ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!

Join Our TNPSCTRB Telegram Group - Click Here


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 68 சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : சட்ட எழுத்தர் (Law Clerks)

காலியிடங்கள்: 68


தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். சம்பளம்: மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2019