கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்று தாக்கமானது படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களாக கருதக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்கள், அந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென்று, தற்போது பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இதுவரை 75 சதவீத குறைவான நபர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அதில், 36 சதவீத உட்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த இருக்கிறார் என்றும், இதன் காரணமாக இந்த மாதம் நவம்பர் மாத முடிவில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கானது சுகாதாரத்துறை தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இல்லை எனில் அந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்றவர்களின் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
No comments:
Post a Comment