Search

பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர்கள் மற்றும் கட்டிட பொறியாளருக்கு ஏப்ரல் மாத ஊதியம் பிடித்தம், நிலையான FTA போக்குவரத்து பயணப்படி வழங்க கோரிக்கை

Thursday 18 June 2020

தமிழ்நாடு பள்ளி கல்வி துறை கீழ் ஒருங்கிணைந்த கல்வி இத்திட்டத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மானியங்களை தணிக்கை செய்யும் பொருட்டு 50 பள்ளிகளுக்கு ஒரு கணக்காளர் வீதம் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்கள் என்று தமிழகம் முழுவதும் பணி செய்து வருகிறோம் மேலும் 50 பள்ளிகளை பார்வையிடும் பொருட்டு நிலையான போக்குவரத்து பயணப்படி என்று ரூபாய் 1500 வீதம் ஒவ்வொரு மாதமும் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு AWP&Bவில் BRC தலைப்பின் கீழ் ஊதியமாக வழங்கிய நிதியை ஊதியமாக எங்களுக்கு வழங்காததால் மிகக் குறைந்த ஊதியம் பெற்று பெரும் துன்பத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தற்போதைய கொரானா நோய்த்தொற்று உள்ள நிலையில் ஏப்ரல் மாதம் ஊதியம் பிடித்தம் ( நிலையான போக்குவரத்து பயணப்படி (FTA) ) செய்து மே மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊதியம் பிடித்தம் என்பது ஏற்கனவே குறைவான ஊதியம், பேருந்து கட்டணம் உயர்வால் அலுவலகம் மற்றும்  பள்ளி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் இத்திட்டத்தில் எங்களுடன் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வழங்க மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறப்பாசிரியர்களுக்கு போக்குவரத்து பயணப்படி ஏப்ரல் 20 மற்றும் மே 20 மாதத்திற்கு மே 2020 மாத ஊதியத்துடன் வழங்கப்படுகின்றது.எனவே வட்டார வள மைய கணக்காளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்காளர்கள், கட்டிட  பொறியாளர்கள் நிலையான போக்குவரத்து பயணப்படியும் வழங்க வேண்டும் எங்கள் மீது கருணை உள்ளத்தோடு நிலையான பயணப்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

வா.ராஜ்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் (SSCSWA

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One