Search

உடல் நலம் பாதித்தால் பள்ளிக்கு வர வேண்டாம்' - பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

Wednesday 11 March 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் பரவாமல் தடுக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்னை, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்றவை, இந்த நோயின் அறிகுறிகள். எச்சில் வழியாக, இந்த வைரஸ் பரவும்; கைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் வழியாகவும் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, கொரோனா பரவல் தடுப்பு முறைகளை, பள்ளி மாணவர்களும், பெற்றோரும் கையாள வேண்டும். இருமல், தும்மல் உள்ள மாணவர்கள், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கைகளை, சோப்பால் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.


நோய் அறிகுறி உள்ள நபரிடம் இருந்து, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், வெளியூர் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One