Search

தமிழ் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

Thursday 18 June 2020


தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருது கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப 1018 ஊர் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றும் அரசின் உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சட்டப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது தமிழில் அழைக்கக்கூடிய ஊர்களின் பெயரை ஏற்றார் போலவே ஆங்கிலத்திலும் அந்த சொற்களின் எழுத்து அமைக்கப்பட்டு ஒலி புணர்ந்து 1018 ஊர்களின் பெயர்களை மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டது.

அதுமட்டு மல்லாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சீராக ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர் என்ற மாவட்டங்களின் ஆங்கில சொற்தொடரும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியீடு தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தது. அதாவது பல ஊர்களின் பெயர் சீராக இல்லை, சொற்தொடர் தவறாக உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இத்தகைய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அமைச்சர் பாண்டியராஜன் இந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவித்ததாவது: இந்த அறிவிப்பு மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அதை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து 3 நாட்களுக்குள் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை திரும்பப்பெற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One