Search

ISRO Recruitment: இஸ்ரோவில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே

Wednesday 24 August 2022

 Recruitment in ISRO:  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சதீஷ் தவான் விண்வெளி மையம், ஆசிரியர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது.  இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம்  PGT, TGT மற்றும் முதன்மை ஆசிரியர் பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

apps.shar.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 28 ஆகஸ்ட் ஆகும்.

PGT, TGT மற்றும் முதன்மை ஆசிரியர் பதவிகளுக்கான ISRO ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள். முதன்மை, முதுகலை ஆசிரியர்கள் (ISRO PGT,TGT, Primary Teacher Recruitment 2022) இந்த ஆட்சேர்ப்பின் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

MSED (MSc.Ed), BSED (BSc.Ed) பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பு இயக்கம் தொடர்பான விவரங்கள் இவை....

ISRO ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள்
மொத்த காலியிடங்கள்- 19
முதன்மை ஆசிரியர் - 5 
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) - 2 பணியிடங்கள்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (இந்தி) - 2 பணியிடங்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) - 2 பணியிடங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) - 1 காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (உயிரியல்) - 1 காலியிடம்
முதுகலை ஆசிரியர் (வேதியியல்) - 1 காலியிடம்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) - 1 காலியிடம்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) - 1 காலியிடம்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (உயிரியல்) - 1 காலியிடம்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (PET அஞ்சல்) - 1 காலியிடம்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (PET பெண்) - 1 காலியிடம்

ISRO ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022க்கான வயது வரம்பு
PGT பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். TGT பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18-35 வயதிற்குள் இருக்க வேண்டும். முதன்மை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18-30க்குள் இருக்க வேண்டும். 

ISRO ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022க்கான சம்பளம்

PGT- இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.47,600- 1,51,100 சம்பளம் வழங்கப்படும்.
TGT- இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு மாதம் ரூ.44,900-1,42,400 சம்பளம் வழங்கப்படும்.
முதன்மை ஆசிரியர்- இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு மாதம் ரூ.35,400-1,12,400 சம்பளம் வழங்கப்படும்.

ISRO Teacher Vacancy 2022 Direct Link


Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »

போர்ட் இந்தியா நிறுவனத்தில் Data Scientist வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

 ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) நிறுவனம் காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு காலியாக உள்ள டேட்டா சயின்டிஸ்ட் பதவிக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர். தகுதியானவர்கள் 22.08.2022 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்போர்ட் இந்தியா நிறுவனம் (Ford India Private Limited)
பதவிகளின் பெயர்Data Scientist
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கைபல்வேறு இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிதகுதியானவர்கள் 22.08.2022 முதல் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்சென்னை
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MBA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்https://www.india.ford.com/
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.

படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்

படி 4 : “Data Scientist” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.

படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.

அறிவிப்பினை காண / விண்ணப்பிக்க

https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=JobDetails&jobid=595350#jobDetails=595350_5526

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை... முழு விவரம்

 கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
பதவிகளின் பெயர்Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security Posts
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை
Psychologist2
Social Worker2
Data Entry Operator1
Hospital Worker4
Sanitary Worker4
Security Posts2
வேலை வகைதமிழக அரசு வேலை , ஒப்பந்த அடிப்படையில் பணி (contract basis)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி27/08/2022
அறிவிப்பு வெளியான தேதி21/08/2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிமுதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள்
சம்பள விவரம்
Psychologistரூ. 18000
Social Workerரூ. 18000
Data Entry Operatorரூ. 10000
Hospital Workerரூ. 5000
Sanitary Workerரூ. 5000
Security Postsரூ. 6300
கல்வித் தகுதி8 வது தேர்ச்சி - ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தகுதி மாறுபடும்.
அதிகாரப்பூர்வ தளம்https://coimbatore.nic.in/
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியிடத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

படி 1 : அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.

படி 2 : அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

படி 3 : விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள்

குறிப்பு :

விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப்பட வேண்டியவை :

  • சமீபத்தில் எடுத்த கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைக்க வேண்டும்.
  • பிறப்புச் சான்றிதழ் , கல்வித் தகுதி சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும்.
  • ஆதார் கார்டு , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , குடியுரிமை சான்றிதழ் , சாதிச் சான்று , நன்னடத்தை சான்று , ஆகியவை இணைக்க பட வேண்டும்.

அறிவிப்பினை காண / விண்ணப்ப படிவத்தை காண

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/08/2022082121.pdf

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை ... ரூ.26,000 சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டுவரும் பல் மருத்துவ மையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 03/09/2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பதவிகளின் பெயர்Dental Surgeon
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை01
வேலை வகைதமிழக அரசு வேலை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி03/09/2022
அறிவிப்பு வெளியான தேதி18/08/2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிநிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.
சம்பள விவரம்ரூ.26,000
கல்வித் தகுதிஅரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BDS படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்து இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்https://www.nagapattinam.nic.in/
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under talking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம். 1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்கள் மாவட்ட துணை சுகாதார இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

4. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in

5. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

அறிவிப்பினை காண /விண்ணப்ப படிவம் பெற

https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/08/2022082311.pdf

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

Read More »
 

Most Reading

Tags

Sidebar One