Search
கனமழை காரணமாக இன்று (27.11.2021) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Friday 26 November 2021
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதி: அரசாணை வெளியீடு.!
Friday 19 November 2021
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்று தாக்கமானது படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களாக கருதக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்கள், அந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென்று, தற்போது பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இதுவரை 75 சதவீத குறைவான நபர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அதில், 36 சதவீத உட்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த இருக்கிறார் என்றும், இதன் காரணமாக இந்த மாதம் நவம்பர் மாத முடிவில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கானது சுகாதாரத்துறை தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இல்லை எனில் அந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்றவர்களின் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் .. தமிழக அரசு அதிரடி .!!
பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்ல உள்ளோம் என்றார்.
மேலும் பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், மாணவர்கள் எந்த எண்ணை புகார் கொண்டு, புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது எனவும், இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
கனமழை காரணமாக இன்று (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி )
2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )
5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
6. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
7. கடலூர் ( பள்ளி மட்டும்)
8. கள்ளகுறிச்சி ( பள்ளி, கல்லூரி )
9. திருவள்ளூர் ( பள்ளி மட்டும்)
10. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும்
தமிழகத்தில் பொதுத்தோவுகள் தள்ளிப்போக வாய்ப்பு.!
Thursday 18 November 2021
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்களை முடிப்பதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோவுகளை வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தாமல், மே முதல் வாரத்தில் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிகழ் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இரு கட்டங்களாகத் திறக்கப்பட்டன.
ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும், அடுத்தகட்டமாக ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தொடா்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவா்களுக்குப் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத் தோவுகளை மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசுத் தோவுத் துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவா்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப் போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே, மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவுக்குத் தயாராவதற்கு வசதியாக இரண்டு மாதங்கள் தள்ளிவைத்து பொதுத்தோவு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக, மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தோவை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
பள்ளிகளில் இனி சனிக்கிழமை வகுப்புகள் படிப்படியாக தளர்த்தப்படும்.! - அமைச்சர் அதிரடி.!!!
Wednesday 17 November 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த வருடம் எப்போதும் போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும். மேலும் ஆசிரியர்கள் பணியிடமாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கனமழை -இன்று (18.11.2021) வியாழக்கிழமை - எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
16. நாகை ( பள்ளி , கல்லூரி )
17. கடலூர் ( பள்ளி மட்டும்)
18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
20. சேலம் ( பள்ளி மட்டும்)
21.தர்மபுரி (பள்ளி, கல்லூரி )
22.திருவண்ணாமலை (பள்ளிகள் மட்டும் )
23. திருச்சி ( பள்ளி மட்டும் )
24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
25. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )
26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )
பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவன்! எதிரே வந்து 'ஷாக்' கொடுத்த உதயநிதி, கல்வி அமைச்சர்.!
Tuesday 16 November 2021
பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவனுக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் எதிரே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்டன. இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, கோவை ஆனைமலை அருகே படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், ஆனை மலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றனர்.
பள்ளிக்கூட வாசல் அருகே இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெளியே செல்வதற்காக வந்த சிறுவன், இருவரையும் பார்த்து திரும்பி பள்ளியை நோக்கி சிறிது தூரம் ஓடினான்.
அவனிடம், 'உன்னைய பார்க்கத்தான் உதயநிதி வந்துள்ளார்' என்று அமைச்சர் கூற, சிறுவன் அதைக் கேட்டு விட்டு பள்ளிக்குள் சென்றான்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய இந்த வீடியோவும், ஃபோட்டோக்களும் பெரும்பாலான வாட்ஸ்ஆப் குரூப்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது 'ஸ்கூலை கட் அடிக்க முயன்ற சிறுவன், கல்வித்துறை அமைச்சரிடமே சிக்கினான்' என்ற ரீதியில் மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீம் வீடியோவை வெளியிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த வீடியோவும், அதற்கு ட்விட்டர் பயனாளர்களின் கமென்ட்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.
சிறுவன் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது அமைச்சரின் கண்ணில் பட்டுள்ளான். ஆனால் அவன் கட் அடித்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை, ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் கூட வீட்டிற்கு கிளம்பியிருக்கலாம். மீம்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யாக இருந்து, அதனால் சிறுவனும், அவனது குடும்பத்தாரும் வருத்தப்பட்டிருப்பார்கள் என்றால் அதற்கு சமூகம்தான் பொறுப்பு.
கனமழை - இன்று (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
Thursday 11 November 2021
15) கிருஷ்ணகிரி மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும்
16)திருப்பத்தூர் மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும்
அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு.
Wednesday 10 November 2021
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர் . குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் , 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.
நவ. 13ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு.,
தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் (நாகை) அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க 20.11.2021 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
3 ஆண்டுகாலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று (11.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.
Sunday 7 November 2021
கனமழை விடுமுறை அறிவிிப்பு : 08.11.2021
Flash News : கனமழை - 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு
Tuesday 2 November 2021
கனமழை விடுமுறை அறிவிிப்பு : 03.11.2021