Search

வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Thursday 28 May 2020

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு கேள்வியில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால், 3 மதிப்பெண் போனசாக வழங்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது.


ஒவ்வொரு பாட வாரியாகவும் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளை ஆய்வு செய்து, தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைகளை திருத்தினர். இதில், தவறான விடை குறிப்புகள் மற்றும் பிழையான கேள்விகளை, தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்தனர். 


அதன்படி, வேதியியல் தேர்வில், புரதத்தின் வகைகள் குறித்த கேள்வியில், ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் பிழையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பள்ளி கல்வித் துறையின் தேர்வு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, அந்த கேள்விக்கு, தமிழ் வழி மாணவர்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால், அவர்களுக்கு, 3 மதிப்பெண் போனசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One