Search

பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் .. தமிழக அரசு அதிரடி .!!

Friday 19 November 2021

 பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்ல உள்ளோம் என்றார்.

மேலும் பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், மாணவர்கள் எந்த எண்ணை புகார் கொண்டு, புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது எனவும், இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One