Search

அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு.

Wednesday 10 November 2021

GO NO : 79 , DATE : 9.11.2021

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர் . குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் , 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.








Read More »

நவ. 13ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு.,

ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி நகரும் என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.




இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் (நாகை) அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



Read More »

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க 20.11.2021 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!





நடைபெறவுள்ள ஜனவரி 2022 தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More »

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு


3 ஆண்டுகாலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கனமழை காரணமாக இன்று (11.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக இன்று  (11.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


1)கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. ஆசிரியர்களும் யாரும் பள்ளி வரவேண்டாம்:- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

2) சேலம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

3) இராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

4) வேலூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

5) விழுப்புரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 


6) திருவண்ணாமலை மாவட்டம்


7) கன்னியாகுமரி மாவட்டம் 

8) தர்மபுரி மாவட்டம் 






9) திருப்பத்தூர் மாவட்டம் 

10) கிருஷ்ணகிரி மாவட்டம்

11) ஈரோடு மாவட்டம்




1)நாகை-2 நாள்- பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


2.திருவாரூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)








3.மயிலாடுதுறை-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


4.தஞ்சை -2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


5.சென்னை-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


6.திருவள்ளூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


7.காஞ்சிபுரம்-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


8.செங்கல்பட்டு-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


9.கடலூர்-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)
Read More »
 

Most Reading

Tags

Sidebar One