Search

கணிதம், வணிகவியல் தேர்வு வினாக்கள் கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் வேதனை

Monday 9 March 2020

கணிதம் மற்றும் வணிகவியல் பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கேள்விக்குறியாகும் நிலையில் வினாத்தாள் வடி வமைப்பு உள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 17 மையங்களில் நடக்கிறது. நேற்று அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு, கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வு நடந்தது.புதிய பாடத்திட்டம் என்பதால் மாணவர்கள் குழப்பமான மனநிலையில் தேர்வை எதிர்கொள்கின்றனர். கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், நேரடியாக இல்லாமல், கேட்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கூறியதாவது:தீபிகா ஸ்ரீ:தமிழ் எளிமையாகவும், ஆங்கிலம் சிறிது கடினமாக முறையிலும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் கணிதப்பாடத்துக்கு அதிகமான பயிற்சி எடுத்திருந்தோம்.



இருப்பினும், இப்படி ஒரு வினாக்கள் எந்த பகுதியில் உள்ளன என்பதே தெரியாத வகையில், மிக கடினமாக தேர்வு இருந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் என அனைத்து பகுதிகளும், வினாக்கள் குழப்பும் வகையில் தான் கேட்கப்பட்டுள்ளன.திவ்யா:காலாண்டு, அரையாண்டு, என எந்த தேர்வுகளிலும் கேட்கப்படாத, நாங்கள் எதிர்பார்க்காத வினாக்கள் தான் பொதுத்தேர்வில் கேட்டுள்ளனர். தேர்ச்சி அடைந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் தேர்வை எழுதி முடித்தோம். வினாக்களை புரிந்து கொள்வதற்கே பாதிநேரம் போய் விட்டது.


அடுத்து வரும் தேர்வுகள் மேலும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.வணிகவியல் தேர்வுசத்யப்ரியா:கலைப்பிரிவு பாடங்கள் வழக்கமாக, மற்ற பிரிவுகளை விட ஓரளவு எளிமையாக வரும். ஆனால், வணிகவியல் தேர்வில், வினாக்கள் ஒன்றும் எந்தெந்த பாடங்கள் என்பதே தெரியவில்லை. ஐந்து மதிப்பெண் வினாக்களின் கருத்துகளையும் புரிந்துகொள்ள முடியவில்லை.தேவி:வணிகவியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் தான் அதிகமாக முழுமதிப்பெண்களை பெற முடியும். ஆனால், ஒருமதிப்பெண் வினாக்களும் குழப்பமாகவே கேட்கப்பட்டிருந்தன. அடுத்தடுத்து வரும் தேர்வுகள் எளிமையாக வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One