Search

யோகா தெரியுமா உங்களுக்கு? பயிற்சி மையம் அமைத்து ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

Wednesday 28 June 2023

 நமது உடல், மனம் மற்றும் ஆன்மீக நலத்தை பேணும் பண்டையக் கால உடற்பயிற்சி முறையான யோகா, இன்றைய நவீன காலத்திலும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. தற்போதைய வாழ்க்கை முறைக்கு யோகா அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

இன்றைக்கும் ஜிம் செல்வதை விட யோகா பயிற்சிக்கு செல்வதுதான் டிரெண்டிங்காக உள்ளது. சமீப காலமாக யோகா சென்டர் அமைக்கும் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. உலகளவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இந்த யோகா பிசினஸ் இருக்கிறது.

பலரும் யோகா பயிற்சி மீது விருப்பம் கொண்டிருப்பதால், யோகா சென்டர் அமைப்பது நல்ல தொழிலாக வளர்ந்திருக்கிறது. பலருக்கும் யோகா சென்டர் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும், எப்படி அனுமதி வாங்க வேண்டும் போன்ற விவரங்கள் தெரியாமல் இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு உதவவே பிரான்சைஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு பிரேமானந்த் யோகா, ஸ்கில் யோகா, யோக் ட்ரீ போன்றவை யோகா சென்டர் பிரான்ச்சைஸ் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.

அனுமதி மற்றும் உரிமை :  யோகா சென்டர் அமைப்பதற்கான முறையான அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது. யோகா மையம் அமைப்பதற்கு முன்பே அதற்குண்டான அனுமதி மற்றும் உரிமத்தை வாங்கிவிட வேண்டும்.

வருடத்திற்கு ரூ.9 லட்சத்திற்கு மேல் வருமானம் வருவதாக இருந்தால், இந்தியாவில் யோகா சென்டர் தொடங்க சேவை வரி உரிமம் மிகவும் அவசியம். ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் வந்தால் 14 சதவிகிதம் சேவை வரி கட்ட வேண்டும். ஒரு சில பிரான்சைஸ் நிறுவனங்கள் இந்த தொகையும் சேர்த்தே வாங்கிவிடுகின்றன. யோகா மையம் அமைக்க எவ்வுளவு முதலீடு தேவை ?  

பெரும்பாலான யோகா சென்டர்கள் குறைந்த முதலீட்டில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இடத்தின் அளவைப் பொருத்தே நாம் முதலீடு செய்யும் தொகை மாறுபடும். யோகா சென்டர்களை நீங்கள் தனியாகக் கூட ஆரம்பிக்க வேண்டாம். ஏதாவது பிரான்சைஸ் மூலம் நீங்கள் யோக சென்டர்களை அமைக்கலாம். இதற்கு குறைந்த செலவே ஆகும்.

கொஞ்சம் தீவிரமாக பல திறன்களை கற்றுக் கொடுக்கும் யோகா சென்டர்கள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு 5,00,000 ரூபாய் முதல் 7,00,000 ரூபாய் வரை செலவாகும். இதற்கு 500 சதுர அடியில் திறந்தவெளி அரங்கம் வேண்டும். மற்ற யோகா பயிற்சிகளுக்கு 1500 சதுர அடியில் இடம் தேவைப்படும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One