Search

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்?-மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

Monday 15 June 2020


தமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித் துறைக்கும் தேர்வு ரத்துக்கான அரசின் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மதிப்பெண் வழங்கும் முறையால் வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கான மதிப்பெண் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்களின் தேர்ச்சி நிலையை வைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

தற்போது, அரசு அறிவித்தபடி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் துறை வைத்துள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எளிதாக கணக்கிட்டு, பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க முடியும். ஆனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் வைத்திருப்பதுதான் வழக்கம். இதை கல்வித் துறை கண்காணிப்பதும், பதிவு செய்வதும் நடைமுறையில் இல்லை.

இதனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் நிலவரம் குறித்து அவர்கள் தரும் பட்டியலையே நம்ப வேண்டியுள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளிடையே தீவிர போட்டி நிலவும் சூழலில், சில பள்ளிகள் முதலிடம் பெறுவதற்காக மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யவும் வாய்ப்புள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை முழுமையாக இருக்கும் என்பதால், அதில் குறை காண வாய்ப்பிருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு சற்று குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

வருகைப் பதிவேடுகளுக்கு "சீல்': இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கல்வித் துறை சார்பில் அதற்கான வழிகாட்டுதல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனால், இந்த மதிப்பெண் வழங்கும் முறைக்காக, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலை உடனடியாக பெற வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு உடனடியாக பெறப்பட்டு, பாதுகாப்பாக "சீல்' வைக்கப்பட்டுள்ளன.மேலும், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மட்டும் கல்வித் துறையிடம் ஏற்கெனவே தயாராக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியல் விவரம் இன்னும் பெறப்படாமல் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ளன.

எளிய தேர்வு அவசியம்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் புதிய நடைமுறை, குறைபாடுகளை அதிகரிக்கவே வழியை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளிடம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை உடனடியாகப் பெற வேண்டும். மதிப்பெண் தொடர்பான பெற்றோர்களின் அதிருப்தியை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளவுள்ள கல்வி நிறுவனங்கள் பிரச்னையைச் சந்திப்பதை தவிர்க்கவும், இந்த புதிய நடைமுறையை மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண் பட்டியல் வழங்குவதையும் கைவிட வேண்டும்.

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, பிளஸ் 1 குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என மாணவர்களை தேர்வு செய்ய அந்த நேரங்களில் அந்தந்தப் பள்ளிகளில் எளிமையான நுழைவுத் தேர்வுகளை வைத்து, அதில் 80 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் ஏ, 60 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் பி, 50 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் சி என முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கலாம்.

இதேபோல, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றுக்கும் எளிமையான ஒரு தேர்வை நடத்தி, இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கை வழங்குவது சரியாக அமையும் என கருத்துத் தெரிவித்தனர். கல்வித் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
Read More »

