Search
கொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு
Tuesday 10 March 2020
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 44 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வைரஸ் பரவியதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கேரளாவில் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் கேரளா அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது இதனை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment