Search

விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

Saturday 23 March 2019



விண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டெனிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.


வருமான வரித்துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்தெந்த பணியிடங்கள் காலியாக உள்ளன, என்ன தகுதி, கடைசி தேதி போன்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பணியிடம் 1: வருமான வரி ஆய்வாளர்

காலிப்பணியிடங்கள் - 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்


வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள்

சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 வரை

பணியிடம் 2: வருமான வரி அதிகாரி உதவியாளர்

காலிப்பணியிடம்: 18
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டத்துடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பணியிடம் 3: சுருக்கெழுத்தாளர் கிரேடு

காலிப்பணியிடங்கள் - 08
கல்வித் தகுதி: 12வது தேர்ச்சி, நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.


பணியிடம் 1: மல்டி டாஸ்க்கிங் ஊழியர்

காலிப்பணியிடங்கள் - 08
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குள்
சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை

விளையாட்டு தகுதி:

விண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.


பணியாளர் தேர்வு முறை:

மேலே கூறியுள்ள காலிபணியிடங்களுக்கு விளையாட்டுத் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை வைத்துத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31/03/2019

முழு விவரம்: https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One