Search

TNPSC | TRB | TET| GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

Wednesday, 21 November 2018

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3. ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6. நாளமில்லா சுரப்பிகள் என்பவை?
நாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன
7. ஹெபேரின் என்பது?
ரத்தம் உறைதலை தடுப்பது
8. எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்?
9;3;3;1
9. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்?
டிசம்பர் 1-ம் தேதி
10. தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது?
சுதேசமித்திரன்
11. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக?
வ.உ.சிதம்பரனார்
12. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2006
13. முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
14. 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு?
ஜெர்மனி
15. பொருத்துக
வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி.க - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
16. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்?
ஸ்ரீபெரும்புதூர்
17. தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது?
கலைமாமணி விருது
18. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
19. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று?
காவடி ஆட்டம்
20. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்
21. இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு
22. மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்
23. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்
24. சாங்கியம் என்பதன் பொருள் எண்
25. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி
26. மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்
27. தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்
28. ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்
30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
31. நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
32. சமீபத்தில் சரத்து 356ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
பீகார்
33. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்? 1944
34. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
குழந்தை இறப்பு விகிதம்
35. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது?பற்றாக்குறைவான உற்பத்தி திறனால்
36. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? லக்கடா வாலா கமிட்டி
37. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு? 62.4 மில்லியன்
38. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு? 75 சதவீதம்

1 comment

 

Most Reading

Tags

Sidebar One