Search

IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...!

Wednesday 2 August 2023

 

IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...!


✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் 7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.


✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும்  மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு  மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023


📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

 

https://nmcep.tndge.org/ 


மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

யுபிஎஸ்சி தேர்வரா நீங்கள்? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதன் மூலம் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023-24 பட்ஜெட் உரையின்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக  சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.


நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.


இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக. 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆக. 17 கடைசி தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read More »
 

Most Reading

Tags

Sidebar One