Online வகுப்பு பற்றி ஒரு அம்மாவின் கதறல்

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை.
முதல் சிக்கல் எங்களிடம்  கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம்.
டைம் டேபிள் பாத்ததும் தல சுத்திருச்சு. காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள்.
1. நாங்கள் வேலைக்கு எப்படி போவது?
2. திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இருவருக்கெனில் என்ன செய்ய? எத்தனை நாட்கள் எனும் தெளிவும் இல்லை. இருந்தால் வாடகைக்கு வாங்கலாம்.
3. இத்தனை செய்தாலும் பிள்ளைகளுக்கு கனெக்ட் பண்ண தெரியுமா? குறிப்பாக சின்னவளுக்கு. எட்டு வயதுதான்.
4. கூடவே இருப்பது சாத்தியாமா?
5. இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டுவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது.
இதெல்லாம் முதல்கட்ட சிக்கலாக இருந்தது. மிகுந்த குழப்பநிலை
சரி விதிவழி வாழ்க்கை என ஒரு டேப் வாங்கினோம். 1 ஜபி ராம் கொண்ட செகண்ட்ஹாண்ட் டேப் வாங்கினோம். அதன் வேகம் ஆகா..சொல்லி மாளாது. சரி வாங்குனோம். புதுசு எங்கும் ஸ்டாக் இல்லை என ரிச்சி தெரு கைவிரித்தது.
அடுத்தது ஒரு புளூடூத் ஹெட்செட் வாங்கினோம்.
அவரோட அலுவல்களுக்காக அவர் வைத்திருக்கும் லாப்டாப்பையும் இந்த டேபையும் வைத்து போன் நெட்டில் சமாளிக்கலாம் என பைத்தியக்காரத்தனாமகத் திட்டம் போட்டோம்.
காலை எட்டு மணிக்கு கனெக்ட் செய்தால், கூகுள் கிளாசுரூம் சிக்கல்கள் . அதாவது மகனின் ஐடி எல்லாவற்றிலும் ஓபன் ஆகும். மகளுடையது இரண்டாவது டிவைசில் ஓபன் ஆகாது. பெண்கள் பள்ளி என்ற பாதுகாப்பு செட்டிங்கா என தெரியவில்லை. நேரத்திற்கு மீட்டிங்கில் கனெக்ட் ஆகாது. பள்ளி வாட்சப் குழுவில் அனைத்து தாய்மார்களும் தந்தைமர்களும் லபோ திபோ என அடித்துக்கொள்வார்கள்.
அதிலும் டைம் டேபிள் பார்த்து பார்த்து சரியான கிளாசு கோடு கொடுத்து உள்ளே செல்லவேண்டும். எனக்கே மூச்சுமுட்டும்போது பிள்ளைகள் தனியாக என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
அடுத்து நெட் சிக்கல். ஒரு மணிநேரத்தில் இருவருக்கும் சேர்ந்து இரு ஜிபி காலி. ஜியோவில் போட்ட நெட்பேக் சல்சல்லென தீரும். ஏர்டெல் சிறிது தாக்கு பிடிக்கும். ஆக அவரது இருஜிபி என்னுடைய மூன்று ஜிபி என ஓட்டுகிறோம்.
பிராண்ட்பேண்ட் கனெக்சனுக்கு வருந்தி வருந்தி அழைத்தும் யாரும் இப்போவரை வரவில்லை.
மீட்டிங் நடக்க நடக்க சார்ஜ் தீரும், ஹெட்செட் கேக்காது, திரையில் ஏதேனும் பாப்அப் தோன்றும், இவர்கள் கை கால் பட்டு ஏதாவது ஆகும். இவற்றை சரி செய்யணும். கிட்டத்திட்ட நானும் அவர்களோடேயே அமர்ந்தாகணும்.
அத்தனை ஏராளமான சிக்கலுமாக சேர்ந்து கடும் மன உளைச்சல் தந்த்து.
குறிப்பாக எனக்கு. மாற்றி மாற்றி டிவைசுகளை கனெக்ட் செய்வதும், சார்ஜ் செய்வதும், சிக்கல்களை டிரபிள்சூட் செய்வதுமாக மூச்சு திணறியது. இதற்கிடையில் வீட்டுப்பணிகள்.
கடந்தவாரம் ஆபிசுக்கு போயே தீரவேண்டிய தினம். லீவெல்லாம் காலி.  மகனுக்கு படித்து படித்து பாடமெடுத்து அவளையும் கவனி என்று சொல்லி கனெக்சன்களை விளக்கினோம்.
ஆபீசில் அமர்ந்த ஐந்தாவது நிமிசத்துக்கு போன் வருகிறது. இது கனெக்ட் ஆகல அது இது என.. நீ அட்டண்ட் பண்ணவே வேணாம் விடு என்றுவிட்டு வேலையைப்பார்த்தோம். மாலை பள்ளி வாட்சப்குழுவில்  பகிரப்பட்ட வீட்டுப்பாடங்கள், நடத்தப்பட்ட பாடங்கள் மீண்டும் மனச்சுமையை கூட்டின.
இனி நாளை முதல் இருவருக்கும் அலுவலகம். என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. இதெல்லாம் பிள்ளைகளுக்கு சிறுவர்களானதால் தெரியவில்லை. வளர்ந்த பிள்ளைகள் எவ்வளவு உளைச்சலாவார்கள்.
எவ்வளவு பேரால் உடனே சில ஆயிரங்களை செலவு செய்ய இயலும்.?
இதில் பாடமெடுக்கும் ஆசிரியிர்கள் பாடு படு கொடுமை. அவர்களால் அனைத்து பிள்ளைகளையும் ஸ்கிரீனில் பார்க்க இயலவில்லை. ஏதோ கடமைக்கு நடத்துகிறார்கள். அவர்கள் சூழலும் இதுவே. போதிய வெளிச்சம் இல்லை.  லைட்டை போட்டு போட்டு அனைவர் தலைக்குப்பின்னும் ஒளிவட்டம். ஆசிரயர்களின் வீட்டுக் கொடியில் துணி காய்வது, அவர்கள் கணவர்கள் குளித்துவிட்டு லாப்டாப்பின் திரையில் நகர்வது அதை இவர்கள் பகடி்செய்வது என பரிதாபங்கள்.
தோராயமாக நாலு மணிநேரம் நடக்கிறது. உடலென்ன ஆகும்? கண் என்னவாகும்? நாலுமணிநேரம்  இன்டெர்நெட் வைபை என அமர்ந்தால் கதிர்வீச்சு பாதிப்பு வராதா? சார்ஜர்களை கனெக்ட் செய்து பயன்படுத்த பயமாக இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி பிள்ளைகள் வெளியே வேடிக்கை, குறும்பு என கழிக்கிறார்கள். எதுவும் கவனிப்பதில்லை. அவர்கள் கவனம் எளிதில் சிதறுகிறது.
இரு பிள்ளைகள் வீட்டில் ஒருவர் பேசுவது மற்றவருக்கு தொந்தரவு.
நாங்கள் யாரும் வாய்திறவாமல் ஊமைச்சாமியாராய் வலம் வருகின்றோம். டிவியும் மியூட்டில். மீறி சத்தம் வந்தால் டீச்சரே எங்கள் வாயையும் சேர்த்து மூடுகிறார்கள்.
எல்லா கொடுமைக்கும் சேர்த்து ஐம்பதாயிரம் பீசு.
பிள்ளைகள் சொல்வது அட்டெண்டென்சும் பை மேமும் மட்டும்தான்.
இதெல்லாம் தோரயமாக பிள்ளைகளை பாடங்களை மறவாமல் இருக்கச் செய்யலாம்
 அவ்வளவே. எது ஒன்றையும் கற்பிக்கவோ விளங்கவைக்கவோ முடியாது.
இந்திய குடும்பசூழல், பொருளாதரம், வீடு என எதுவும் இணைய வழி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் நிச்சயம் உதவாது. ஒரு சிறு விசயத்தையும் எபுக்டிவாக அவர்களிடம் கொண்டு சேர்க்க இயலாது.
நானெல்லாம் போன் எடுத்தாலே தப்பு தப்பு என வளர்த்திவைத்திருக்கிறேன். அந்த சூழல் அவர்களுக்கு முற்றிலும் புதிது. ஒன்ற இயலாது.
லட்சக்கணக்கில் பணம் வேஸ்ட்.
நேரம் வேஸ்ட்
மன உளைச்சல்.
(ஏன் அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று வராதீர்கள். சோர்வாக இருக்கிறது பேசி பேசி. இப்போதய சூழலை எழுதிருக்கேன்)
Read More »

