Search

நிதி, தொழில்நுட்பம், ஊடகம்… இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள் இவைதான்!

Monday 10 July 2023

 நிதிச் சேவைகள், நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஊடகம் மற்றும் தங்குமிட சேவைகள் ஆகியவை தற்போது இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை தரும் சிறந்த தொழில்களாகும். லிங்க்ட்இன் வெளியிட்ட தரவுகளின்படி, இளங்கலைப் பட்டம் இல்லாதவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, இதில் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், தங்குமிடம் மற்றும் நிதிச் சேவைத் தொழில்கள் போன்றவை அடங்கும்.

பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட தொழில் வல்லுநர்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் பல்வேறு வகையான வேலைகள் உள்ளன. இளங்கலை பட்டதாரிகளுக்கு இடர் ஆலோசகர், முதலீட்டு மேலாளர், நிதி நிர்வாகி மற்றும் பல போன்ற பதவிகள் உள்ளன. எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு, டெக்னாலஜி அசோசியேட், கேட்லாக் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பிசினஸ் இன்டக்ரேஷன் அனாலிஸ்ட் போன்ற பதவிகள் உள்ளன. டிகிரி இல்லாத விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர், பயனர் இடைமுக வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு பொறியாளர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

LinkedIn இன் படி, கல்விப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பல்வேறு வேலை செயல்பாடுகள் உள்ளன. இது தயாரிப்பு மேலாண்மை, மனித வளங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் மற்றும் ஆலோசனை போன்ற துறைகளை உள்ளடக்கியது, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த எல்லா துறைகளிலும் வேலைகள் கிடைக்கும்.

மனித வளப் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப ஆட்சேர்ப்பு போன்ற பிற பதவிகள் உள்ளன. நிதி மற்றும் தொழில் நிபுணர் பிரிவின் கீழ் பொருளாளர் மற்றும் நிதி மேலாளர் பதவிகளும், ஆலோசனை பிரிவின் கீழ் வாழ்க்கை பயிற்சியாளர் போன்ற பதவிகளும் உள்ளன.

வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் ஆகியவை இன்று நுழைவு நிலைப் பதவிகளுக்குத் தேவையான சிறந்த திறன்களாகும். தரவுகளின்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மறுசீரமைக்கப்படுகிறது. நிறுவனங்கள் நெகிழ்வுத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றன, ஆன்-சைட் பதவிகள் 10 சதவீதம் குறைந்து வருகின்றன மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது நுழைவு நிலை பதவிகளுக்கு கலப்பின நிலைகள் 60 சதவீதம் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றத்தின் மூலம், புதிய பட்டதாரிகள் தேர்வு செய்வதற்கும் தொடருவதற்கும் பரந்த அளவிலான வேலை ஏற்பாடுகளைக் கொண்டுள்ளனர்.



Read More »

நெல்லை இளைஞர்களே.. சமூகநல அலுவலக உதவியாளர் பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

 சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு நெல்லையில் சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஒரு இளநிலை உதவியாளர் பணிக்கு இம்மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பணியிடம் ஒன்று12000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.35 வயதுக்குள் இருக்க வேண்டும் . தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு கீழ்நிலை மேல்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கணினி பயன்பாட்டினை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலர் , மாவட்ட சமூக நல அலுவலகம், திருவனந்தபுரம் சாலை, சுப்பிரமணியபுரம் தெரு , வ உ சி மைதானம் எதிரில், பாளையங்கோட்டை என்ற முகவரிக்குஇம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை : விண்ணப்பிக்க தஞ்சை ஆட்சியர் அழைப்பு

 தஞ்சை ‍மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பு கிடையாது மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பு கிடையாது மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக்கூடாது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..

 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை செய்ய அதாவது கவுன்சிலிங் தர ஆட்கள் தேவை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்று ரூ.1000 வீதம் மதிப்பூதிய அடிப்படையில் 180 நாட்களுக்கு வழங்கப்படும்.

என்ன தகுதிகள்?

கல்வி தகுதி : Master degree in psychology and councelling

வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை

மேற்கண்ட தகுதி உடையவர்கள் www virudhunagar.nic.in என்ற இனையத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி சான்றிதழ் நகலோடு கண்காணிப்பாளர், சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், மல்லிப்புதூர், ஶ்ரீ வில்லிபுத்தூர் (வட்டம்)  விருதுநகர் மாவட்டம்- 626141 என்ற முகவரிக்கு 17.07.2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »
 

Most Reading

Tags

Sidebar One