ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு


தமிழகத்தின் நாமக்கல் முக்கியமான மாவட்டங்களுள் ஒன்று. கைத்தறி மற்றும் இதர தொழில் துறை நகரான நாமக்கல்லில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 57 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 4, சீனியர் பெய்லியில் 1, ஜூனியர் பெய்லியில் 10, டிரைவரில் 1, ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டென்டில் 11, மசால்சியில் 6, நைட் வாட்ச்மேனில் 10, ஸ்வீப்பரில் 4, சானிட்டரி ஒர்க்கரில் 3ம் சேர்த்து மொத்தம் 57 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். டிரைவர் பிரிவுக்கு ஏழாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டருக்கு பத்தாம் வகுப்பும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏழாம் வகுப்பும், மசால்சி, நைட் வாட்ச்மேன், ஸ்வீப்பர், சானிட்டரி ஒர்க்கர் ஆகிய பிரிவுகளுக்கு தமிழில் எழுதப் படிக்கும் திறமையும் தேவை. முழுமையான தேவைகளை இணையதளத்தில் அறிந்து அதன்படி விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை இணையதளத்தில் கேட்டபடி இணைத்து விண்ணப்பிக்கவும்.

The Principal District Judge, Principal District Court, Namakkal 637 003

கடைசி நாள்: 2019 ஏப்., 29.

விபரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/india/tn/namakkal/recruit