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?-10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் மாணவர்

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

1. கதிரவனைப் போல்...
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள்.

மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

2. புன்னகை அவசியம்
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.


4. பாடம் வேண்டாம்...
ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.


5. கேள்வி கேளுங்கள்..!
பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

6 . கடைசி ஐந்து நிமிடங்கள்..!
புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி ஐந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்
மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

8. பாடப்புத்தகத்தை தாண்டி..!
வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.


9. உங்கள் பிள்ளை அவர்கள்..!
மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

10. நம்பிக்கையைக் கொடுங்கள்..!
உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.



நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!

- மணிகண்டன்,
லயோலா கல்லூரி மாணவர்.
Read More »

11ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் ஐந்து பாடங்கள் மட்டுமே - தமிழக அரசு உத்தரவு

11-ம்‌ வகுப்பில்‌ இந்த ஆண்டு முதல்‌ 5 பாடங்‌ களே இருக்கும்‌. அதாவது தமிழ்‌, ஆங்கிலத்தை தவிர்த்து மீதியுள்ள 4 பாடங்களில்‌ ஏதாவது 43 பாடங்களை மட்டும்‌ மாணவர்கள்‌ தேர்வு செய்‌ தால்‌ போதும்‌. இது தொடர்பாக பள்‌ ளிக்‌ கல்வித்துறை சார்பில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையின்‌ விவரம்‌ வரு மாறு:- 


மாணவர்களின்‌ மனஅ முத்தத்தையும்‌, உயர்க்‌ கல்வி குறித்த அச்சத்தை யும்‌ போக்கும்‌ வகையில்‌ 17-ம்‌ வகுப்பில்‌ 2020- 2021 ஆம்‌ ஆண்டிலிருந்து புதிய பாடத்திட்ட முறை யை அமல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மொழிப்பா டம்‌ (தமிழ்‌), ஆங்கிலம்‌ ஆகியவற்றை தவிர மீத முள்ள 4 பாடங்களில்‌ முதன்மைப்பாடங்களில்‌ ஏதாவது 3 பாடங்களை மட்டும்‌ மாணவர்கள்‌ தோர்வு செய்தால்‌ போதும்‌. 

