Search

பாடத் திட்டங்களைக் குறைக்க அரசு அமைத்த குழுவில் தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட புதிய குழுவை அரசு அமைக்க கோரிக்கை!

Friday 26 June 2020


கொரோனோ பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்த பரிந்துரைகளை அளிக்க 18 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதில் 13 பேர் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீதமுள்ள 5 பேரில் ஒருவர் UNICEF அமைப்பின் உறுப்பினர் மற்ற 4 பேர் கல்வியாளர்கள். இதில் கல்வியாளர்களாக இடம்பெற்றுள்ள நால்வரும் தனியார் சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நடவடிக்கை குறித்து குழந்தைகள் செயற்பாட்டாளர் மற்றும்  கல்வியாளர் தேவநேயனிடம் கேட்டபோது, ஆசிரியர்களையும் கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் கல்வியாளர்களாக நியமிக்காமல் மாணவர்களோடு தொடர்பில்லாத தனியார் பள்ளி நிர்வாகிகளை அரசு நியமித்துள்ளது” என்றார்.

மேலும், பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளால் சரியான ஆலோசனைகளை முன்வைக்க இயலாது என்று கூறிய தேவநேயன், தமிழகத்தில் 60 சதவிகிதம் அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அல்லது பணியாற்றிய ஆசிரியர்கள் ஒருவர் கூட குழுவில் இல்லாதது எவ்வாறு சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு அமைத்துள்ள 18 பேர் கொண்ட குழுவில் தகுதியான கல்வியாளர்கள் இல்லாததால் குழுவை கலைத்துவிட்டு தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட புதிய குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One