Search
7th Pay Commission பிறகு GROUP A, B, C, D அரசு ஊழியர்கள் யார், யார்?
Thursday 18 June 2020
Tags:
KALVISEITHI
பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை முடக்கிய கொரோனா ; ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் குழந்தைகள்
பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிவருகின்றன' என்று சமீபத்தில் சொன்னார் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பள்ளிக்கூடங்கள் என்பது கல்வி சொல்லித்தரும் இடமாக மட்டும் இருப்பதில்லை. பள்ளிக்கூடங்களின் விடுமுறை நாள் என்பது கல்வி போதிக்கப்படுவது இல்லாத நாள் மட்டுமில்லை. இந்தியாவின் அங்கன்வாடிகளும், அரசு பள்ளிக்கூடங்களும் செயல்படவில்லை என்றால் இங்குக் குழந்தைகளுக்குச் சத்துணவாகக் கிடைக்கும் உணவும் கிடைக்காமல் போகும். தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், இந்தியா முழுக்க பள்ளிக்கூடங்களும், அங்கன்வாடிகளும் இயங்காமல் உள்ளதால் நம் நாட்டுக் குழந்தைகள் போதிய உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், அவை வளர்ந்த பின் எந்த நோய்களும் அவர்களைத் தாக்காமல் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் அவர்களின் தொடக்கக் காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் ஏழை குழந்தைகளுக்கு அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களின் மூலமாகவும், பள்ளிகளின் மூலமாகவும் அரசு சார்பில் சத்துணவு வழங்கப்படுகிறது. அரசி, முட்டை, பால், பருப்பு என ஒவ்வொரு மாநில அரசும் வழங்கும் உணவு மாறுபட்டாலும் பல லட்ச ஏழை குழந்தைகளுக்கு இவை ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு முக்கியமான அரசுத்திட்டம்.
இப்போது லாக்டவுன் காரணமாக இந்த மதிய உணவுத்திட்டம் செயல்படாமல் இருப்பதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதோடு மட்டுமில்லாமல் அவர்கள் கோவிட் 19 நோய் தாக்கினால் அதிக பாதிப்பு ஏற்படும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இத்தனை வருடங்களாக ஒவ்வொரு மாநில அரசும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு குறைபாட்டைப் போக்கச் செயல்படுத்தி வந்த திட்டங்களும், பல்வேறு அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பும் பயனற்றதாகி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஒரு குழந்தை குறைபாட்டோடு வளர்கிறது என்பதை மூன்று காரணிகளை கொண்டு அளவிடலாம். வயதுக்கு ஏற்ற உயரத்தைவிடக் குறைவாக இருப்பது, உயரத்துக்கேற்ற எடையை விடக் குறைவாக இருப்பது மற்றும் வயதுக்கேற்ற எடை இல்லாமல் குறைவான எடையில் இருப்பது. இந்தியாவைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டு வரை உள்ள நிலவரப்படி 5 வயதுக்குள்ளான குழந்தைகளில் 39% சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தைவிடக் குறைவான உயரத்தில் உள்ளனர். 13% சதவீதத்தினர் உயரத்துக்கேற்ற எடையில்லாமல் குறைவான எடை கொண்டுள்ளவர்களாகவும், 33% சதவீதத்தினர் வயதுக்கேற்ற எடை இல்லாமல் குறைவான எடையில் உள்ளதாகவும் 'தி லான்செட்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான அந்தந்த நாட்டு அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுக்க ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் 6000 பேர் இறக்கக்கூடும் என யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகி அதன் மூலமாக இறப்புக்கும் ஆளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு உள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டை 50% சதவீத அளவில் குறைக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால், இந்த இலக்கை இந்தியா அடைய பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் 68% சதவீத 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு, தாய் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருப்பதால் நிகழ்வதாக 'இந்தியா ஸ்பெண்ட்' செய்தி நிறுவனம் கடந்த மே மாதம் குறிப்பிட்டுள்ளது.