அவர்களின்‌ விருப்ப த்‌ இற்கு ஏற்றபடி, பாடத்‌ தொகுப்பை தேர்வு செய்ய பள்ளிகள்‌ அறிவுறுத்த வேண்டும்‌. இந்த புதிய பாடத்தொகுப்புக்கு அனு மதி பெறாமல்‌ எந்த பள்ளி யும்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்தக்‌ கூடாது. தொடர்‌ அங்கீகாரம்‌ காலாவதியான பள்ளிக ஞக்கு புதிய பாடத்‌ தொகுப்புக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில்‌ தெரி விக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்பில்‌ முதல்‌ குரூப்‌ மாணவர்க ளுக்கு தமிழ்‌, ஆங்கிலம்‌ தவிர்த்து கணக்கு, இயற்பி யல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியியல்‌ ஆகிய 4 முதன்மை பாடங்கள்‌ உண்டு. 


இந்த மாணவர்‌ கள்‌ 12-ம்‌ வகுப்பை முடித்த பிறகு பொறியி யல்‌ கல்லூரியில்‌ சேர வே ண்டும்‌ என்றால்‌ உயிரியி யல்‌ பாடம்‌ தேவையி ல்லை. மற்ற 3 பாடங்கள்‌ போதும்‌. ஆகவே பொறி யியல்‌ சேர விரும்பும்‌ மாணவர்கள்‌ இந்த 3 பாடங்களைமட்டும்‌ படித்‌ தால்‌ போதும்‌. அதைப்‌ போல மருத்துவக்‌ கல்லூரி யில்‌ சேர விரும்பும்‌ மாணவர்களுக்கு கணக்கு பாடம்‌ தேவை இருக்காது. அப்படிப்பட்ட மாண வர்கள்‌ கணிதப்பாடத்தை விட்டுக்கொடுக்கலாம்‌. இந்த அம்சங்களை கருத்‌ இல்‌ கொண்டுதான்‌ பாடத்‌ இட்டத்‌&.- ஈரற்றம்‌ கொண்டூஃபோரப்பட . ௨ள்‌ ளது.


Read More »

பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை!


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ மற்றும் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்ற விபரம் அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.
Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல்.


நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More »

Flash News : 4 மாவட்டங்களில் ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு!

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் .

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க தடை!

மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும்!

வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது

அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் அனுமதி
Read More »

மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது - கல்வித்துறை.

*மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை.
Read More »

மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை!


அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து கீழ்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Download GO here...

1. மாணாக்கர்கள் பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை 1 - இல் குறிப்பிட்டுள்ளவாறு பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர , பகுதி- III இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 500 மதிப்பெண்கள் ) அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை II- இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 600 மதிப்பெண்கள் ) தெரிவு செய்து கொள்ளலாம்.

2. மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் உட்பட பகுதி- III இல் உள்ள அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

3. புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே திருவள்ளூர் மாவட்டம் , அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் பார்வை 1 - இல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்தொகுப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் , மேற்படி அரசாணையில் தெவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளியில் நடைமுறைப்படுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பாடத்தொகுப்புகளுடன் கூடுதலாக பிற்சேர்க்கை -1 ன்படி புதிய பாடத்தொகுப்புகளுக்கான அனுமதியினை பெற விரும்பும் தனியார் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்பு தொடங்குவதற்கான உரிய கருத்துருக்களை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியினை பெற்ற பின்னரே சேர்க்கையினை துவக்குதல் வேண்டும் . எக்காரணத்தை முன்னிட்டும் தொடர் அங்கீகாரம் காலாவதியான தனியார் பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்பிற்கான அனுமதி வழங்க இயலாது.

மேலும் எந்த ஒரு தனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் பாடத்தொகுப்பிற்கான அனுமதி கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும் , சில தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை முடித்து விட்டு அக்டோபர் , செப்டம்பர் திங்களில் புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி கோருவதும் , புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமலே பள்ளியை நடத்துவதும் , மாணவர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. எனவே எந்த வகை மேல்நிலைப் பள்ளியாக இருப்பினும் புதிய பாடத்தொகுப்பு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையினை ( New Admission ) நடத்துதல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
Read More »

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Read More »

புதிய தமிழ் பெயர்களை கொண்ட தமிழ்நாடு(THAMIZHNADU) வரைபடம்

Read More »
 

Most Reading

Tags

Sidebar One