Search

TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் குறையும்… காரணம் இதுதான்! ரிசல்ட் எப்போது?

Friday 19 August 2022

  TNPSC Group 4 VAO exam cut off details and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 161 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 156க்கு மேலும், SC பிரிவினருக்கு 152க்கு மேலும், BCM பிரிவினருக்கு 153க்கு மேலும், SCA பிரிவினருக்கு 149க்கு மேலும், ST பிரிவினருக்கு 137 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 155 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 154க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 146க்கு மேலும், SCA பிரிவினருக்கு 144க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One