இது எல்லாவற்றையும் விட கரோனா வைரஸ் பரவி கோவிட் 19 நோய் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு உள்ள குழந்தைகள் இந்த கரோனா வைரஸுக்கு எளிய இலக்காக மாறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிட் 19 நோய் தாக்கும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை உயிர்பிழைத்தாலும், வளர்ச்சியில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தையாக வளரும் எனவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து குறைபாட்டோடு சம்பந்தமுடையது என்பதால், கோவிட் 19 நோய் தாக்கினால் பாதிக்கக்கூடிய நபர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டோடு உள்ள குழந்தைகளும் அடங்குவார்கள் என்பதே உண்மை.
இந்திய அளவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மாணவர்கள் இந்த சத்துணவு கிடைக்காமல் அவதிப்பட்டே வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் அரிசி, முட்டை என மதிய உணவு வழங்கப்பட்டு வந்த குழந்தைகள் எல்லாம் கடந்த 3 மாதங்களாக அந்த ஒரு வேளை சத்தான உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை ஒருவரிடம் இது குறித்துப் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் "கடந்த மூன்று மாதங்களாகவே பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் சத்துணவு வழங்குவதும் நின்றுவிட்டது.
நான் பணிபுரியும் பள்ளியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பவர்கள். மேலும் எங்கள் பள்ளி அமைந்திருக்கும் சுற்று வட்டாரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும், குறு, சிறு நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள். இதில் அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை நம்பியிருப்பவர்களும் அடக்கம். இவை அனைத்திலும் கடந்த மூன்று மாதமாக பணிகள் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு வருமானம் என்பது இல்லாமல் ஆகிவிட்டது." என்று லாக்டவுன் காரணமாக தன் மாணவர்களின் குடும்பங்களில் வருமானம் மோசமாக பாதிப்படைந்துள்ளதைத் தெரிவித்தார்.
மேலும், "லாக்டவுன் காலத்துக்கு முந்தைய சாதாரண நாட்களிலேயே இந்த குழந்தைகள் வீடுகளில் தினசரி சத்தான உணவு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆனால் இப்போது பள்ளியிலிருந்து வரும் சத்துணவும் இல்லை, வருமானமும் இல்லை என்பதால் நிலைமை மிக மோசமாகவே உள்ளது." என்று தெரிவித்தார்.
சென்னை போன்ற பெருநகரங்களுக்குள் அமைந்திருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் பிழைப்புக்காகத் தமிழகத்தின் வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்தவை. தற்போது லாக்டவுன் காரணமாகவும், வேலை வாய்ப்புகள் அற்றுப் போயிருப்பதாலும் இதில் பெரும்பாலான மாணவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளன. அங்கும் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றே.
இது ஒரு புறமிருக்கச் சத்துணவுக்காகப் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்களான அரசி, பருப்பு உள்ளிட்டவை சேமிப்பு கிடங்குகளில் எந்த கவனிப்பின்றி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நாம் இது தொடர்பாகப் பேசிய ஆசிரியர் ஒருவர், அவருடைய பள்ளியில் உள்ள இந்த சத்துணவு சம்பந்தமான மளிகைப் பொருட்கள் அனைத்தும் அந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிகழ்வுகளும் நடந்துவருகின்றன. இது அரசாங்க நிறுவனங்களில் வழக்கமாக இருந்த வழங்கல் முறைகள் கரோனா பாதிப்பால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகிறது.
பள்ளிகள் இப்படி இருக்க ஒரு சில அங்கன்வாடிகளைப் பொருத்த அளவில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அந்த அங்கன்வாடிகளைச் சேர்ந்த குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, முட்டை போன்றவற்றை வாரம் ஒரு முறை வழங்கப்பட்டுவருகிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் ஒருவேளை கரோனா பரவலைத் தடுக்க அரசு அங்கன்வாடி பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கரோனா தடுப்புப் பணிகளுக்காக பயன்படுத்த முடிவெடுக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உணவுப் பொருட்களை மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று சேர்க்க முடியாத நிலையும் ஏற்படும்.
இப்படிபட்ட ஒரு இக்கட்டான சூழலைக் கட்டுப்பாடில்லாமல் ஏற்பட்டு வரும் கரோனா தொற்று என்பது மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் குடிசைப்பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் அரசின் அங்கன்வாடிகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் பயில்கிறார்கள். அதே போல் இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் கூலி வேலைப் பார்ப்பவர்கள். அவர்களின் வருமானம் என்பது கடந்த மூன்று மாதமாகப் பெருமளவில் இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் கரோனா பரவும் இந்த காலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையையும் மேல் குறிப்பிடப்பட்டுள்ள சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கோவிட் 19 நோய் என்பது எவ்வளவு கொடியது என்றும், அரசின் முன் எவ்வளவு பெரிய பொறுப்பும், கவனம் கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை இருக்கிறது என்பதும் விளங்கும்.
