Search

ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகள் - யு.ஜி.சி வெளியீடு

Wednesday 8 July 2020

ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகளை, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகளிலும், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வு; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

செப்டம்பரில் இவை நடக்கும்.இந்த தேர்வுகளை நடத்தும் அனைத்து தேர்வு அமைப்புகளும், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும்அடையாள அட்டைகளை, 'இ - பாஸ்' ஆக பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வு மையத்தின் அனைத்து இடங்களையும், கிருமி நாசினி தெளித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், உரிய தரமான முக கவசம் அணிய வேண்டும்.

தேர்வு மைய வளாகம், தேர்வு அறை போன்றவற்றில், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.கழிப்பறைகளில், கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததும், இருக்கைகள் மற்றும் மேஜைகளை, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One