைக் கொண்டு நடைபெறுதல் வேண்டும் .

3 . மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தும் , பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .

4 . தேசிய நெடுஞ்சாலை , மாநில சாலைகள் போன்ற போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்துவதை தவிர்த்தல் வேண்டும் .

5 . குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளுதல் வேண்டும் .
Read More »

பள்ளிப்பாடத் திட்டத்தில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்படுமா?

பள்ளிப் பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த தகவல்கள் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடத்தப்பட்டது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 700-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஜல்லிக்கட்டு தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ''ஜல்லிக்கட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே குறுந்தகடுகள் வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்படும்போது கூடுதலாகப் படிக்கும் சுமை ஏற்படும். பெற்றோர்கள் கேட்கும் கேள்வியே பாடப்புத்தகங்களின் பக்கங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

எனினும் இதுகுறித்து கல்வியாளர்கள், முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேபோல மூத்த அமைச்சர்களிடமும் ஜல்லிக்கட்டைப் பாடத்தில் சேர்ப்பது குறித்துக் கலந்து ஆலோசிக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One