ஜீன்- 2020 மாத சம்பளப் பட்டியலை IFHRMS ல் தயார் செய்து epayroll-ல் Tally செய்ய வேண்டும் - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்
அனைத்து பணம் பெற்று வழங்கும்அலுவலர்களும் DDO - Data validation நிறைவுசெய்து ஜீன்- 2020 மாத சம்பளப் பட்டியலைIFHRMS மென்பொருளில் தயார் செய்து epayroll-ல் தயார் செய்த பட்டியலுடன் சமன்செய்து (epayroll bills shall be tallied with IFHRMS bills), IFHRMSமென்பொருளில் தயார் செய்தபட்டியலின் annexure II enfacement slip pay statement ), ஆகியவற்றின் நகலினை (print out)இம்மாத (ஜீன்--2020) சம்பளப்பட்டியலுடன்இணைத்து சழர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது .
கருவூல அலுவலர் இராமநாதபுரம்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடையச்செய்யும் அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடையச்செய்யும் அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், வருகைப் பதிவேடு அடிப்படையிலும் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதேபோல 11ஆம் வகுப்பில் கடைசி பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்கள் ஏற்கனவே பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது அனைத்து தனியார் பள்ளிகளும் மாணவர்களின் விடைத் தாள்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களை தேர்வு எழுதச் சொல்லி விடைத்தாள்களை பெற்று வருவதாக புகார்கள் வரத் துவங்கியுள்ளன. தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த கருத்தை பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. எனவே முதலமைச்சர் அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேர்வுத்துறை வகுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்
Tags:
educational news
பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர்கள் மற்றும் கட்டிட பொறியாளருக்கு ஏப்ரல் மாத ஊதியம் பிடித்தம், நிலையான FTA போக்குவரத்து பயணப்படி வழங்க கோரிக்கை
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை கீழ் ஒருங்கிணைந்த கல்வி இத்திட்டத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மானியங்களை தணிக்கை செய்யும் பொருட்டு 50 பள்ளிகளுக்கு ஒரு கணக்காளர் வீதம் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்கள் என்று தமிழகம் முழுவதும் பணி செய்து வருகிறோம் மேலும் 50 பள்ளிகளை பார்வையிடும் பொருட்டு நிலையான போக்குவரத்து பயணப்படி என்று ரூபாய் 1500 வீதம் ஒவ்வொரு மாதமும் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு AWP&Bவில் BRC தலைப்பின் கீழ் ஊதியமாக வழங்கிய நிதியை ஊதியமாக எங்களுக்கு வழங்காததால் மிகக் குறைந்த ஊதியம் பெற்று பெரும் துன்பத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தற்போதைய கொரானா நோய்த்தொற்று உள்ள நிலையில் ஏப்ரல் மாதம் ஊதியம் பிடித்தம் ( நிலையான போக்குவரத்து பயணப்படி (FTA) ) செய்து மே மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊதியம் பிடித்தம் என்பது ஏற்கனவே குறைவான ஊதியம், பேருந்து கட்டணம் உயர்வால் அலுவலகம் மற்றும் பள்ளி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் இத்திட்டத்தில் எங்களுடன் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வழங்க மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சிறப்பாசிரியர்களுக்கு போக்குவரத்து பயணப்படி ஏப்ரல் 20 மற்றும் மே 20 மாதத்திற்கு மே 2020 மாத ஊதியத்துடன் வழங்கப்படுகின்றது.எனவே வட்டார வள மைய கணக்காளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர்கள், கட்டிட பொறியாளர்கள் நிலையான போக்குவரத்து பயணப்படியும் வழங்க வேண்டும் எங்கள் மீது கருணை உள்ளத்தோடு நிலையான பயணப்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

வா.ராஜ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் (SSCSWA
Tags:
KALVISEITHI,
tneducationalnews
தமிழ் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்
தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருது கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப 1018 ஊர் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றும் அரசின் உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சட்டப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது தமிழில் அழைக்கக்கூடிய ஊர்களின் பெயரை ஏற்றார் போலவே ஆங்கிலத்திலும் அந்த சொற்களின் எழுத்து அமைக்கப்பட்டு ஒலி புணர்ந்து 1018 ஊர்களின் பெயர்களை மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டது.
