Search

பி.எஸ்சி., படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

Saturday 13 April 2019


நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி., 1961ல் இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பு பள்ளிப்படிப்பு தொடர்புடைய கல்வி சார்ந்த நிறுவனமாகும். பள்ளிப்படிப்பில் தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நடைமுறைப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கல்வி அமைப்பில் லேப் அசிஸ்டென்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் லேப் அசிஸ்டென்ட் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பட்டப் படிப்பை இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணிதத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : ஸ்கில் டெஸ்ட் வாயிலாக தேர்ச்சி இருக்கும். ஸ்கில் டெஸ்டிற்கு செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் செல்ல வேண்டும்.

தேர்வு மையம் : Board Room, 1st Floor, Janaki Ammal Khand, NCERT, New Delhi.

தேர்வு நாள் : இயற்பியலுக்கு 25.4.2019, வேதியியலுக்கு 24.4.2019, உயிரியலுக்கு 23.4.2019 மற்றும் கணிதத்துக்கு 22.4.2019

விபரங்களுக்கு: www.ncert.nic.in/announcements/vacancies/pdf_files/desm_1april.pdf
 

Most Reading

Tags

Sidebar One