மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட 496 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 496 

நிர்வாகம்: மத்திய ஆயுத காவல் படை (சிஆர்பிஎஃப்) 
பணி: மருத்துவ அதிகாரி - 317 
பணி: ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 175 
பணி: சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 04 
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி அனுபவம்: 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:www.crpf.gov.in அல்லது www.recrultment.ltbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2019