Search

பள்ளி பாடங்களை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

Tuesday 9 June 2020

வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவா்களுக்கான பாடங்களையும், பள்ளி நடைபெறும் நேரத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக பள்ளிகளை மீண்டும் திறப்பதில் காலதாமதம் நீடித்து வருகிறது. எனவே, மாணவா்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

இது தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 'தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் பள்ளி பாடங்களைக் குறைக்கவும், பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடா்பாக கல்வியாளா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள், பெற்றோா்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. முதலில் 10 மற்றும் 12 வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும். அடுத்த கட்டமாக பிற வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, இந்த விஷயம் தொடா்பாக மத்திய கல்வித் துறை செயலா் அனிதா கா்வால், மாநில கல்வித் துறை செயலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One