Search

வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வியா? மாணவர்களுக்கு பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துமா? இந்து தமிழ் கட்டுரை

Friday 5 June 2020

தமிழகத்தில் உள்ள 58 ஆயிரத்து 734 பள்ளிகள் மூலம் சுமார் 1 கோடி 31 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் சுமார் 67 லட்சம் மாணவர்களும், 12 ஆயிரத்து 918 தனியார் பள்ளிகள் மூலம் சுமார் 65 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர்.

இதில் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவரும் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை ஆன்லைன் வகுப்பைக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், தமிழகத்தில் 50 சதவிகித மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிராமங்களில் போதுமான இணைய வசதியும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்பு எப்படி சாத்தியம் என்பதோடு, ஸ்மார்ட்போன் அதிகமாகப் பயன்படுத்தும்போது பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான பெற்றோர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் சில பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் செயலுக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இதற்கு பெற்றோரிடம் வரவேற்பு உள்ளது. ஆன்லைன் வகுப்பிற்கு யாரும் கட்டணம் செலுத்த வலியுறுத்தவில்லை. 4 மணி நேரம் வகுப்புகள் நடத்துவது தவறு. அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அரசு என்ன வழிமுறைகளை அறிவித்திருக்கிறதோ அதன்படியே தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும்'' என்றார்.



கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், ''கல்வியைப் பற்றிய புரிதல்தேவை. வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வி என்பதை ஏற்க இயலாது. சிறுவர்களால் நீண்ட நேரம் இணைய வழியில் பயிற்றுவிக்க முடியாது. அடிப்படையில் இணையவழிக் கல்வி என்பது பாகுபாடு கொண்டது. 58 சதவகித மாணவர்களிடம் இணைய வசதி கொண்ட செல்போன் இல்லாத நிலையில், எப்படி அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எங்கே வேறு பள்ளிக்குச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்'' என்றார்.

இது தொடர்பாக அரசுப் பள்ளி பாதுகாப்பு மேடை என்ற அமைப்பின் தலைவர் க.திருப்பதி கூறுகையில், ''ஆன்லைன் கல்வி மாணவர் குணங்களை மேலும் திசை திருப்பிவிடப் போகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோதே விழிப்படையாத, விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஆசிரியர் சங்கங்கள் இப்போது மட்டும் என்ன செய்துவிடப்போகின்றன?



மத்திய, மாநில அரசுகள் கரோனா காலத்தை மக்கள் விரோதச் செயல்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளைச் சிதைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின்போது, மாணவர்களை நீண்ட நேரம் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள், செல்போனை கண்ணில் கூட காட்டாதீர்கள் என்று அறிவுரை கூறினர். போதாக்குறைக்கு பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் கொண்டுவரும் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனவும், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தவர்கள் இன்று ஸ்மார்ட் போனில் வகுப்பு நடத்துவது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான வீடுகளில் தந்தையிடம்தான் ஸ்மார்ட்போன் இருக்கும்பட்சத்தில், அந்த வீட்டில் இருக்கும் மாணவர் எப்படி வகுப்பைக் கவனிப்பார். அரசிடம் தெளிவான பார்வை வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவரும், கண்நோய் சிறப்பு சிகிச்சை நிபணருமான நேருவிடம் கேட்டபோது, ''மாணவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொண்டிருந்தால், கண்ணில் வறட்சி ஏற்படும். தூரப்பார்வை மங்கும். ஸ்மார்ட்போனில் கண் அசைவு இருக்காது, இதனால் மூளை நரம்புகள் பாதிக்கக்கூடும். சராசரியாக ஒருவர் அரைமணி நேரம் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தலாம். அதன் பின் கண்ணை மூடி ஓய்வு அளித்துவிட்டு, அதன்பின் தொடரலாமே தவிர தொடர்ச்சியாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக பார்வைக் குறைபாடு ஏற்படும்'' என்றார்
Read More »

ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய தமிழ் துணை எழுத்துகளின் பெயர்கள்

ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய தமிழ் துணை எழுத்துகளின் பெயர்கள்

Read More »

PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி


PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

கம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின் ரைட் கிளிக் செய்து 'ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்' என்று கொடுக்க வேண்டும். அதேபோல் மொபைலில் கூகுள் டாக்குமெண்ட் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு ஃபைல் மேனேஜருக்கு சென்று PDF ஃபைல்களை கூகுள் டாக்குமெண்ட்ஸ் மூலம் திறந்தால் கூகுளே எழுத்தாக மாற்றிக் கொடுத்து விடும். நாம் தனியாக உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது PDF ஃபைல் 50 பக்கங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமாக இருந்தால் ஸ்பிலிட் PDF என்று தேடினால் கூகுளே பிரித்து நமக்கு எழுத்தாக மாற்றி கொடுக்கும்

PDF ஃபைல் ஆங்கில மொழியில் இருந்தால் 100% சரியாக இருந்தால். தமிழ் உள்பட மற்ற மொழிகளாக இருந்தால் 95% சரியாக இருக்கும். ஒருசில திருத்தங்களை மட்டும் நாம் செய்து கொண்டால் போதும்.
Read More »

2.49 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருப்பு!

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்ரல், 30 வரை, 68.03 லட்சம் பேர், அரசின் வேலை வாய்ப்புக்காக, பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 14.87 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள். 15.97 லட்சம் பேர், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணிக்காக, 24 முதல், 35 வயது வரை காத்திருப்போர், 25.57 லட்சம் பேர். 36 வயதில் இருந்து, 57 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 11.53 லட்சம் பேர். மேலும், 58 வயதிற்கு மேற்பட்டோர், 8,481 பேர்.
மாற்றுத்திறனாளிகளில், 45 ஆயிரத்து, 219 பெண்கள் உட்பட, 1.32 லட்சம் பேர், பதிவு செய்து உள்ளனர்.

முதுகலையில், மருத்துவ பட்டதாரிகள், 725 பேர்; பொறியியல் பட்டதாரிகள், 2.21 லட்சம் பேர், வேளாண் பொறியியல் பட்டதாரிகள், 16 பேர்; கால்நடை மருத்துவர்கள், 198 பேர்; சட்டம் பயின்றவர்கள், 170 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள், 2.49 லட்சம் பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்
Read More »

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
Read More »

10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் மற்றும் மாணவர்கள் 9.45க்குள் வர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்
Read More »

பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி!

பொதுத்தேர்வு - போக்குவரத்து வசதி:

ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர 7.30 மணி, 8 மணி மற்றும் தேர்வு முடிந்தபின் 1.45 மணி, 2.15 மணி ஆகிய நேரங்களில் சென்னையில் அனைத்து தடங்களிலும் தலா ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One