இது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

Join Our TNPSCTRB Telegram Group - Click Here
வங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியே தனது இலக்காக கொண்டுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.

பணியிடம்: நாடு முழுவதும்

பணி: Probationary Officer


காலியிடங்கள்: 2000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020

வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers  என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.