Search

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரி வழக்கு: மேலும் 48 ஆசிரியர்களை விடுவிக்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday 3 June 2020

ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உட்பட 5 ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் இதே கோரிக்கைக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் இருந்து பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரலில் ஓய்வு பெற வேண்டிய நிலையில் பணி நீட்டிப்பு பெற்ற 48 ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில், மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். மனுதாரர்களுக்கு 3 மாதத்தில் ஓய்வூதியப்பலன்கள் வழங்கப்படும் என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ஓய்வு பெறும் வயது உயர்வு அரசாணை அமலுக்கு வரும் தேதி நிர்ணயம் செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளது. இது எந்த நோக்கத்திற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேறுவதாக இல்லை.திய மனுதாரர்கள் இன்னும் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை. 

எனவே புதிய மனுதாரர்களையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றால், தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜூன் 12-க்கு ஒத்திவைத்து அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார்
Read More »

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் - அனைத்து நிலை பணியாளர்களுக்கும் கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 03.06.2020

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் - அனைத்து நிலை பணியாளர்களுக்கும் கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 03.06.2020

Read More »

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈடுபடுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

Read More »

பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்

பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இம்மாதம் நடக்கஉள்ள பொதுத்தேர்வின் போது, ஒவ்வொரு தேர்வறையிலும், 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் 10ம் வகுப்பு தேர்வுக்கு, 12 ஆயிரத்து, 690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவர் பிளஸ் 1 தேர்வுக்கான, 7,400 தேர்வு மையங்களில், 8.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மார்ச், 24ல் தேர்வு எழுதாத, 36 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் இந்த தேர்வு பணிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் மற்றும், 1.66 லட்சம் பணியாளர் கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என, அனைவருக்கும், 46.37 லட்சம் மறு பயன்பாட்டு, முக கவசங்கள் வழங்கப்படும் தேர்வு எழுத வரும் வெளி மாநில, மாவட்ட மாணவர்களுக்கு, தனிமைப்படுத்துதலில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.அவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் மாணவர் விடுதிகள், வரும், 11 முதல் தேர்வு முடியும் வரை திறந்திருக்கும். இந்த தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு, 'இ - பாஸ்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அனைத்து தேர்வு மையங்களிலும், கைகழுவும் சோப்பு மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள், பங்கேற்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.10ம் வகுப்பு பொது தேர்வுக்குஇன்று, 'ஹால் டிக்கெட்' வெளியீடுபத்தாம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன், 15 முதல், 25ம் தேதி வரை நடக்க உள்ளது.

ஜூன், 16ல், பிளஸ் 1 தேர்வு; ஜூன், 18ல் பிளஸ் 2 தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியிடப்படுகிறது.தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் பேசி, தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, ஹால் டிக்கெட்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
Read More »

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் - தேர்வுத்துறை

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்

http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..


கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதவுள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 04.06.2020 ( வியாழக் கிழமை ) பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளி மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தில் மாற்றம் இருப்பின் , அத்தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு மையத்தின் பெயரை சுழித்து அத்தேர்வு மையத்திற்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள மாற்று தேர்வுத் மையத்தின் பெயரை சிவப்பு மையில் எழுதி மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

மேலும் , தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து தாங்களே தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் செய்யப்பட்டுள்ளது. இவ்விவரத்தினை தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவித்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை வழங்க வேண்டுமென பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Read More »

08.06.2020க்குள் ஆசிரியர்கள் அனைவரும் பணிசெய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!


வரும் 8ஆம் தேதிக்குள் பணிசெய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.
Read More »

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் , தேர்வு நடத்துவது நல்லது , அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது  என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
Read More »

2019-20 ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்றவர்களை பணியிலிருந்து விடுவிக்காத ஆசிரியர்களின் விவரம் கேட்டு இயக்குநர் செயல்முறைகள்!




Read More »

மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்- சுற்றறிக்கை


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி  உள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமானதாக  உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கூடுதலாக தேவைப்படின் அருகாமையில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் இருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும்,

அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பள்ளியில் தயார் நிலையில் வைக்குமாறும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One