Search

மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் வழங்கி - சமூக நல ஆணையர் -செயல்முறைகள்

Wednesday 8 July 2020



கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மே 2020 கோடை விடுமுறை நாட்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உலர் உணவாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது . துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு மே மாதத்திற்கு 3100 கிராம் அரிசியும் , 1200 கிராம் பருப்பும் , உயர் துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு 4650 கிராம் அரிசியும் 1250 கிராம் பருப்பும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே , மேற்காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்த மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

1. சத்துணவு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான அரிசி மற்றும் பருப்பு ஆகியவை மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனடிப்படையில் உரிய அட்டவணை தயார் செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் . அரிசி மட்டும் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு பருப்பு இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தேவைப்பட்டியல் அளித்து , உடன் பெற்று பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கூடுதல் பருப்புக்கான செலவினம் உணவூட்டுச் செலவினத்திலிருந்து வழங்கப்படவேண்டும் .

2. உணவூட்டுச் செலவினத் தொகையிலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு உரிய ஒதுக்கீடு பெறப்பட்டால் மட்டுமே பட்டியல் வாயிலாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு பெற்று வழங்க இயலும் . எனவே , உணவூட்டுச் செலவினத்திலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு மறுமதிப்பீடு செய்யக் கோரி அரசுக்கு முன்மொழி அனுப்ப ஏதுவாக கொள்முதல் செய்யப்படும் கூடுதல் பருப்புக்கான தொகை துல்லியமாக கணக்கிடப்பட்டு கணக்குத் தலைப்பு வாரியான விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் .

3. உலர் உணவுப் பொருட்கள் வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் உதவியுடன் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

4. அரசாணையின் இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக செயல்திட்டம் வகுத்து , நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

5. ஒவ்வொரு சத்துணவு மையம் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் விபரம் , கையொப்பம் பெற்ற ஒப்புகை பதிவேடுகளின் நகல்கள் , புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாவட்ட அளவில் வைக்கவேண்டும் . அரசால் கோரப்படும்போது உடனடியாக வழங்கப்பட வேண்டும் .

6. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( சஉதி ) மற்றும் கூடுதல் கல்வி அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும்போது பார்வையிடுதல் வேண்டும் . பெற்றோர் மற்றும் பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிதல் வேண்டும் .

7. கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி , முகக்கவசம் அணிந்து அவ்வப்போது சோப்பினால் கைகளை கழுவிக் கொண்டு சரியான அளவுகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் .

8. பயனாளிகள் அல்லது பெற்றோர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

Full Proceedings - Download here.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One