Search

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

Tuesday 19 November 2019


மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர், புகைப்படக் கலைஞர், எலக்ட்ரீசியன், லைட்மேன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 36

நிர்வாகம்: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம்: புதுதில்லி



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Film Producer - 12.
பணி: Sound Recordist Grade-I - 01
பணி: T.V. Producer Grade-I - 01
பணி: Assistant Engineer Gr. 'A - 05
பணி: T. V. Producer Grade-II - 02
பணி: Script Writer - 01
பணி: Cameraman Grade-II - 02
பணி: Engineering Assistant - 01
பணி: Audio Radio Producer Grade III - 01
பணி: T. V. Producer Grade-Ill - 03
பணி: Field Investigator - 01
பணி: Technician Grade-I - 07
பணி: Floor Assistant - 02
பணி: Film Assistant - 02
பணி: Photographer Grade-Il - 01
பணி: Electrician - 01
பணி: Lightman - 01
பணி: Dark Room Assistant - 01
பணி: Carpenter - 01
பணி: Film Joiner - 01



கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை Secretary, NCERT at New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: www.ncert.nic.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சான்றொப்பமிட்டு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Under Secretary, CIET NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019


மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncert.nic.in அல்லது http://www.ncert.nic.in/announcements/vacancies/vacancies.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Read More »

கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலை

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து வரும் 22 ஆண் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 300

நிர்வாகம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - 56,500

நிர்வாகம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 45,460



நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - 10
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800

நிர்வாகம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62,800

வயதுவரம்பு: 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.



விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு பணியிடத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.12.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More »

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



நிர்வாகம்: தேசிய மாணவர் படை

பணியிடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:
பணி: Driver - 04
சம்பளம்: மாதம் ரூ.19500-62000

பணி: Store Attendants - 1
சம்பளம்: மாதம் ரூ.15900-50400

பணி: Office Assistants - 02
பணி: Chowkidar
பணி: Boat Keeper - 01
சம்பளம்: மாதம் ரூ.15700-50000

பணி: Boat Lascasr
சம்பளம்: மாதம் ரூ.15700-50400



தகுதி: அனைத்துப் பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும், மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 13 (TN) Bn NCC, No. 161, Periyar EVR High Road, Kilpauk, Chennai -600 010.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2019
Read More »

ரூ.59 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழக அரசு நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மாநில அளவிலான நிதி நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலிட்டூக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர், முதுநிலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்: 39

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: மேலாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 05

பதவி: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.56,900 - 1,80,500




பதவி: முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 10

பதவி: முதுநிலை அலுவலர் (நிதி)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், பிசி, எம்பிசி, டிசி மற்றும் பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்





தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சிஏ, ஐசிடபுள்ஏ மற்றும் நிதியியல் பிரிவில் எம்பிஏ, எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி, டிஏபீ பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800 + 18 சதவீதம் ஜிஎஸ்டி, மற்ற பிரிவினர் ரூ.400 + 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.





விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tiic.org/Recruitment_Notification_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2019. தேர்வு மையம் குறித்த தகவல் பதிவிறக்கம் செய்யப்படும் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2019
Read More »

பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க?

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பொறியாளர், குழு தலைவர், அணித் தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தொலையுணர்வு தகவல் தொடர்பு மையம்

மொத்த காலிப் பணியிடம் : 68

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

பணி : Group Head - Spatial Data and Database Management - 01

ஊதியம் : மாதம் ரூ.1,75,000 முதல் ரூ.2,25,000 வரையில்

பணி : Group Head - Application Development - 01

ஊதியம் : மாதம் ரூ.1,75,000 முதல் ரூ. 2,25,000 வரையில்




பணி : Team Lead - Web and Mobile application development - 03

ஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்

பணி : Team Lead - Application Support - 01

ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்

பணி : Test Lead Software Testing - 01

ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்

Application Development Team:

பணி : Sr. Analyst




காலிப் பணியிடங்கள் : 10

ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரையில்

பணி அனுபவம் : 6 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி : Analyst

காலிப் பணியிடங்கள் : 15

ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில்

பணி அனுபவம் : 4 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : பொறியாளர்

காலிப் பணியிடங்கள் : 05

ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையில்

பணி அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.




பணி : Team Lead - Data and Database

காலிப் பணியிடங்கள் : 01

ஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்

GIS Data and Database Team :

பணி : Sr. Analyst

காலிப் பணியிடங்கள் : 10

ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரையில்

பணி அனுபவம் : குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி : Analyst

காலிப் பணியிடங்கள் : 10

பணி அனுபவம் : 5 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில்

பணி : Project Management Consultants




காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்

பணி : Business Consultants

காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 வரையில்

பணி : Trainee - GIS Engineer

காலியிடங்கள் : 03

ஊதியம் : மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில்

பணி அனுபவம் : குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Apprentice

காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Geoinformatics, Geology, Geography, Remote Sensing, equivalent போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.




வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். 25 வயதிற்கு உட்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.karnataka.gov.in/ksrsac என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://kgis.ksrsac.in/apply/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதள முகவரியினைக் காணவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One