Search

பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Thursday 9 July 2020



புதுவை பல்கலைக்கழகத் தில் 178 பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர் பணியிடம் புதுச்சேரி மத்திய பல்க லைக்கழகத்தில் உள்ள 48 துறைகளில் பேராசிரியர் பணியில் 44 காலியிடங்களும் , இணை பேராசிரியர் பணியில் 68 , உதவி பேராசிரியர் பணியில் 66 என மொத்தம் 178 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணி யிடங்களை நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை pondiuni.edu.in என்ற இணையதளம் வழியாக வருகிற 24 - ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

கட்டண விவரம்:

பொது பிரிவினர் , பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்ப கட்டணமாக ரூ .1,000 செலுத்த வேண்டும். பொது பிரிவினர் , பொருளா தாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினர் , இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் விண்ணப் பம் கட்டணமாக ரூ .500 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் , முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு , மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கு விண்ணப்ப கட்ட ணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 - ம் ஆண்டு பேராசிரியர் பணியிடத்திற்காக பல்க லைக்கழக நிர்வாகம் விண்ணப்பம் கோரிய போது விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தகவல்களை தற்போது புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு recruitment.pondiuni.edu.in. என்ற புதுவை பல்கலைக்க ழக இணையதள முகவரியை காணவும் என பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது இணைய தளம் வழியாக தெரிவித்துள் ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One