அதுமட்டு மல்லாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சீராக ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர் என்ற மாவட்டங்களின் ஆங்கில சொற்தொடரும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியீடு தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தது. அதாவது பல ஊர்களின் பெயர் சீராக இல்லை, சொற்தொடர் தவறாக உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இத்தகைய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அமைச்சர் பாண்டியராஜன் இந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவித்ததாவது: இந்த அறிவிப்பு மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அதை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து 3 நாட்களுக்குள் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை திரும்பப்பெற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:
GENERAL NEWS
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நடிமுறையில் இருந்து வரும் பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக நான்கு கல்வியாளர்கள் மற்றும் கல்வி துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய சூழலில்மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்றும், முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு இந்த முடிவை உரிய நேரத்தில் எடுக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Read More »

DSE-தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை
2019ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை
http://nationalawardstoteachers.mhrd.gov.in/
என்கிற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
2019ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது
NATIONAL AWARDS TO TEACHERS
The purpose of National Awards to Teachers is to celebrate the unique contribution of some of the finest teachers in the country and to honor those teachers who through their commitment and industry have not only improved the quality of school education but also enriched the lives of their students.
Conditions of Eligibility of Teachers
i) School teachers and Heads of Schools working in recognized primary/middle/high/higher secondary schools under the following categories:
a) Schools run by State Govt./UTs Administration, schools run by local bodies, schools aided by State Govt. and UT Administration.
b) Central Govt. Schools i.e. Kendriya Vidyalayas (KVs), Jawahar Navodaya Vidyalayas (JNVs), Sainik Schools run by Ministry of Defence (MoD), Schools run by Atomic Energy Education Society (AEES).
c) Schools affiliated to Central Board of Secondary Education (CBSE) (other than those at (a) and (b) above)
d) Schools affiliated to Council for Indian Schools Certificate Examination (CISCE) (Other than those at (a), (b) and (c) above)
ii) Normally retired teachers are not eligible for the award but those teachers who have served a part of the calendar year (at least for four months i.e. upto 30th April in the year to which National Awards relate) may be considered if they fulfill all other conditions.
iii) Educational Administrators, Inspectors of Education, and the staff of training Institutes are not eligible for these awards.
iv) Teacher/Headmaster should not have indulged in tuitions.
v) Only regular Teachers and Heads of Schools will be eligible.
vi) Contractual Teachers and Shiksha Mitras will not be eligible.
Procedure for application and selection:
i) All the applications would be received through an online web portal.
ii) MHRD would ensure coordination with States/UTs regarding timely entry into the portal and resolution of technical and operational issues during data entry into portal through the portal development agency.
iii) MHRD will bear the entire expenditure for development and maintenance of the portal.
iv) In case of State/UTs, teachers and heads of schools themselves shall apply directly by filling the application form online through the web portal before the prescribed cut-off date.
v) Every applicant shall submit a portfolio, online along with the Entry Form. The portfolio shall include relevant supporting material such as documents, tools, reports of activities, field visits, photographs, audios or videos etc.
vi)Undertaking by the applicant: Each applicant shall give an undertaking that all the information/data submitted is true to the best of his/her knowledge and if anything is found at any later date to be untrue then he/she will be liable to disciplinary action.
