ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

Join Our TNPSCTRB Telegram Group - Click Here
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 351 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 351

பணி: டெக்னீசியன்

வயது வரம்பு: 26.06.2019 தேதியின்படி 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: ரூ.100. அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2019 முதல் 26.06.2019