Registration open. Last date for registration: 6th July, 2020
ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டுப்பாடு? - முதல்வரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான விதிமுறைகளை முதல்வரின் பரிந்துரைக்குப் பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கல்வி மிகப்பெரிய வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசுப் பள்ளிகளின் தரம் சரியில்லை என்பதாலும் ஆங்கிலவழிக் கல்விக்காகவும் பலரும் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். அங்கு எவ்வளவு கட்டணம் வசூலித்தாலும் அது பற்றி புலம்பிக்கொண்டே கட்டுவது வழக்கமாக உள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த கோடை விடுமுறைக்கு முன்னதாகவே மூடப்பட்டது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதே தெரியவில்லை. இந்தநிலையில் ஆன்லைன் வகுப்பு என்று கூறி ப்ரீகேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
9ம் வகுப்புக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஓரளவுக்கு நியமாகவே தெரிகிறது. இருந்தாலும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத குழந்தைகள் இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். நாளை பள்ளி திறந்து தேர்வுகள் நடக்கும்போது ஆன்லைன் வகுப்பில் படித்த குழந்தைக்கும் ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத குழந்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகும். ஸ்மார்ட் போன் வாங்க முடியாதது அந்த குழந்தையின் குற்றம் என்று கூற முடியாது.
மேலும் ப்ரீகேஜி போன்ற மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எதற்கு ஆன்லைன் வகுப்புகள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆன்லைன் வகுப்பு என்று கூறி பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி ஆன்லைன் வகுப்பு நடத்தும் பள்ளிகளுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் அடிப்படையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆன்லைன் வகுப்பு தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த பரிந்துரையில் மழலையர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது சரியில்லை என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் மகாராஷ்டிராவிலும் மழலையர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Online classes
33 மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் நியமனம்.. பீலா ராஜேஷிற்கும் மாவட்டம் ஒதுக்கீடு.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட பல சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் அமைச்சர்கள் தலைமையிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 33 மாவட்டங்களுக்கு மாவட்ட வாரியான சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சிறப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ், கடலூர் மாவட்டத்திற்கு சுகன்தீப் சிங் பேடி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஹர்மந்தர் சிங், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சந்திரமோகன், சேலம் மாவட்டத்திற்கு நசிமுதீன், அரியலூர் மாவட்டத்திற்கு சரவணவேல்ராஜ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தீரஜ் குமார், விழுப்புரம் மாவட்டத்திற்கு முருகானந்தம், தென்காசி மாவட்டத்திற்கு அனு ஜார்ஜ், நீலகிரி மாவட்டத்திற்கு சுப்ரியா சாகு, தர்மபுரி மாவட்டத்திற்கு சந்தோஷ் பாபு, நாமக்கல் மாவட்டத்திற்கு தயானந்த் கட்டாரியா, தேனி மாவட்டத்திற்கு கார்த்திக், மதுரை மாவட்டத்திற்கு தர்மேந்திர பிரதாப் யாதவ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் லட்சுமி பிரியா, திருப்பூர் மாவட்டத்திற்கு கோபால், வேலூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலா சாமி, கரூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார், திருச்சி மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாகர், விருதுநகர் மாவட்டத்திற்கு மது மதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜெயந்த், நாகை மாவட்டத்திற்கு முனிய நாதன், சிவகங்கை மாவட்டத்திற்கு மகேசன் காசிராஜன், திருவாரூர் மாவட்டத்திற்கு மணிவாசன், தேனி மாவட்டத்திற்கு கார்த்திக், நெல்லை மாவட்டத்திற்கு அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் உண்மை - விக்கல் எவ்வாறு ஏற்படுகிறது?
மனித உடலில் மார்பறையையும், வயிற்றறையையும் பிரிக்கக் கூடிய மெல்லிய தகடு உள்ள செவ்விற்கு உதரவிதானம் என்று பெயர். இந்தச் சவ்வு சுவாசத்திற்கு மிகவும் அவசியம்; இது ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிவதாலேயே நமக்கு விக்கல் ஏற்படுகிறது.
நுரையீரல்களுக்கு காற்று விரைந்து செல்லும் போது மூடியிருக்கும் குரல்வளை ஆண்களிடையே எழும் அதிர்வு விக்கல் என்கிறோம்.
அவசரமாக உண்ணுவதாலும், அளவுக்கு மிஞ்சிக் குடித்தாலும் சீரற்ற சுவாசம் மற்றும் வயிறானது விதானத்தை உறுத்தவே, வெறுக்கவோ செய்யும்போதும் விக்கல் ஏற்படுகிறது

Science fact
எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. 8 க்குள் ஒரு யோகா- சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி.
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. 8 க்குள் ஒரு யோகா- சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி.
ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன
Tags:
Health tips
அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை
முழுமையான பொதுமுடக்கத்தின்போது அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக, புதன்கிழமை இரவு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும், முழு பொதுமுடக்கத்தில் அரசு தெரிவித்த அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படும். மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனை கூடங்கள், மருந்தங்கள்,ஆம்புலன்ஸ்,அமரா் ஊா்தி சேவைகளுக்கு அனுமதி உண்டு. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியாா் வாகனம், ஆட்டோ, டாக்ஸி பயன்படுத்த அனுமதிக்கப்படும். வேறு காரணங்களுக்கு வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது.
பொதுமுடக்கத்தின்போது பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள கடைகளிலேயே பொருள்களை வாங்க வேண்டும். தேவையின்றி பிற இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியா்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தண்ணீா், பால்,பெட்ரோல், சமையல் எரிவாயு, வங்கிகள் ஆகியவற்றின் ஊழியா்கள் அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு,உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை: விமானம், ரயில் பயணிகள் தங்களது பயணச்சீட்டை கையில் வைத்திருத்தல் வேண்டும். வாகனச் சோதனையின்போது பயணச் சீட்டை கண்டிப்பாக காவல்துறையினரிடம் காட்ட வேண்டும். அனுமதிச் சீட்டு இன்றி வாகனங்களில் சாலையில் சுற்றித் திரிபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். போலியான அனுமதி சீட்டு மூலம் வாகனங்களை இயக்கினால், 144 தடைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோா்,மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள்,வீட்டில் தங்கியிருக்கும் முதியோா்கள்,நோயாளிகள் ஆகியோருக்கு உதவி புரிவோா் செல்வதற்கு வாகன அனுமதி வழங்கப்படும். இவா்கள் தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டும். இந்த உத்தரவுகளுக்கு சுகாதாரத்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, நீதித்துறை, பத்திரிகை துறை ஆகிய துறைகளைச் சோந்தவா்கள் அரசு ஏற்கெனவே அறிவித்தப்படி விதி விலக்குவாா்கள்.
இது தொடா்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-23452330,044-23452362 ஆகிய தொலைபேசி எண்களையும்,90031 30103 என்ற செல்லிடப்பேசி எண்ணையும் தொடா்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்: கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப்புத்தக்கங்கள் அச்சிடும் பணியை, தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது.அதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணியை கடந்த பிப்ரவரி முதலே பாடநூல் கழகம் மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே, பொது முடக்கம் காரணமாக, அச்சிடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் தளா்வுகள் அமலானதும், கடந்த ஏப்ரல் 20-இல் மீண்டும் தொடங்கப்பட்ட புத்தக அச்சடிப்புப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
இந்தக் கல்வியாண்டுக்கான இலவச பாடப் புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு தரப்பட்டுள்ளன.அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேநேரம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூலை முதல் வாரத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவினத்துக்குரிய நிதி, இயக்குநரகம் சாா்பில் வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
அறிவியல் உண்மை - மழை பெய்யும்போது விமானம் பறக்கையில், இடி - மின்னல் ஆகியவற்றால் பாதிக்கப்படுமா?
பாதிக்கப்படும்! மின்னேற்றம் பெற்ற மேகங்களுக்கிடையே அல்லது மேகத்திலிருந்து தரைக்கோ மின்னோட்டம் பாயும்போது காற்றின் மூலக்கூறுகள் அயனிகள் ஆவதால் மின்னல் என்ற வெளிச்சமும் இடி என்ற ஓசையும் உண்டாகின்றன.
இந்த மின்னோட்டமானது கட்டிடங்களில் இறங்கி, அவற்றைச் சேதப்படுத்தாமலிருக்க, இடிதாங்கிகள் பொருத்தப்படுகின்றன.
இவற்றின் வழியாக மின்சாரம், தரைக்கு இறங்கிவிடும். இந்த மின்னோட்டம், பறக்கும் விமானத்திலும் இறங்குவதற்கு வாய்ப்பு உண்டு. இவ்வாறு இறங்கும் மின்னோட்டத்தால், விமானம் பாதிக்கப்படும்; மின்கருவிகள் (Instruments) செயலிழக்கும். அதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கும். இதைத் தவிர்க்கும் பொருட்டு; மின்னேற்றம் கொண்ட மேகங்களிலிருந்து விலகி, விமானத்தை ஒட்டிச் செல்லும்படி உச்சரிக்கப்படுகின்றன.
இடி-மின்னல் பாதிக்கப்படாதவாறு , விமானத்திலும் இடிதாங்கி உண்டு
Tags:
Science fact
கைகொடுத்த `டிவி சேலஞ்ச்’ -கேரளாவில் நடைமுறைக்குப் பழக்கப்படும் ஆன்லைன் கல்விமுறை!
- கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்வி தொடர்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில் ஜூன் 1-ம் தேதி அதிகாரபூர்வமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என அரசு முடிவுசெய்திருந்தது. எனினும் கணக்கெடுப்பு முடிவுகளின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி வசதிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தன்னார்வளர்களும் இணைந்து, அனைத்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் களமிங்கியுள்ளனர். நாட்டின் கல்விக்கான இந்த மிக முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு கட்சிகளைக் கடந்து அரசையும் தாண்டி வணிக நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உதவ முன்வந்துள்ளனர்.
பெரும்பாலும் கேரளாவின் கிராமங்களில் உள்ள மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதில் சிக்கல் நிலவுவதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது உள்ளூர்களிலே மாணவர்கள் சேர்த்து வகுப்புகளைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ``இப்படி ஊர்களில் பொதுவான வகுப்பறைகளை உருவாக்குதல் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துள்ளதை உறுதிப்படுத்த முடியும்" என 'சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் டாக்டர் ஏ பி குட்டிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில கிராமங்களில் முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு மாணவர்களுக்கு தொலைக்காட்சி முதலிய வசதிகள் செய்யப்படுகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக மாநில தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட "டிவி சேலஞ்ச்" என்ற திட்டத்தின் பகுதியாக உள்ளூர் தொழிலதிபர்கள் மூலம் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதிகள் செய்ய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வகுப்பறைகளுக்குத் தேவையான தொலைக்காட்சி மடிக்கணினி முதலிய பொருள்களை வாங்கும் செலவீனங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பாரம்பர்யமாக அறியப்படும் அங்கன்வாடி, படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம் எனக் கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் குறைந்தது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவான இடம் உள்ளது. தற்போது இந்த இடங்களிலேயே மாணவர்களுக்கான போது வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இந்த இடங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 9,200 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத சூழலில் உள்ளனர்.
வயநாட்டின் ஆளும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, சி.கே.சசீந்திரன், "1,331 புதிய பொதுவான கல்வி மையங்களை ஏற்பாடு செய்துள்ளார். பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் காலனிகளில் அமைத்துள்ளனர். "நாங்கள் ஈடுபட்டுள்ள பணி மிகப் பெரியது, மின் இணைப்புகள் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெருவதனை உறுதி செய்கிறோம். இந்த வார இறுதிக்குள் அனைத்து வசதிகளும் பொது கல்வி மையங்களில் கிடைக்கும்’’ என்கிறார்.
"மடிக்கணினிகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிவி போன்ற உபகரணங்கள் பள்ளிகளிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு வீடுகளிலேயே பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதனை அவர்கள் பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனினும் சிலர் வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிள்ளைகளின் வகுப்பிற்காக ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறார்கள்" எனக் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (KITE) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட கல்விக்கான நோடல் நிறுவனத்தைச் சேர்ந்த வி.ஜே.தாமஸ் கூறியுள்ளார்.
இந்தக் கல்வி மையங்களில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி சேனலில் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு என அனைத்துப் பள்ளி வகுப்புகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவரும் கற்க முடியாத சூழலில் வெளியான பாடப் பிரிவுகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடல்கள் மூலம் பாடம் எடுத்து கடந்த வாரங்களில் இணையத்தில் பிரபலமான சுவேதா டீச்சர் தான் அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம்.
Tags:
educationalnews
பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்; 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை.
அவர்களுக்கு மட்டும் பின்னர் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 10-ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.
தொடர்ந்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும் என்பதால் இந்த மாத இறுதியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த பணி நடைபெற்று வருகிறது என்றார். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவ செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது; இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். பள்ளிகள் திறப்பு பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்
Tags:
KALVISEITHI,
tneducationalnews
Subscribe to:
Posts (Atom)